Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பாடச் சுருக்கம் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்
   Posted On :  07.01.2024 04:29 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

பாடச் சுருக்கம் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

மனித செரிமான மண்டலமானது வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல், மலக்குடல் மற்றும் மலத்துளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாடச் சுருக்கம்

மனித செரிமான மண்டலமானது வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல், மலக்குடல் மற்றும் மலத்துளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றுடன் செரிமான துணை சுரப்பிகளான, உமிழ் நீழ் சுரப்பிகள், இரைப்பை சுரப்பிகள், பித்தப்பையுடன் கூடிய கல்லீரல், கணையம் மற்றும் சிறுகுடல் சுரப்பிகளும் காணப்படுகிறது.

செரித்தல் நிகழ்வானது உணவு உட்கொள்ளுதல், உட்கொண்ட உணவு சிறு சிறு மூலக்கூறுகளாக சிதைக்கப்படுதல், அவ்வாறு செரிக்கப்பட்ட மூலக்கூறுகள் இரத்தத்திற்குள் உட்கிரகிப்படுதல், உறிஞ்சப்பட்ட உணவு செல்களின் பகுதிப்பொருட்களாதல் மற்றும் செரிக்கப்படாத பொருட்கள் வெளியேற்றப்படுதல் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது.

உணவானது, அதிக அளவில் தேவைப்படும் பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவாக தேவைப்படும் நுண்ணுட்டச் சத்துகளைக் கொண்டது. அவசியமான ஊட்டச்சத்துகளை நம் உடலால் உற்பத்தி செய்யமுடியாது. ஆகவே அவை நாம் உண்ணும் உணவின் மூலமே பெறப்பட வேண்டும். கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் பெரு ஊட்டச்சத்துக்களாகும். வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் நுண்ணுட்டச்சத்துக்களாகும்.

நீரானது வளர்சிதை மாற்ற நிகழ்கவுகளில் முக்கிய பங்கு வகிப்பதுடன், உடலை நீரிழப்பிலிருந்தும் பாதுகாக்கிறது. குடல்பாதையானது பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டிடுண்ணிப் புழுக்களால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகும். இவற்றின் தொற்றால் ஏற்படும் பாதிப்பிற்கு பெருங்குடல் உட்சுவர் அழற்சி என்று பெயர். இதனால் பெருங்குடலின் உட்புறபடலம் வீக்கமடைகிறது. வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது. குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சி காலத்தில் ஏற்படும் புரதக்குறைபாடு, அவர்களுக்கு மராசுமஸ் மற்றும் குவாஷியார்கர் போன்ற புரதக்குறைப்பாட்டு நோய்களை ஏற்படுகிறது.



இணையச்செயல்பாடு

செரிமான மண்டலம் Let's Digest


செரித்தல் செயல்முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!

படிகள்

1. கீழ்க்கண்ட உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி "Interactive Digestive System" என்னும் பக்கத்தினைத் திறக்கவும். "View Digestive System" சொடுக்கவும்.

2. செரிமான மண்டலத்தின் பாகங்களுள் ஏதாவது ஒரு பாகத்தின் மீது சுட்டியை வைத்துச் சொடுக்கினால் அந்தப் பாகத்தினைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

3. "Explore the digestive system" என்னும் பொத்தானைச் சொடுக்கி வாய் முதல் மலவாய் வரையுள்ள பாகங்களின் செயல்முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

4. செயல்பாட்டின் போது கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடை அளித்தால் அடுத்த படிநிலைக்குச் செல்லலாம்.


Digestive System's உரலி

http://www.open.edu/openlearn/nature-environment/natural-

history/explore-your-digestive-system

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Activity and summary - Human Digestion and Absorption in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : பாடச் சுருக்கம் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்