Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

அளவீடு | இயற்பியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Physics : Measurement

   Posted On :  18.09.2023 10:01 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

VI. மிகச்சுருக்கமாக விடையளிக்க

1. அளவீடு என்றால் என்ன?

விடை:

ஒரு பொருளின் பண்பு அல்லது நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கும் முறை.

 

2. SI அலகு - வரையறு.

விடை:

• SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளைவிட நவீன மயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை.

உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

 

3. SI அலகின் விரிவாக்கம் என்ன?

விடை:

International system of units. (பன்னாட்டு அலகு முறை)

 

4. மீச்சிற்றளவு - வரையறு.

விடை:

ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு.

 

5. திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்?

விடை:

திருகு அளவியில், திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல்.

6. 2 மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?

விடை:

1. முடியாது. அளவுகோலால் கம்பியின் விட்டத்தை கண்டறிய முடியாது. 2. கம்பியின் விட்டத்தை திருகு அளவி கொண்டு கண்டறிய முடியும்.

 

VII. சுருக்கமாக விடையளி

1. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?

விடை:

1. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் அலகு குறிப்பிடும்போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கக்கூடாது. (.கா) newton, henry

2. குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small Letter) எழுத வேண்டும். (.கா) metre என்பது m மற்றும் kilogram என்பது kg.

3. அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது. (.கா) 10kg என்பதை 10kgs என எழுதக்கூடாது.

 

2. நிலையான அலகு முறையின் தேவை என்ன?

விடை:

முந்தைய காலங்களில், வெவ்வேறு அலகு முறைகள் வெவ்வேறு நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டது.

இதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலக அளவிலான அலகு முறைக்கான அவசியம் ஏற்பட்டது.

ஆகவே, 1960ஆம் ஆண்டு பாரிஸ் நகரில், எடைகள் மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டில் SI அலகு முறையானது (பன்னாட்டு அலகுமுறை) உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது.

 

3. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

விடை:

நிறை:

1. அடிப்படை அளவு.

2. எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு எனவே இது ஸ்கேலர் அளவாகும்.

3. இடத்திற்கு இடம் மாறாது.

4. இயற்பியல் தராசினால் அளவீடு செய்யப்படுகிறது.

5. இதன் அலகு கிலோகிராம்.

எடை:

1. வழி அளவு.

2. எண் மதிப்பு மற்றும் திசைப் பண்பு கொண்டது,. இது வெக்டர் அளவாகும்.

3. இடத்திற்கு இடம் மாறுபடும்.

4. இது சுருள்வில் தராசு கொண்டு அளவீடு செய்யப்படுகிறது.

5. இதன் அலகு நியூட்டன்.

 

4. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

விடை:

மீச்சிற்றளவு = முதன்மைக் கோலின் ஒரு மிகச்சிறிய பிரிவின் மதிப்பு

/ வெர்னியர் கோலின் மொத்த பிரிவுகளின் எண்ணிக்கை

 -

VIII. விரிவாக விடையளி.

1. ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய்?

விடை:

திருகு அளவியைப் பயன்படுத்தி உள்ளீடற்ற தேனீர் குவளையின் தடிமனைக் கண்டறிதல்.

முதலில் திருகு அளவியின் புரியிடைத் தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்

திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே உள்ளீடற்ற தேனீர் குவளையை வைக்கவும்

பற்சட்ட அமைப்பின் உதவியால் திருகைத் திருகி தேனீர் குவளையை நன்றாகப் பற்றிக் கொள்ளுமாறு செய்யவும்

புரிக்கோல் காட்டும் அளவையும் (PSR) புரிக்கோலின் வரை கோட்டுடன் இணையும் தலைக்கோல் பிரிவையும் (HSC) குறித்துக்கொள்ளவும்

தேனீர் குவளையின் தடிமன் = P.S.R. + திருத்தப்பட்ட H.S.R. அதாவது P.S.R + (HSC + ZC) × L.C

தேனீர் குவளையின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.

அளவீடுகளை அட்டவணைப்படுத்தி கடைசிக் கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி தேனீர் குவளையின் தடிமனைக் கொடுக்கும்.

சுழிப்பிழை இல்லை

சுழித்திருத்தம் தேவையில்லை.


சராசரி = ……………….. மி.மீ

தேனீர் குவளையின் தடிமன் = .............. மி.மீ.

 

2. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

விடை:

1. திருகு அளவி உதவியுடன் ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை கணக்கிடலாம்.

2. முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழிதிருத்தம் ஆகியவற்றை கணக்கிடவும்.

3. திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைத்து புரிக்கோல்

அளவு (PSR) மற்றும் தலைக்கோல் பிரிவு (HSC) ஆகியவற்றை குறிக்கவும்.

4. நாணயத்தின் தடிமன் = PSR + (HSC+ ZC) × LC

5. நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.


சராசரி மதிப்பே நாணயத்தின் தடிமன் ஆகும்.

 

IX. கணக்கீடுகள்

1. இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 × 1015 மீ எனவும் எழிலன் 9.46 × 1012 கி.மீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.

விடை:

இனியன் கூற்று சரி

ஆண்டு என்பது = 9.46 × 1015 மீ

ஒரு ஆண்டு = 365 × 24 × 60 × 60 = 3.153 ×107

அதாவது ஒரு ஒளி ஆண்டு = (3.153 × 107× (3 × 108)

= 9.46 × 1015 மீ

 

2. ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போது முதன்மை அளவுகோலின் அளவு 7செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக.

தீர்வு :

முதன்மை அளவு MSR = 7 செ.மீ = 70 மி.மீ

வெர்னியர் ஒன்றிப்பு (VC) = 6

ஆரம் = ?

இரப்பர் பந்தின் விட்டம் = முதன்மை அளவு + (வெர்னியர் ஒன்றிப்பு × மீச்சிற்றளவு) - சுழிப்பிழை

MSR + [(VC.× LC)-ZE]

= 70 + (6 × 0.1) -0

= 70 + 0.6

= 70.6 மி.மீ

இரப்பர் பந்தின் ஆரம் = விட்டம் / 2

= 70.6 / 2

= 35.3 மி.மீ2

 

3. ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிக்கோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.

தீர்வு:

புரிக்கோல் அளவு = 1 மி.மீ

தலைக்கோல் ஒன்றிப்பு = 68

தடிமன் = ?

தலைக்கோல் அளவு = (தலைக்கோல் ஒன்றிப்பு : மீச்சிற்றளவு)

= 68 × 0.01

= 60.68 மி.மீ

தடிமன்  = புரிக்கோல் அளவு + தலைக்கோல் அளவு

= 1 + 0.68

= 1.68 மி.மீ

 

4. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

தீர்வு:

எடை= 98 நியூட்டன்

நிறை = ?

எடை = நிறை × புவிஈர்ப்பு விசை

எடை = நிறை × 9.8

நிறை × 9.8 = 98

நிறை (m) = 98 / 9.8 = 10 கி.கி

விடை:

நிறை (m) = 10 கி.கி


பிற நூல்கள்

1. Units and measurements - John Richards, S. Chand publishing, Ram nagar, New Delhi.

2. Units of Measurement - Past, Present and Future. International System of Units - Gupta, S. V. eBook ISBN 978-3-642-00738-5 DOI 10.1007/978-3-642-00738-5

3. Complete physics(IGCSE) - Oxford University press, New York

4. Practical physics - Jerry. D. Wilson – Saunders college publishing, USA.

 

இணைய வளங்கள்

http://www.npl.co.uk/reference/measurementunits/ 

http://www.splung.com/content/sid/1/page/units 

http://www.edinformatics.com/math_science/units.htm| 

https://www.unc.edu/~rowlett/units/dictA.html 

https://study.com/academy/lesson/standard-unitsof-measure.html

 

கருத்து வரைபடம்



இணையச்செயல்பாடு

வெர்னியர் அளவுகோல்

வெர்னியர் அளவுகோலை இயக்கிப் பார்ப்போமா!

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் செயலியை நிறுவிக் கொள்க.

படி 2. பொருளின் நீளத்தை அளவிடுவதற்காக, நீல நிறத்தில் உள்ள வெர்னியர் அளவியை நகர்த்தி, கணக்கிட வேண்டிய பொருளினை அந்த அளவீடு தொடுமாறு வைக்க வேண்டும் .

படி 3. Length of Object என்ற இடத்தில் கணக்கிட்ட அளவீட்டினை உள்ளிட வேண்டும், பின்னர் Check My Answer என்ற பொத்தானை அழுத்தினால் உள்ளீடு செய்யப்பட்ட அளவீடு சரியா அல்லது தவறா எனத் தெரிய வரும்.

படி 4. விடை தவறு என்றாலோ, அல்லது கணக்கிடும் முறையை மேலும் அறிந்து கொள்ளவோ Teach Me என்ற பொத்தானை அழுத்தினால் உரிய விடை / முறை கிடைக்கும்.

உரலி : https://play.google.com/store/apps/details?id=org.friendsonly.vernier

Tags : Measurement | Physics | Science அளவீடு | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Measurement : Answer the following questions Measurement | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - அளவீடு | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு