Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Physics : Magnetism and Electromagnetism

   Posted On :  18.09.2023 10:18 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. சுருக்கமாக விடையளி

1. ஃப்ளெமிங்கின் இடக்கை விதியைக் கூறு

விடை:   

இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டிவிரல், நடு விரல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது,

மின்னோட்டத்தின் திசையை - நடுவிரலும், சுட்டுவிரல் - காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால், பெருவிரலானது - கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது.


2. காந்தப் பாய அடர்த்தி - வரையறு.

விடை:   

காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி ஆகும்.

அலகு Wb/m2 ஆகும்.

 

3. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

விடை:   

i) நிலைக்காந்தம்

ii) கம்பிச்சுருள் 

iii) கார்பன் தூரிகை

iv) திசைமாற்றி.

 

4. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

விடை:   


NS - இரு துருவங்கள் நிலைக் காந்தம்

ABCD - செவ்வக வடிவ கம்பிச்சுருள்

S., S, - நழுவு வளையங்கள்

B., B, - தூரிகைகள்.

 

5. DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக.

விடை:   

அதிக தொலைவுகளுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை ஏற்று மின்மாற்றிகளைக் கொண்டு எடுத்துச் செல்லாம்.

ஆற்றல் இழப்பு மிகக்குறைவு.

நேர்திசை மின்னோட்டத்தை அவ்வாறு அனுப்ப இயலாது.

மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற இயலும்.

நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது.

பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலை மாறுதிசை மின்னோட்டத்தினால் உருவாக்க முடியும்.

 

6. ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக.

விடை:   

ஏற்று மின் மாற்றி:

1. குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுகிறது

(ie) (Vs >Vp)

2. இதில் முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகம்.

 

இறக்கு மின் மாற்றி:

1. உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுகிறது.

(ie) (Vs < vp)

2. முதன்மைச் சுருளிலுள்ள கம்பிச் கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவு.

(ie) (Ns < Np

 

7. ஒருவானொலிப்பெட்டியில், அது வீட்டின் முதன்மைச்சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?

விடை:   

வானொலிப் பெட்டியில் இறக்கு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது திருத்தப்பட்ட மாறுதிசை மின்னோட்டம் மின்கல அடுக்கின் மின்னோட்டத்தை சமன் செய்கிறது.

எனவே வானொலி வீட்டின் முதன்மைச் சுற்று மற்றும் மின்கல அடுக்கின் மூலம் இயங்குகிறது.

 

8. ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.

விடை:   

கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது, கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை (e.m.f.) உற்பத்தி செய்யமுடியும்.

ஒரு மூடிய சுற்றுடன் இணைக்கப்பட்ட காந்தப்பாயத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக தூண்டப்பட்ட மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் எனப்படும்

 

VI. விரிவாக விடையளி

1. DC மோட்டாரின் தத்துவம், அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.

விடை:   


மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி மின்மோட்டார் ஆகும்.

தத்துவம் :

காந்தப்புலத்தில் வைக்கப்படும் ஒரு கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியை இயங்கச் செய்கிறது.

அமைப்பு:

• ABCD என்ற கம்பிச்சுருள் நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.

கம்பிச்சுருளின் முனைகள் பிளவு வளைய திசைமாற்றியில் பொருத்தப்பட்டுள்ளது.

மின் கடத்தாப் பொருள்களாலான பிளவு வளையத் திசைமாற்றியின் உட்பகுதி அச்சில் இணைக்கப்பட்டுள்ளது.

கார்பன் தூரிகைகள் X, Y-பிளவு வளைய திசைமாற்றியில் வெளிப்புறச் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காந்தப்புலத்திலிருந்து பெறப்படும் மின்னோட்டம் தூரிகை × வழியாக கம்பிச்சுருள் A B C D க்குள் சென்று தூரிகை Y வழியாக மின்கல அடுக்கினை அடைகிறது.

செயல்படும் விதம்:


கடத்தி AB யிலுள்ள மின்னோட்டம் A யிலிருந்து B க்குச் செல்கிறது.

கடத்தி CD யில் உள்ள மின்னோட்டம் C யிலிருந்து D க்குச் செல்கிறது.

இதற்கு எதிர் திசையில் கடத்திப்பிரிவின் AB மின்னோட்டம் செல்கிறது.

ஃபிளெமிங் இடக்கை விதிப்படி ABCD என்ற பிரிவுகளில் மின்னோட்டம் எதிரெதிர் திசைகளில் செல்லும்போது அதன் இயக்கமும் எதிரெதில் திசையில் அமையும்.

கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் விசை எதிரெதிர் திசையில் அமைவதால் அவை சுழல்கின்றன.

மின்னோட்டம் ABCD வழியாக இருந்தால் கம்பிச்சுருள் முதலில் கடிகார திசையிலும், பின் எதிர் திசையிலும் சுழலும்.

கம்பிச் சுருள் ஒரே திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது சுழற்சியின் முதல் பாதியில் ABCD யிலும் பின் பாதியில் DCBA வழியாகவும் பாய வேண்டும்.

மின்னோட்டத்தின் திசையை மாற்ற பிளவு வளைய திசைமாற்றி பயன்படுத்தப்படுகிறது.

பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X, Y உடன் இணைந்திருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை.

ஆனால் சுருள் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் ஏதாவது ஒன்று கார்பன் தூரிகைகள் X மற்றும் Y உடன் தொடர்பு கொள்ளும்

இந்த மின்னோட்ட திருப்புதல் ஒவ்வொரு அரை சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.

 

2. மின் மாற்றியின் இரு வகைகளை விளக்கவும்.

விடை:   

மின்மாற்றி:

குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும், உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி.

ஏற்று மின்மாற்றி:

ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி ஏற்று மின்மாற்றி. அதாவது (Vs > Vp).

ஒரு ஏற்று மின்மாற்றியில், முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகம். (Ns>Np)

மின்னழுத்தம் அதிகரிக்கிறது, மின்னோட்டமானது குறைகிறது.

இறக்கு மின்மாற்றி:

ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி இறக்கு மின்மாற்றி.

அதாவது (Vs < vp).

ஒரு இறக்கு மின்மாற்றியில், முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட

துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். (Ns< Np)

மின்னோட்டமானது அதிகரிக்கிறது, மின்னழுத்தம் குறைகிறது.

 

3. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

விடை:   


S,, S, - நழுவு வளையங்கள்

B., B, - தூரிகைகள்

ABCD - செவ்வக வடிவ கம்பிச்சுருள்

NS - நிலைக்காந்தம்.



பிற நூல்கள்

1. Advanced Physics by Keith Gibbs – Cambridge University Press.)

2. Priciples of physics (E×tended) – Halliday Resnick and Walker. Wiley publication, New Delhi.

3. Fundamental University Physics - M. Alonso, E. J. Finn Addisson Wesley (1967)

 

இணைய வளங்கள்

www.physicsabout.com

http://science.howstuffworks.com

http://arvindguptatoys.com/films.html


கருத்து வரைபடம்


 

இணையச்செயல்பாடு  

காந்தவியல்

காந்தத்தின் பண்புகளை அறிந்து கொள்ள பின்வரும் செயல்பாட்டினைச் செய்து பார்க்க

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் செயல்பாட்டின் இணையப் பக்கத்திற்குச் செல்க. அதில் "Magnet and Compass" என்கிற விருப்பத்தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

படி 2. இதில் ஆறு செயல்பாடுகளையும், மூன்று காணொளிகளையும் பார்க்க முடியும்.

படி 3. வழங்கப்பட்டுள்ள ஆறு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி, காந்தவியலின் செயல்முறையை, ஒப்புருவாக்கலையும் புரிந்து கொள்ளவும்.

படி 4. கொடுக்கப்பட்டுள்ள மூன்று காணொளிகளில் ஏதேனும் ஒன்றைச் சொடுக்குவதன் மூலம், ஒலிபெருக்கிகளுக்கும் காந்தத்திற்குமான கருத்தமைவைப் புரிந்து கொள்ளவும். இதர செயல்பாடுகளையும், காணொளிகளையும் முயன்று பார்க்கவும்.

உரலி: http://www.edumedia-sciences.com/en/node/75-magnetism

Tags : Magnetism and Electromagnetism | Physics | Science காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Magnetism and Electromagnetism : Answer the following questions Magnetism and Electromagnetism | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்