Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

அண்டம் | இயற்பியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Physics : Universe

   Posted On :  17.09.2023 09:42 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

IV. சுருக்கமாக விடையளி.

1. சூரிய மண்டலம் என்றால் என்ன?.

விடை:

சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்தது.

இதில் கோள்கள், வீண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவை உள்ளது.

 

2. சுழற்சித் திசைவேகம் வரையறு.

விடை:

கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவர அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம்.

 

3. சுற்றுக்காலம் வரையறு.

விடை:

சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு கோள்கள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.

 

4. துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இரு வகைகள் யாவை?

விடை:

ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக் கோள் எனப்படும்.

துணைக்கோளின் இரு வகைகள்

1. இயற்கைத் துணைக்கோள் - நிலவு

2. செயற்கைத் துணைக்கோள் - செயற்கைக்கோள்

 

5. 'உட்புறக் கோள்கள் ' குறிப்பு வரைக.

விடை:

உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் உட்புறக் கோள்கள்.

இவற்றின் புறப்பரப்பு திண்மப் பாறை மேலேட்டால் ஆனது. இவை நிலம் சார்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.

•  இவற்றின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உள்ளன.

 

6. வால் விண்மீன்கள் என்றால் என்ன?

விடை:

அதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருட்களே வால் விண்மீன்கள் எனப்படும்.

இவற்றின் சுற்றுக் காலம் அதிகம்.

சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் உருவாகும்.

பல வால் விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை.

(.டு) ஹாலி வால் விண்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும்.

 

7. கெப்ளரின் விதிகளை - வரையறு.

விடை:

1. முதல் விதி - நீள் வட்டங்களின் விதி

சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.

2. இரண்டாம் விதி - சம பரப்புகளின் விதி

கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.

3. மூன்றாம் விதி - ஒத்திசைவுகளின் விதி

எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.

 

8. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

விடை:  

பூமியில் மட்டும் தான் உயிர்வாழ்வதற்கான சூழல் உள்ளது.

சூரியனிலிருந்து சரியான தொலைவு.

நீர் ஆதாரம்

சரியான வெப்பநிலை

சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம்

ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையே பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகளாகும்.

 

V. விரிவாக விடையளி.

1. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

விடை:  

- சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.

 அவையாவன.

1. புதன்

சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள்.

பகலில் அதிக வெப்பமாகவும், இரவில் அதிக குளிராகவும் இருக்கும்.

சூரியனை வேகமாக சுற்றும் கோள்.

சுற்றுக்காலம் 87.97 புவி நாள்கள். சுழற்சிக்காலம் 58.65 புவி நாள்கள்

2. வெள்ளி

சூரிய மண்டலத்தில் புவியின் அளவை ஒத்த கோள்.

வானில் மிகப் பெரிய பிரகாசமாக தெரியும் கோள். அதிக வெப்பநிலை கொண்ட கோள்.

சுற்றுக்காலம் (1 ஆண்டு ) - 224.7 புவி நாள்கள். சுழற்சிக்காலம் (1 நாள்) - 243 புவி நாள்கள்.

3. பூமி

உயிர்வாழத் தகுதியான கோள்.

சரியான தொலைவு, சரியான வெப்பநிலை,

வளிமண்டலம், ஓசோன் படலம் கொண்டது.

சுற்றுக்காலம் - 365.25 நாள்கள்

சுழற்சிக்காலம் - 23.93 மணி

4. செவ்வாய்

சிவப்புக் கோள் என அழைக்கப்படுகிறது.

துணைக் கோள்கள் டீமோஸ், போபோஸ்.

சுற்றுக்காலம் - 687 புவி நாள்கள்

சுழற்சிக்காலம் - 24 மணி 37 நிமிடம் 22 வினாடி

5. வியாழன்

மிகப்பெரிய கோள்.

இதற்கு 3 வளையங்கள் 65 நிலவுகள் உள்ளன.

•  சுழற்சிக்காலம் (1 நாள்) - 9 மணி 55 நிமிடம் 30 வினாடி

சுற்றுக்காலம் (1 ஆண்டு ) - 11.362 புவி வருடங்கள்  

6. சனி

மஞ்சள் நிறத்தில் காணப்படும். இரண்டாவது பெரிய கோள் ஆகும்.

• 60 நிலவுகள் உள்ளன.

சுற்றுக்காலம் - 29.46 ஆண்டு

சுழற்சிக்காலம் - 10.7 மணி

7. யுரேனஸ்

குளிர்மிகு வாயுப் பெருங்கோள் ஆகும்.

சுற்றுக்காலம் - 84 புவி ஆண்டு

சுழற்சிக்காலம் - 17.2 மணி

8. நெப்டியூன்

பச்சை நிற விண்மீன் போலத் தோன்றும்.

• 248 ஆண்டுகளுக்கு ஒரு முறை புளுட்டோ அதன் சுற்றுப்பாதையை கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகள் தொடரும்.

• 13 நிலவுகள் உள்ளன.

 

2. பன்னாட்டு விண்வெளி நன்மைகளை விவரி.

விடை:  

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பெறலாம்.

• ISS க்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அழைப்பு (WRS) மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) சுத்தமான குடிநீர் இல்லாததால் ஈராக்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை மீட்டு மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளனர்.

கண்ணைத் தொடரும் தொழில் நுட்பம்:

இது பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது.

இக்கருவி கண்ணின் நிலையை துல்லியமாக தொடர்கிறது. பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.

தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சையால் அகற்ற இயலாத கட்டிகளை நீக்கவும்,

உடல் திசு ஆய்வு செய்ய, தானியங்கி கைகள் உதவுகின்றது.

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுகின்றது.

மிகத் துல்லியமாக உடல் திசு ஆய்வுகளை செய்யும்.

மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மீயொலி கருவிகள் மேலும் பல பணிகளை செய்கின்றன.

 

 3. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன?

விடை:  

கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்ற அதற்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் சுழற்சித் திசைவேகம் எனப்படும்.

புவிக்கு அருகிலிருந்தால் துணைக்கோளின் வேகம் அதிகமாகும்.

• 200 கி.மீ. உயரத்தில் உள்ள செயற்கைக் கோள் கிட்டத்தட்ட 27400 கி.மீ./மணி வேகத்திற்கு சற்று அதிக வேகத்தில் இயங்கினால் 24 மணி நேரத்தில் புவியை சுற்றி வரும்.

புவியின் சுழற்சிக்காலம் 24 மணி எனவே செயற்கைக் கோள் புவிப்பரப்பிற்கு மேல் ஒரே இடத்திலிருப்பது போல் தோன்றும்.

புவியைப் பொருத்து ஒரு நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்களுக்கு புவிநிலை செயற்கைக் கோள்கள் என்று பெயர்.


சுற்றியக்க திசைவேகம் V = GM / (R+h)

G - ஈர்ப்பியல் மாற்றி = 6.67×10-11 நிமீ2 கி.கி-2

M - புவியின் நிறை = 5.972 × 1024 கி.கி

R - புவியின் ஆரம் = 6371 கி.மீ.

h - புவிப்பரப்பிலிருந்து செயற்கைக் கோளின் உயரம்

 

VI. கருத்துரு வினாக்கள்

1. சில விண்மீன்கள் நீல நிறமாகவும், சில சிவப்பு நிறமாகவும் தோன்றுவது ஏன்?

விடை:

வெப்பமான விண்மீன்கள் நீல நிறமாக தோன்றும், குளிர்வான விண்மீன்கள் சிவப்பு நிறமாகத் தோன்றும்.

 

2. கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுழல்வதை எவ்வாறு தொடர்ந்து பராமரிக்க முடிகிறது?

விடை:

சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை மூலம் கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுழல்வதை பராமரிக்க முடிகிறது.

 

3. ஏன் சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் எனக் கருதப்படுகின்றன?

விடை:

சில செயற்கைக் கோள்கள் புவியை 24 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன. புவியின் சுழற்சிகாலமும் 24 மணி.

எனவே புவியைப் பொருத்து ஒரே நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்கள் புவிநிலை செயற்கைக் கோள்கள் என கருதப்படுகின்றன.

 

4. பூமியில் 60 கிகி. எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக் கொண்டிருப்பது ஏன்?

விடை:

சூரியனின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையை விட 28 மடங்கு அதிகம்.

எனவே புவியில் 60 கி.கி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கி.கி. இருப்பான்,

60 × 28 = 1680 கி.கி.'

 

VII. கணக்கீடுகள்

1. புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்தில், உள்ள சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தைக் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். (R - 6370 கிமீ எனக் கொள்க).

(குறிப்பு : மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)

தீர்வு :

G = 6.67 × 10-11 நி.மீ2 கி.கி-2

R= 6370 கி.மீ.

h = 36000 கி.மீ.

M = 5.972 × 1024 கி.கி

கோளின் வேகம் V = | GM / R+h

V = 6.67 ×1 0-11 × 5.972×1024 / (6370+36000) × 103

= 39.8512 × 1013 / (42370) × 103

= 39.8512 × 1013  / (4.2370) × 107

= 9.4055 × 106

V = 3.06 × 103 மீ/வி-1

விடை:

V = 3.06 × 103 மீ/வி-1

 

2. பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.

தீர்வு :

h = 400 × 103 மீ

R = 6371 × 103 மீ

V = 7.616 × 103 மீவி-1

π = 22 / 7 = 3.14

T = 2 π (R+h) / V

= 2 × 3.14 × (6371+400) /  7616

= 2 × 3.14 × 6771 / 7616

= 5.583 × 103 விநாடி அல்லது 5583 விநாடி

(5583 / 60 = 93.05)

T = 93.05 நிமிடங்கள்

விடை :

T = 93.05 நிமிடங்கள்


பிற நூல்கள்

1. Big Bang - By Simon Singh.

2. What are the stars - By G. Srinivas.

3. An introduction to Astronomy - By Baidyanath Basu.

 

இணைய வளங்கள்  

https://www.space.com/52-the-expandinguniverse-from-the-big-bang-to-today.html 

https://phys.org/news/2016-06-star-black-hole. html


கருத்து வரைபடம்


 

இணையச்செயல்பாடு

அண்டம்

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்திச் செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும். "JAVA Script" தேவையெனில் அனுமதிக்கவும்.

படி 2. வலப்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கேல் அளவையில் உள்ள முள்ளை நகர்த்தியோ சுட்டியின் உதவியுடனோ அண்டத்தைப் பெரிதாக்கிக் காணவும்.

படி 3. குறிமுள்ளை வடக்கு - தெற்காக (மேலும் - கீழும்) நகர்த்தி விண்மீன்களின் கட்டமைப்பை உற்று -நோக்குக.

படி 4. மிக நெருக்கமாகச் சூரிய மண்டலத்தைக் காண பெரிதாக்கவும் மேலும் விண்மீன் மண்டலத்தில் தோன்றும் விண்பொருள்களின் பெயரை அறிந்துகொள்க.

உரலி: http://stars.chromeexperiments.com/ or Scan the QR Code.

Tags : Universe | Physics | Science அண்டம் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Universe : Answer the following questions Universe | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - அண்டம் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்