Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | வேதியியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Chemistry : Matter Around Us

   Posted On :  17.09.2023 10:46 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் :

V. மிகச் சுருக்கமாக விடையளி

1. பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன?

விடை :

பரப்புக் கவரப்படும் பொருள் :

ஒரு , பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் ஒட்டி கொள்ளும் பொருளாகும்

பரப்புக் கவரும் பொருள் : ஒரு பொருளை தன் மேற்பரப்பில் கவரப்படும் பொருளாகும்.

 

2. பதங்கமாதல் - வரையறு.

விடை :

சில திண்மப்பொருட்களை வெப்பப்படுத்தும் போது, அவை திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுதல்,

.கா. உலர் பனிக்கட்டி

 

3. டெட்டாலின் சிறு துளிகளை நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?

விடை :

டெட்டாலில் உள்ள திரவத் துளிகள் நீர் மூலக் கூறுகளுக்கிடையே விரவுவதால் கலவை கலங்கலாக மாறுகிறது.

 

4. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு

விடை :

1. ஒன்றாகக் கலக்கும் திரவங்கள்- விடை - பின்னக் காய்ச்சி வடிக்கும் குடுவை குழாய்

2. ஒன்றாக கலவாத திரவங்கள் - விடை பிரிபுனல்

 

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கலவைகளின் பகுதிப் பொருட்களைப் பெயரிடுக.

 i) பனிக்கூழ்

ii) எலுமிச்சை பானம்

iii) காற்று

iv) மண் கலவை பகுதிப் பொருட்கள்

விடை :


 

VI. சுருக்கமாக விடையளி

1. பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்?

(பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்)

விடை :

தூய பொருட்கள் - பனிக்கூழ், இரும்பு, பாதரசம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், நீர்.'

 

2. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் 21% கன அளவு உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?

விடை :

ஆக்ஸிஜன் ஒரு தனிமம்

 

3. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?

விடை :

1. 22 காரட் தங்க பதக்கத்தில் 91.6% தங்கம் மற்றும் 8.4% இதர உலோகங்கள் உள்ளது.

2. எனவே, இது ஒரு தூய்மையற்ற பொருள்.

 

4. மரத்தூள், இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?

விடை :

1. காந்தப்பிரிப்பு முறையில் கலவையில் உள்ள இரும்புத் துகள்களை முதலில் பிரிக்க வேண்டும்.

2. மரத்தூள் மற்றும் நாப்தலீனை பதங்கமாதல் முறையில் பிரிக்கலாம்.

 

5. ஒருபடித்தானக்கரைசல், பலபடித்தான கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை :

ஒரு படித்தான கரைசல்

1. பகுதிப்பொருட்கள் சீராகக் கலந்து ஒரே நிலைமையில் உள்ளன.

2. பருப்பொருட்களுக்கு எல்லைப் பிரிப்பு இல்லை.

3. பகுதிப்பொருட்கள் கண்களுக்குப் புலப்படாது.

4. உம்: உப்புக்கரைசல், எலுமிச்சைச் சாறு

பலபடித்தான கரைசல்

1. பகுதிப்பொருட்கள் சீரற்ற முறையில் கலந்து  ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளன.

2. பகுதிப்பொருட்களுக்குள் எல்லைப் பிரிப்பைக் காண இயலும்.

3. பகுதிப்பொருட்கள் கண்களுக்குப் புலப்படும்.

4. .ம்: நீரில் சுண்ணாம்பு, நீரில் மணல்

 

VII. விரிவாக விடையளி

1. தனிமங்களுக்கும், சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

விடை :

தனிமங்கள்

1. ஒரே வகையான அணுக்களைக் கொண்டது.

2. வேதியியல் முறையில் எளிய பொருட்களாக உடைக்க இயலாது.

3. தூய்மையானவை

4. குறியீடுகளால் குறிப்பிடப்படுகின்றன.

5. .ம்: இரும்பு (Fe), காப்பர் (Cu)

சேர்மங்கள்

1. ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது.

2. வேதியியல் முறையில் எளிய பொருட்களாக உடைக்க இயலும்.

3. தூய்மையற்றவை 

4. வாய்பாடுகளால் குறிப்பிடப்படுகின்றன.

5. உம்: நீர் (H2O), கார்பன் டை ஆக்ஸைடு (CO2)

 

2. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரை படத்துடன் விளக்குக.

விடை :


1. டிண்டால் விளைவு

வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது, ஒளிக்கற்றையின் பாதையைப் பார்க்கமுடிகிறது. இந்நிகழ்வேடிண்டால் விளைவு எனப்படும்.

இந்நிகழ்விற்கு காரணம்: கூழ்மத்துகள்களால் ஒளியானது சிதறடிக்கப்படுவதே ஆகும்.

2. பிரௌனியன் நகர்வு

கூழ்மக் கரைசல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்க்கும்போது, கூழ்மத்துகள்கள் அங்கும் இங்குமாக ஒழுங்கற்ற முறையில் சீராகவும் வேகமாகவும் நகர்வதைக் காணமுடிகிறது. இந்நகர்வே, பிரௌனியன் நகர்வு எனப்படும்.

காரணம்: பரவல் ஊடக மூலக்கூறுகள் பரவிய நிலைமை மூலக்கூறுகளை சமநிலையற்ற முறையில் தாக்குவதேயாகும்.

 

3. எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

(பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்.)

விடை :


கொடுக்கப்பட்ட கலைவையிலிருந்து எண்ணெய், நீரை பிரித்தல்:

1. பிரிபுனலில் நீர் மற்றும் எண்ணெய் கலவையை ஊற்றி கலக்கவும்.

2. சில நிமிடங்களுக்குப் பின் நீர் கீழடுக்காகவும், எண்ணெய் மேல் அடுக்காகவும் மிதக்கிறது.

3. பிரிபுனலின் நிறுத்துக் குழாயைத் திறந்து நீர் மற்றும் எண்ணெய்

தனித்தனி கலன்களில் சேகரிக்கவும்.

நீரைக்காய்ச்சி உப்பைப் பிரித்தல்:

1. உப்புக் கலந்த நீரை குடுவையில் எடுத்துக் கொதிக்கும் வரை நிறுத்துக்குழாய் சூடுபடுத்தவும்.

2. ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய நீராக சேகரிக்கப்படுகிறது.

3. உப்பு குடுவையின் அடியில் தங்கிவிடுகிறது.


பிற நூல்கள்

1. A Textbook of Physical Chemistry, K.K. Sharma & L.K. Sharma S.Chand publishing.

2. Materials, Matter and Particles A Brief History By (author): Michael M Woolfson (University of York, UK)

3. Suresh S, Keshav A. “Te×tbook of Separation Processes”, Studium Press (India) Pvt. Ltd.

 

இணைய வளங்கள் கருத்துபடம்

1. http://www.worldscientific.com/ worldscibooks/10.1142/P671

2. http://www.chemteam.info/ChemTeamIndex Html

3. http://www.chem4kids.com/files/matter_ solution2.html

4. https://www.youtube.com/ watch?v=loakplUEZYQ

 

கருத்துபடம்



Tags : Matter Around Us | Chemistry | Science நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Matter Around Us : Answer the following questions Matter Around Us | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்