Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பயன்பாட்டு வேதியியலின் பயன்கள்
   Posted On :  15.09.2023 03:45 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்

பயன்பாட்டு வேதியியலின் பயன்கள்

நம்மைச் சுற்றி பயன்பாட்டு வேதியியலின் பயன்கள் பல உள்ளன. அவற்றை தவிர்க்க இயலாது.

பயன்பாட்டு வேதியியலின் பயன்கள்

 நம்மைச் சுற்றி பயன்பாட்டு வேதியியலின் பயன்கள் பல உள்ளன. அவற்றை தவிர்க்க இயலாது.

பயன்பாட்டு வேதியியல் நம் அன்றாட வாழ்க்கைக்கு எண்ணற்ற செயற்கைப் பொருட்களைக் கொடுத்துள்ளது.

பயன்பாட்டு வேதியியல் நமது சமுதாயத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தருகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பைக் கொடுத்து உலகம் முழுவதும் முக்கிய பங்காற்றுகின்றது.

நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்பாட்டு வேதியியலின் பொருள்கள் அதிகமாக பயன்படுகின்றன.

 


நினைவில் கொள்க

நானோ வேதியியல் என்பது நானோ அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இது நானோ பொருட்களையும் நானோதொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் வேதியியல் பயன்பாடுகளைக் குறிக்கும் பிரிவு ஆகும்.

 1 நானோ மீட்டர் = 1/1,000,000,000 மீட்டர் ஆகும்.

மருந்தாக்க வேதியியல் மருந்துகளின் தயாரிப்பு, வேதி இயைபு, தன்மை, செயல்பாடு, கட்டமைப்பு, உயிரினங்களின் மீது அவற்றின் தாக்கம், அவற்றின் சேமிப்பு நிலை மற்றும் சிகிச்சைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றியதாகும்.

மின் வேதியியல் என்பது வேதியியலின் ஒரு கிளை ஆகும் இது மின் ஆற்றல் மற்றும் வேதி மாற்றத்திற்கு இடையேயான தொடர்பைப் பற்றி கற்பது ஆகும்.

கால்வானிக் மின்கலம் என்பது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

சாயங்களைப் பற்றி படிப்பதே சாய வேதியியல் ஆகும். இவை செயற்கைச் சாயங்களின் அமைப்பு, தயாரிப்பு மற்றும் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

கதிரியக்க வேதியியல் என்பது கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் கதிரியக்கத் தன்மையற்ற ஐசோடோப்புகள் ஆகியவற்றின் வேதியியலைப் பற்றிய பாடப்பிரிவு ஆகும்.

 வேளாண் வேதியியல் என்பது வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் அறிவைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தி செய்வதைப் பற்றியதாகும்.

உணவு வேதியியல் என்பது உணவின் வேதியியல் ஆகும். இது பகுப்பாய்வு, செயலாக்கம், தொகுத்தல், பொருட்கள் பயன்பாடு, உயிரி எரிசக்தி ஆகியவற்றோடு உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தையும் உள்ளடக்கியது.

தடயவியல் வேதியியல் என்பது வேதியியலின் கொள்கைகள், நுட்பங்களை குற்றங்களை ஆராய்வதற்கு பயன்படுத்துவதாகும்.

 

A-Z சொல்லடைவு

மயக்க மருந்துகள் : நோயாளியின் உணர்ச்சிகளை முழுமையாக தளர்வாக்க கொடுக்கப்படும் மருந்து.

காய்ச்சல் நிவாரணிகள் : இவை காய்ச்சலைக் குறைக்க பயன்படுகின்றன.

புரைத்தடுப்பான்கள் : நுண்ணுயிரிகளை அழிப்பதற்கோ, அவற்றைக் கட்டுபடுத்துவதற்கோ பயன்படும் வேதிப்பொருள்.

வேதி மருத்துவம் : மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழிக்க சில கரிம வேதிகளைப் பயன்படுத்தும் வேதி மருத்துவம்.

மருந்து : நோயைக் குணப்படுத்தப் பயன்படும் வேதிப்பொருள்.

மின் வேதிக்கலம் : வேதி ஆற்றலை மின் ஆற்றலாகவும் மின் ஆற்றலை வேதி ஆற்றலாகவும் மாற்ற பயன்படும் சாதனம்.

மின்பகுளி : மின்பகுளி என்பது உலோக உப்புக்களின் நீரிய கரைசல். இது மின்சாரத்தைக் கடத்தக் கூடியது.

நானோ வேதியியல் : பொருட்களை அணுமற்றும் மூலக்கூறு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று அவற்றின் பண்புகளை மாற்றமடையச் செய்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக மாற்றும் அறிவியல் பயன்பாடு.

மருந்தாக்க வேதியியல் : மருந்துகள் மற்றும் அதன் மேம்பாடு பற்றி கற்கும் இயல்.

9th Science : Applied Chemistry : Applications of Applied Chemistry in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல் : பயன்பாட்டு வேதியியலின் பயன்கள் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்