Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 5 : Digestion and Absorption

   Posted On :  07.01.2024 02:41 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும்.

) பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது.

) கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்.

) கணையநீர் லிப்பிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது

) என்டிரோகைனேஸ் இரைப்பைநீர் சுரப்பைத் தூண்டுகிறது.

விடை: ) என்டிரோகைனேஸ் இரைப்பைநீர் சுரப்பைத் தூண்டுகிறது.


2. கைம் (இரைப்பைப்பாகு) என்பது......?

) கொழுப்பைக் கொழுப்புத் துகள்களாக மாற்றும் செயல்,

) கிளிசராலில் உள்ள / மைசெல் பொருட்களை கொழுப்புத்துகள்களாக  மாற்றும் செயல்.

) இரைப்பைநீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்.

) நடுக்குடல் பகுதியில் முழுமையாகச் செரித்த உணவு நீர்மத்தை உருவாக்குதல்.

விடை: ) இரைப்பைநீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்.


3. கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்

) ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின் 

) கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின் 

) கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்

) இன்சுலின் மற்றும் குளுக்ககான்

விடை: ) கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்


4. ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

) கல்லீரல் - கணைய நாளம் 

) பொதுப் பித்த நாளம்

) கணைய நாளம்

) சிஸ்டிக் நாளம்

விடை: ) கல்லீரல் - கணைய நாளம் 


5. சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.

) குளுக்கோஸ்

) அமினோ அமிலங்கள்

) சோடியம் அயனிகள்

) மேற்கூறிய அனைத்தும்

விடை: ) சோடியம் அயனிகள்


6. கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?

) பெப்சின் - இரைப்பை

) ரென்னின் - கல்லீரல்

) டிரிப்ஸின் சிறுகுடல்

) டயலின்வாய்குழி

விடை: ) ரென்னின் - கல்லீரல்


7. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது 

) குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள் 

) இரைப்பை சுவர் 

) பெருங்குடல்

) குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

விடை: ) குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள் 


8. கொழுப்பு செரிமானத்தின் முதல் படி

) பால்மமாதல்

) நொதி செயல்பாடு

) லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்

) அடிபோஸ்திசுக்களில் சேமிப்பு

விடை: ) பால்மமாதல்


9. எண்டிரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது

) பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்

) டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்

புரதங்களைப் பாலிபெப்டைடுகனாக மாற்றுதலில்

) காசினோஜனை காசினாக மாற்றுதலில்

விடை: ) டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்


10. எந்த இணை தவறானது?

) வைட்டமின் D – ரிக்கெட்ஸ்

) தயமின்பெரிபெரி

) வைட்டமின் K - மலட்டுத்தன்மை

) நியாசின்பெலக்ரா

விடை: ) வைட்டமின் K - மலட்டுத்தன்மை


11. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாதது ஏது


விடை) பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின் - சிறுகுடல் நீர்

 

12. சரியான இணைகளை உருவாக்குக.


விடை) (P - iv) (Q - iii) (R - i) (S - ii)


13. சரியான இணைகளை உருவாக்குக.


விடை) (P - ii) (Q - iv) (R - i) (S - iii)


14. சரியான இணைகளை உருவாக்குக.


விடை) (P - iv) (Q - iii) (R - ii) (S - i)


15. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

) இன்சுலின் உற்பத்தி

) நச்சு நீக்கம்

) கிளைக்கோஜன் சேமிப்பு

) பித்த நீர் உற்பத்தி

விடை: ) இன்சுலின் உற்பத்தி


16. கூற்று (கூ) : சிறுகுடலைப்போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன

காரணம் (கா): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது.

) 'கூ'மற்றும்'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'கூ' வின் சரியான விளக்கம் ஆகும்.

) 'கூ'மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'கூ'வின் சரியான விளக்கம் இல்லை.

) 'கூ'சரியானது ஆனால் 'கா' தவறானது.

) 'கூ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.

விடை: ) 'கூ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.


17. குடலுறிஞ்சி பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடவும்.

) இவை குடல் நுண்ணுறிஞ்சிகளைக் கொண்டுள்ளன.

) இவை புறப்பரப்பை அதிகரிக்கின்றன

) இவற்றில் இரத்தத் நுண்நாளங்களும் நிணநீர் குழல்களும் உள்ளன.

) இவை கொழுப்பு செரித்தலில் பங்கேற்கின்றன

விடை: ) இவை கொழுப்பு செரித்தலில் பங்கேற்கின்றன


Tags : Digestion and Absorption | Zoology செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல்.
11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Choose the Correct Answers Digestion and Absorption | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : சரியான விடையை தெரிவு செய்க - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்