Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | பொருளியல் - ஓர் அறிமுகம்

பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பொருளியல் - ஓர் அறிமுகம் | 6th Social Science : Economics : Term 2 Unit 1 : Economics - An Introduction

   Posted On :  28.08.2023 06:29 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம்

பொருளியல் - ஓர் அறிமுகம்

"கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை".சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

பொருளியல்

அலகு 1




பொருளியல் - ஓர் அறிமுகம்

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே இருந்த சிறுவர் பூங்காவில் இருந்து சிறுவர்களின் சிரிப்புச் சத்தம் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சறுக்கு மரத்தில் சறுக்கிக்கொண்டும் சிலர் சீசாவில் மேலும் கீழுமாக ஆடிக்கொண்டும் இருந்தனர்.

இன்னும் சிலரோ அங்கிருந்த ஊஞ்சலில் வானத்தையே தொட்டுவிடும் அளவுக்கு உயரமாகவும் வேகமாகவும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இறங்கியதும் இடம் பிடிக்க நினைத்த குழந்தைகள் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர்.

சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடாமல் தனியே தூரமாக உட்காந்திருந்தான் கவின். அவனது பார்வை எங்கேயோ இருந்தது.

மற்றவர்களோடு சேராமல் கவின் தனித்து அமர்ந்திருப்பதைத் தூரத்தில் இருந்து பார்த்த அவனது மாமா மோகன் அவனை நோக்கி வந்தார்.

"என்ன கவின்... நீவிளையாடப்போகலையா?" என்றபடியே அவனது அருகில் வந்து அமர்ந்தார்.

"இல்ல மாமா எல்லோரும் என்னைக் கிராமத்துக்காரன்னு கிண்டல் செய்யிறாங்க", என்று சொல்லும்போதே அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. "நம்ம


விமலனும் சேர்ந்து சிரிக்கிறான். எவ்வளவு ஆசை ஆசையாக இந்த விடுமுறைக்கு இங்கே வந்தேன். இப்போ ஏன் வந்தோம்னு தோணுது மாமா... நான் திரும்ப எங்க ஊருக்கே போயிடுறேன்," விசும்பலோடு சொன்னான் கவின்.

"அப்படியா? அவன் எங்கே?" என்று அங்கிருந்த சிறுவர்கள் கூட்டத்தில் தம் மகன் விமலனைத் தேடினார்.

"தம்பி" என்று உரக்க அழைத்தார்.

அவர் குரலைக் கேட்டு "என்னப்பா..?" என்று அருகில் வந்தான்.

"நம்ம கவினை எல்லோரும் சேர்ந்து கிண்டல் செஞ்சீங்களா?" என்றார் மோகன்.

அமைதியாக நின்றுகொண்டிருந்தான் விமலன்.

சற்று வருத்தத்துடன் மோகன் "இன்னிக்கு இவ்வளவு பெரிய நகரத்தில் இருந்தாலும்... நானும் அதே கிராமத்தில இருந்து வந்தவன்தான். என்னோட வேர் அந்த கிராமம்தான்" என்றவர், "சரி போய் உன்னோட

நண்பர்களையும் அழச்சுகிட்டு வா. நான் உங்களோட பேசடை என்று சொல்லிவிட்டு கவின் அருகில் அமர்ந்தார்

விமலனும் அவனது நண்பர்களும் அமர்ந்ததும் "சரி நேடியாக விஷயத்திற்கு வருகிறேன். நாம் இப்பிடுற அரிசி, பருப்பு எங்கே இருந்து கிடைக்குதுன்னு தெரியுமா?" என கேட்டார் மோகன்

'அரிசி, பருப்பு தா கடையில் இருந்து வாங்கிக்கொண்டு

ஆனந்தன்.

ருவாங்க' என்றான்

"சரி.. கடைக்கு எங்கே இருந்து வருது?

“அவங்க இன்னொரு கடையில் இருந்து வாங்கிட்டு வருவாங்காகயிருக்கும்.”

இன்பா சந்தேகத்துன் அதைப் செய்றவங்ககிட்ட இருந்து வாங்குவாங்கன்னு  நினைக்கிறேன் மாமன் என்றாள்.

“ரொம்பச் சரி! பயிர் சய்றவங்கௗதான் நாம விவசாயின்னு சொல்றோம். கிராமங்களில் விவசாயம் தான் முக்கியத் தொழில்,"

உயர்சிந்தனை வினா:

பணம் என்பதே உலகில் இல்லையென்றால் - கற்பனை செய்.



"கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை".

குழந்தைகள் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"கிராமத்தில் இருந்து அவங்க விவசாயம். செய்து அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை நகரத்தின் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க. நாம அதை வாங்கிப் பயன்படுத்துகிறோம்.”

"இப்போ எனக்கு ஒரு சந்தேகம் மாமா என்றான் கவின்.

"என்ன சொல்லு கவின்."

"கிராமத்துல சில நாட்கள்ல எல்லாப் பொருள்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு

நுகர்வுப் பண்டங்கள்

அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வுப் பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. (எ.கா) அரிசி, துணிகள், மிதிவண்டிகள் போன்றவை.

வந்து விற்கிறதையும் நான் பார்த்திருக்கிறேன். அதைக் கடைனு சொல்லாம சந்தைனு ஏன் சொல்றாங்க?"

"ஆமாம்" கவின்.



செயல்பாடு 1

₹ மாதிரிச் சந்தை அமைக்கத் திட்டமிடவும்.

₹ ஒவ்வொரு மாணவரும் காய்கறிகளையோ / பழங்களையோ கொண்டு வரச் செய்தல்

₹ பொருட்களைச் சந்தையைப் போன்று காட்சிப்படுத்தி அதன்விலைகளைக் குறிக்கச் செய்தல். மற்ற வகுப்பு மாணவர்களையும் பொருட்களை வாங்கச் சொல்லுதல்.

₹ இச்செயல்பாட்டின் மூலம், மாணவர்கள் பொருட்களின் மதிப்பு, வாங்கதல், விற்றல் போன்றவற்றில்அனுபவத்தையும், லாபம், நட்டம், தேவை மற்றும் அளிப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவினையும் பெறுவர்,

₹ சந்தை லாபமானதாக இருக்க வேண்டும். எனவே லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சந்தைக்கு வரும் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியாது மாமா",

'நான் ஏற்கனவே சொன்னதுபோல கிராமத்துலதான் பெரும்பாலான வாருட்கள் விளைவிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.'

"சரி கவின். சந்தையில என்ன செயல்பாடு நடைபெறுதுன்னு தெரியுமா?"

“வாங்குவதும் விற்பதும்," என்றான் கவின்.

"அது தான் வியாபாரம். பரவாயில்லையே கவின் நீ அம்மாவோட சந்தைக்குப் போனதும் இல்லாமல் இவ்வளவு விஷயங்களையும் கவனிச்சிருக்கியே",

வெருமிதத்துடன் சிரித்தான் கவின்,

(குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து)

" கிராமம் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம கவினைக் கிண்டல் பண்ணிட்டோம்".

"மன்னிச்சிடுங்க மாமா, இனி யாரையும் காயப்படுத்தும்படி பேசமாட்டோம். இதைப் பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சிக்க ஆவலா இருக்கோம் மாமா," என்றனர்.

"சரி சொல்றேன் கேளுங்க," என்று விவரிக்கத் தொடங்கினார் மோகன்.


சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். -குறள்: 479

விளக்கம்: தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் இருப்பது போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் அழியும்.

 

செயல்பாடு 2

ஒன்றிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்" என்ற பாடலைப் பாட / இசைக்கச் செய்தல். பாடலின் பொருளை விமர்சிக்கச் செய்தல்.

செயல்பாடு 3

கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பூர்த்திச் செய்தல்.


"சந்தையில் விற்கப்படும் பொருட்களைச் சிறு வியாபாரிகளும் மக்களும் பணம் கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க" என்றார் மோகன்.

"உங்களுக்கு தெரியுமா?"

"பழைய காலத்தில் பண்டமாற்று முறைன்னு ஒன்று இருந்தது ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது தான் அது. (எ.கா.) ஒரு மூட்டை அரிசிக்குப் பதிலாகத் தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்".

'இதிலே சிக்கல் என்னன்னா. ஒருவரிடம் அரிசி அதிகமாக இருக்கும், ஒரு நெசவாளரிடம் துணி அதிகமாக இருக்கும். அரிசி வைத்திருப்பவர் துணியை வாங்க விரும்புவார். ஆனால் துணியை வைத்திருப்பவர் அரிசியை வாங்கத் தயாராக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பரிமாற்றம் நடக்கும்".

 

முதல் நிலைத் தொழில்கள்

உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலைத் தொழில்கள் எனப்படுகிறது.

₹ வேளாண்மை

₹ கால்நடைகள் வளர்த்தல்

₹ மீன் பிடித்தல்

₹ சுரங்கத் தொழில்

₹ கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல் மற்றும் மரம் வெட்டுதல்.


“பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும்போது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது. இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் பணம்.

"ஓ! அப்படியா!" என வியந்தனர் குழந்தைகள்.

"பழங்காலத்துல வேட்டையாடிகளாக, உணவு சேகரிப்பாளர்களாக வாழ்ந்து வந்த மக்கள், படிப்படியாக வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர், என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு அவர்கள் வேளாண்மை செய்வற்கு வசதியாகவே நீர் நிலைகள் அருகே குடி இருப்புகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர். இவ்வாறு குடியேறிய இடங்களே கிராமம், ஊர் என்று அழைக்கப்பட்டன. இன்றளவும் விவசாயம் நமது நாட்டின் பொருளாதார ஆணிவேராகத் திகழ்கிறது. மனிதனின் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் அளவில்லை அடிப்படையிலேயே புதிது அதன் புதிதாக தொழில்களைச் செய்யக் கற்றுக் கொண்டான். வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள், உழவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

"விவசாயம் முதன்மைத் தொழிலா?"

“ஆமாம், விவசாயம் போலவே இன்னும் சில தொழில்களையும் முதன்மையான தொழில்கள்னு சொல்லுவாங்க". “வி வ சா யம். தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கு. உங்களுக்குப் புரியும்படி நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மூன்று பிரிவுகளாகச் சொல்லலாம்".


'கிராமம்னா விவசாயம் தானா? அங்கே இருக்கிறவங்க என்ன வேலைக்குப் போவாங்க?" என்றான் விமலன்.

"கிராமம் எப்படி இருக்கும் மாமா என்று இன்பாவும் சேர்ந்து கொண்டாள்.

"விவசாயம் தான் முதன்மையான வேலையாக இருக்கும் விமலன் பட்டணம்னு சொல்லப்படுகின்ற நகரம் போன்று வசதிகள் அங்கே இருக்காது. அதே நேரம் அவர்களுக்குத் தேவையான அடிப்படையானவை கிடைக்கும்படி இருக்கும். சின்னச்சின்ன கடைகள் இருக்கும். அரிசி, பருப்பு மாதிரியே காய்கறி உற்பத்தியும் கிராமங்களில்தான் அதிகம். பால், காபி, டீ போன்ற பானங்களில் சேர்க்கும் சர்க்கரை, ஆலைகளில்தான் அதுக்கு மூலப் உற்பத்தியாகுதுன்னாலும் பொருளான கரும்பு கிராமங்களில்தான் விளையுது. மிளகாய் தொடங்கி கடுகு வரை சமையலுக்கான பெரும்பாலான பொருட்கள் கிரமத்துலேர்ந்துதான் வருது.'

“அடேயப்பா இதுக்கெல்லாம் ரொம்ப விலை அதிகம்னு அம்மா சொல்லுவாங்க. அப்ப கிராமத்தில் இருக்கிறவங்க எல்லாம் பணக்காரங்களாகத்தான் இருப்பாங்க போல," என்றான் ஆதித்யா.

"அப்படி இல்லை. அங்கே உற்பத்தி செய்யுறது மட்டும்தான் அவங்க. அப்பொருட்களை அவங்கட்ட இருந்து வாங்கி, விற்க நிறைய வியாபர இடை நிலை முகவர்கள் இருப்பதால்.. விவசாய உற்பத்தியாளர்களுக்குப் போய்ச்சேரும் பணம் குறைவாகத்தான் இருக்கும்."

“ஐயோ.. பாவம்! ஆனா.. கிராமம் தான் உண்மையிலேயே நகரத்தின் நிழல் போல," என்று வியந்தான் ஆனந்தன்.

 

இரண்டாம் நிலைத் தொழில்கள்

முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாம் நிலை தொழில்கள் (தொழில் துறை) என்று அழைக்கப்படுகின்றன.

உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.

வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் - பருத்தி, சர்க்கரை, உணவுபதப்படுத்துதல்.

காடுசார்ந்த தொழிற்சாலைகள் - காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள்.

கனிமத் தொழிற்சாலைகள் - சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்.

கடல்சார் தொழிற்சாலைகள் – கடல் உணவு பதப்படுத்துதல்.



செயல்பாடு 4

தகுந்த இடங்களில் / குறியிடவும்


"கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தியடிகளே சொல்லியிருக்கிறார்." "அருமையாகச் சொல்லி இருக்கிறார்," என்று உற்சாகமாகச் சொன்னான் கவின்.

அப்போது மோகனுடைய சட்டைப்பையில் கைபேசி சிணுங்கியது.

அவர் அதை எடுத்துப் பார்த்தார். விமலனின் பொன்னி அழைத்திருந்தார். செல்போனை ஆன் செய்து, "சொல்லும்மா.." என்றார்.


மூன்றாம் நிலைத் தொழில்கள்

முன்னர் கூறிய இரண்டு நிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.

போக்குவரத்து - சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்.

தொலைத் தொடர்பு - அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்.

வர்த்தகம் - பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.

வங்கி - பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள்.


"அங்கே என்ன உட்கார்ந்துகிட்டுக் கதை அளந்துகிட்டு இருக்கீங்க. பசங்களையும் அழைச்சுட்டு வீட்டுக்கு வாங்க. சாப்பாடு தயாரா இருக்கு," என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டார்.

"சரி வாங்க எங்க வீட்டுக்குப் போகலாம். சாப்பாடு தயாரா இருக்குன்னு," எழுந்தார் மோகன். பின்னடியே பசங்களும் "ஹேய்!" என்று உற்சாகமாய்ச் சத்தம்போட்டபடி எழுந்தனர்.

"கிராமம் எவ்வளவு முக்கியமானதுன்னு சொன்னீங்க. அப்போ நகரம் முக்கியமானது இல்லையா?" என்று கேட்டாள் இன்பா.

"ஒன்று முக்கியமாக இருந்தால் மற்றொன்று முக்கியமில்லாதது என்று யார் சொன்னது? அதனதன் அளவில் ஒவ்வொன்றும் முக்கியமானதுதான்."

அப்படீன்னா, நகரத்தைப் பற்றியும் சொல்லுங்களேன்," என்று கேட்டாள் இன்பா.

"அவ்வளவுதானே.. சொன்னால் போச்சு. இன்று உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள். நம்ம தமிழ்நாட்டில் 47 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்களாம்.'

"அடேயப்பா!"

"அதுமட்டுமல்ல தமிழ்நாடு உற்பத்தி தொழிலிலும் சேவைத்தொழிலிலும் சிறந்து விளங்கும் மாநிலம். இவை நகரங்களை மையமாகக்கொண்டே இயங்குகின்றன."

"கேட்கவே பெருமையா இருக்கு இந்தச் செயல்பாடுகளை என்னவென்று சொல்லுங்களேன்" என்றான் கவின்.

“ஆமா.. அதுவுமில்லாமல்.. கிராமங்களைவிட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம். சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்காங்க.”

"புரியலையே."

“இப்போ கிராமத்தில் முடி திருத்தகம், துணிகளைத் துவைத்து, இஸ்திரி போட்டுக்கொடுக்கும் சலவை நிலையங்கள் எல்லாம் ஒண்ணோ ரெண்டோ தானே இருக்கும். ஆனால் நகரத்தில் இந்த மாதிரி சிறுதொழில் செய்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். இப்படி நகரத்தில் கிடைக்கக்கூடிய உபரி வருவாயும் அதிகமாக இருக்கும்."

“ஓ!”

“ஆமா, நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடக்கத் துணை புரிகின்றன. இதற்கு உதவுவதற்கு ஏற்றார் போல வங்கிக் கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாடப் பணப்புழக்கத்திற்குப் பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணையாக நிற்கின்றன.

"இவை அனைத்தையும் மூன்றாம் நிலை தொழில்கள் எனலாம்.”

"நான் இங்கேயே இருந்தும், எனக்கு இதெல்லாம் தெரியல அப்பா, என்றான் விமலன்.

"உண்மையிலயே நிறைய செய்திகள் தெரிஞ்சுகிட்டோம் மாமா," என்றாள் இன்பா "நல்லது. இனிமே கிராமம்தான் உசத்தி, நகரம்தான் உசத்தின்னு யாராச்சும் சொல்லுவீங்களா?"

"நிச்சயமாகச் சொல்லமாட்டோம் மாமா. யாராச்சும் அப்படிச் சொன்னால் எங்களுக்குத் தெரிஞ்சதை அவங்களுக்கும் சொல்லிக்கொடுப்போம்," என்று ஒரே குரலில் கூறினர் குழந்தைகள்.

"சரி சாப்பிட போகலாம் எல்லோரும் வாங்க, என்று கூப்பிட்டார் மோகன்.

"இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடிட்டு சாப்பிடப் போகிறோம்", என்றனர் குழந்தைகள். கவினின் கையைப் பற்றிக்கொண்டு, குழந்தைகள் பூங்காவை நோக்கி ஓட்டமெடுத்தனர்.

எல்லோரும் ஒற்றுமையோடே விளையாடப் போவதைப் பெருமிதத்துடன் பார்த்து, நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்த மனநிறைவைப் பெற்றார், பொருளாதார ஆசிரியரான மோகன்.


கற்றல் வெளிப்பாடுகள்

குழந்தைகள் 'சந்தை' பொருளை புரிந்து கொள்வர்.

பண்டமாற்று முறை என்பதன் பற்றித் தெளிவான கருத்தைப் பெறுவர்.

பலவிதமான தொழில்களைப் பற்றிய அறிவினைப் பெறுவர்.

 

கலைச்சொற்கள்

நுகர்வோர் – பொருட்களைப் பயன்படுத்துவோர்

குடியிருப்புகள் -மனிதர்கள் வாழுமிடம்

Tags : Term 2 Unit 1 | Economics | 6th Social Science பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Economics : Term 2 Unit 1 : Economics - An Introduction : Economics - An Introduction Term 2 Unit 1 | Economics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம் : பொருளியல் - ஓர் அறிமுகம் - பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம்