Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அளவீடு | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Measurement

   Posted On :  17.09.2023 08:58 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு-1

அளவீடு

புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

) கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

விடை:

) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ


2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

) நிறை

) எடை

) காலம்

) நீளம்

விடை:

) நீளம்


3. ஒரு மெட்ரிக் டன் என்பது

) 100 குவின்டால்

) 10 குவின்டால்

) 1/10 குவின்டால்

) 1/100 குவின்டால்

விடை:

) 10 குவின்டால்


4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?

) சுருள் தராசு

) பொதுத் தராசு

) இயற்பியல் தராசு

) எண்ணியல் தராசு

விடை:

) சுருள் தராசு

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. ………………………….. ன் அலகு மீட்டர் ஆகும்.

விடை: நீளம்

2. 1 கி.கி அரிசியினை அளவிட ……………….. தராசு பயன்படுகிறது.

விடை: பொதுத்

3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ………………..கருவியாகும்.

விடை: வெர்னியர்

4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ………………….. பயன்படுகிறது

விடை: திருகு அளவி

5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை …………………. ஆகும்.

விடை: 10 மில்லி கிராம்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்

விடை:

தவறு 

மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்


2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை

விடை:

தவறு - மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை


3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.

விடை:

சரி


4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.

விடை:

சரி


5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15k

விடை:

சரி


6. வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.

விடை:

சரி

 

IV. பொருத்துக

இயற்பியல் அளவு - SI அலகு

) நீளம் - கெல்வின்

) நிறை - மீட்டர்

) காலம் - கிலோகிராம்

) வெப்பநிலைவிநாடி

விடை:

இயற்பியல் அளவு - SI அலகு

) நீளம் - மீட்டர்

) நிறை - கிலோகிராம்

) காலம் விநாடி

) வெப்பநிலைகெல்வின்

 

2. கருவி - அளவிடப்படும்பொருள்

). திருகு அளவி - காய்கறிகள்

). வெர்னியர் அளவி - நாணயம்

). சாதாரணத்தராசுதங்க நகைகள்

). மின்னணுத்தராசு - கிரிக்கெட் பந்து

விடை:

கருவி - அளவிடப்படும்பொருள்

). திருகு அளவி - நாணயம்

). வெர்னியர் அளவி - கிரிக்கெட் பந்து

). சாதாரணத்தராசு - காய்கறிகள்

). மின்னணுத்தராசு - தங்க நகைகள்

 

V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.

பின்வருமாறு விடையளி :

) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்

) A சரி ஆனால் R தவறு

) A தவறு ஆனால் R சரி

1. கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.

காரணம் (R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

விடை:

) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.


2. கூற்று (A) : 0°c = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.

காரணம் (R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273 ஐக் கூட்டினால் போதுமானது.

விடை:

) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்


3. கூற்று (A) : இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் (R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.

விடை:

) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.

Tags : Measurement | Physics | Science அளவீடு | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Measurement : One Mark Questions Answers Measurement | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அளவீடு | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீடு