Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயக்கம் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Motion

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அலகு - 2

இயக்கம்

புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. திசைவேகம் - காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?

அ) நகரும் பொருளின் திசைவேகம்

ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

இ) நகரும் பொருளின் வேகம்

ஈ) நகரும் பொருளின் முடுக்கம்

விடை:

ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

 

2. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?

அ) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்

ஆ) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்

இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

ஈ) கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்

விடை:

இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

 

3. கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?


விடை:


 

4. மையவிலக்கு விசை ஒரு

அ) உண்மையான விசை

ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை

இ) மெய்நிகர் விசை

ஈ) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை

விடை:

ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. வேகம் ஒரு ………………. அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு ……………. அளவு.

விடை: ஸ்கேலார், வெக்டர்  

2. தொலைவு - கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது …………………… .

விடை: வேகம்

3. எதிர்மறை முடுக்கத்தை ……………… என்றும் கூறலாம்.

விடை: வேக இறக்கம்

4. இடப்பெயர்ச்சி - காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது …………….. .

விடை: திசைவேகம்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்தவும்

1. நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.

விடை: தவறு

நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரற்ற இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.

 

2. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்.

விடை: சரி

 

3. எந்தவொரு கால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.

விடை: சரி

 

4. ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடமானது X - அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.

விடை: தவறு

ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடமானது X - அச்சுக்கு சாய்வாக ஒரு நேர்கோடாக அமையும்.

 

5. ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி - காலம் வரைபடம் ஒரு நேர் கோடாக அமையும்.

விடை: சரி

 

IV. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.

சரியானதைத் தேர்ந்தெடு:

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை . மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை . ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.

இ) கூற்று உண்மை . ஆனால் காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை .

1. கூற்று : ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.

காரணம் : ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.

விடை:

ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை

 

2. கூற்று : மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.

காரணம் : மொத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்.

விடை:

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை . ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்

 

3. கூற்று : ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி. ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை .

காரணம் : இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.

விடை:

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை . மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்

 

V. பொருத்துக.

விடை:


Tags : Motion | Physics | Science இயக்கம் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Motion : One Mark Questions Answers Motion | Physics | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - இயக்கம் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம்