Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Electric Charge And Electric Current

   Posted On :  17.09.2023 10:09 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல் 

அலகு - 4

மின்னூட்டமும் மின்னோட்டமும்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

) எலக்ட்ரான்களின் ஏற்பு

) புரோட்டான்களின் ஏற்பு

) எலக்ட்ரான்களின் இழப்பு

) புரோட்டான்களின் இழப்பு

விடை:  

) எலக்ட்ரான்களின் இழப்பு


2. சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்

) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன

) அல்லது

) இரண்டும் அல்ல

விடை:  

) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன


3. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ............ எதிர்மின்னூட்டத்தில் ……………….

) தொடங்கி ; தொடங்கும்

) தொடங்கி ; முடிவடையும்

) முடிவடைந்து ; தொடங்கும்

) முடிவடைந்து ; முடியும்

விடை:  

) தொடங்கி ; முடிவடையும்


4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ...... அளவாகும்.

) விசையின்

) திறமையின்

) போக்கின்

) வேலையின்

விடை:  

) வேலையின்


5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் .......

) எலக்ட்ரான்கள்

) நேர் அயனிகள்

) மற்றும்

) இரண்டும் அல்ல

விடை:  

) மற்றும்


6. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ........... என அழைக்கப்படும்.

) ஜூல் வெப்பமேறல்

) கூலூம் வெப்பமேறல்

) மின்னழுத்த வெப்பமேறல்

) ஆம்பியர் வெப்பமேறல்

விடை:  

) ஜூல் வெப்பமேறல்


7. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

) வெப்ப விளைவு

) வேதி விளைவு

) பாய்வு விளைவு

) காந்த விளைவு

விடை:  

) வேதி விளைவு


8. ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?

) வெப்பநிலை

) வடிவம்

) கம்பியின் இயல்பு

) இவையனைத்தும்

விடை:  

) இவையனைத்தும்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. எலக்ட்ரான்கள் ............ மின்னழுத்தத்திலிருந்து .......... மின்னழுத்தத்திற்கு நகரும்.

விடை:  

அதிக, குறைந்த

2. எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது .......

மின்னோட்டம் எனப்படும்.

விடை:  

மரபு

3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் ...............க்கு ஒப்பானது.

விடை:  

இறைப்பான்

4. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ................ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.

விடை:  

50

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.

விடை:   

சரி 


2. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.

விடை:  

தவறு

ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்.


3. மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது.

விடை:  

தவறு

மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது.

 

4. மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.

விடை:  

சரி

 

IV. பொருத்துக.

1. மின்னூட்டம் - ஓம்

2. மின்னழுத்த வேறுபாடு - ஆம்பியர்

3. மின்புலம் - கூலூம்

4. மின்தடை - நியூட்டன் கூலூம்

5. மின்னோட்டம்வோல்ட்

விடை:  

1. மின்னூட்டம் - கூலூம்

2. மின்னழுத்த வேறுபாடு - வோல்ட்

3. மின்புலம் - நியூட்டன் கூலூம்

4. மின்தடைஓம்

5. மின்னோட்டம்ஆம்பியர்

Tags : Electric Charge and Electric Current | Physics | Science மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Electric Charge And Electric Current : One Mark Questions Answers Electric Charge and Electric Current | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்