Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Plant Physiology

   Posted On :  18.09.2023 06:47 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 19

தாவர உலகம் - தாவர செயலியல்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்.

) ஒளி சார்பசைவு

) புவி சார்பசைவு

) தொடு சார்பசைவு

) வேதி சார்பசைவு

விடை :

) தொடு சார்பசைவு


2. ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது

COஇழுக்கப்பட்டு Oவெளியேற்றப்படுகிறது.

) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்

) நீர் மற்றும் COஇரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்

CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

விடை :

CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது


3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ……………… எனப்படும்.

) நடுக்கமுறு வளைதல்

) ஒளிசார்பசைவு

) நீர்சார்பசைவு

) ஒளியுறு வளைதல்

விடை :

) நீர்சார்பசைவு


4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

) வேதி சார்பசைவு

) நடுக்கமுறு வளைதல்

) ஒளி சார்பசைவு

) புவிஈர்ப்பு சார்பசைவு

விடை :

) ஒளி சார்பசைவு


5. தாவரத்தின் வேர் ……………………… ஆகும்?

I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு

II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு

III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு

IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு

) 1 மற்றும் II

) II மற்றும் III

) III மற்றும் IV

) 1 மற்றும் IV

விடை :

) II மற்றும் III


6. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது எனப்படும்..

) வெப்ப சார்பசைவு

) வெப்பமுறு வளைதல்

) வேதி சார்பசைவு

) நடுக்கமுறு வளைதல்

விடை :

) வெப்பமுறு வளைதல்


7. இலையில் காணப்படும் பச்சையம் ………………………. க்கு தேவைப்படும்.

) ஒளிச்சேர்க்கை

) நீராவிப்போக்கு

) சார்பசைவு

) திசை சாரா தூண்டல் அசைவு

விடை :

) ஒளிச்சேர்க்கை


8. நீராவிப் போக்கு ……………………………… ல் நடைபெறும்.

) பழம்

) விதை

) மலர்

) இலைத்துளை

விடை :

) இலைத்துளை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. …………………… இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.

விடை :

சூரிய ஒளி

2. …………………………. நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.

விடை :

வேர்

3. தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி ……………………. எனப்படும்.

விடை :

பச்சையம்

4. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது …………….. எனப்படும்.

விடை :

ஒளியுறு வளைதல்

5. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது எனப்படும்.

விடை :

புவிசார்பசைவு

6. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு ……………………….. தேவைப்படும்.

விடை :

ஆக்ஸிஜன்

 

III. பொருத்துக

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது - நேர் ஒளிசார்பசைவு

2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது - எதிர் புவிசார்பசைவு

3. தண்டு மேல் நோக்கி வளர்வது - எதிர் ஒளி சார்பசைவு

4 வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது - நேர் புவி சார்பசைவு

விடை :

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது - நேர் புவி சார்பசைவு

2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது - நேர் ஒளி சார்பசைவு

3. தண்டு மேல் நோக்கி வளர்வது - எதிர் புவி சார்பசைவு

4 வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது - எதிர் ஒளி சார்பசைவு

 

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.

விடை :

தவறு

வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.


2. தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.

விடை :

சரி


3. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.

விடை :

தவறு

வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.


4. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.

விடை :

தவறு

ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் 02 உற்பத்தியாகும்.


5. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

விடை :

சரி


6. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.

விடை :

தவறு

தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.

Tags : Plant Physiology | Biology | Science தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Plant Physiology : One Mark Questions Answers Plant Physiology | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்