Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Environmental Science

   Posted On :  18.09.2023 09:27 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு -  24

சூழ்நிலை அறிவியல்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ………………………. என அழைக்கப்படுகின்றன.

) உயிரியல் காரணங்கள்

) உயிரற்ற காரணிகள்

) உயிர்க் காரணிகள்

) இயற் காரணிகள்

விடை:

) உயிரற்ற காரணிகள்


2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை ………………….. எனப்படும்

) ஆவியாதல்

) குளிர்வித்தல்

) பதங்கமாதல்

) உட்செலுத்துதல்

விடை:

) பதங்கமாதல்


3. வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ………………………… எனப்படும்.

) ஒளிச்சேர்க்கை

) உட்கிரகித்தல்

) சுவாசித்தல்

) சிதைத்தல்

விடை:

) ஒளிச்சேர்க்கை


4. ………………………….. ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.

) கார்பன் மோனாக்சைடு

) கந்தக டைஆக்ஸைடு

) நைட்ரஜன் டைஆக்ஸைடு

) கரியமில வாயு

விடை:

) கரியமில வாயு

 

II. பொருத்துக

1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் - நைட்ரசோமோனாஸ்

2. அமோனியாவாதல் - அசோடோபாக்டர்

3. நைட்ரேட்டாதல் - சூடோமோனாஸ் சிற்றினங்கள்

4 நைட்ரேட் வெளியேற்றம் - அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்

விடை:

1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் - அசோடோபாக்டர்

2. அமோனியாவாதல் - அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்

3. நைட்ரேட்டாதல் - நைட்ரசோமோனாஸ்

4 நைட்ரேட் வெளியேற்றம் - சூடோமோனாஸ் சிற்றினங்கள்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.

விடை:

தவறு

கரியமில வாயு ஒரு பசுமை வாயு ஆகும்.


2. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத் தாவரங்களில்காணப்படுகின்றது.

விடை:

தவறு

நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த் தாவரங்களில் காணப்படுகின்றது.


3. பாலுட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.

விடை:

சரி


4. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

விடை:

தவறு

வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.


5. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

விடை:

தவறு

குளிர்கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும். (அல்லது) கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது வெப்ப நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

Tags : Environmental Science | Biology | Science சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Environmental Science : One Mark Questions Answers Environmental Science | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல்