விசையும் இயக்கமும் | பருவம் 1 | அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 2 : Forces and Motion

   Posted On :  14.09.2023 08:49 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. வேகத்தின் அலகு --------------------

அ) மீ

ஆ) விநாடி

இ) கிலோகிராம்

ஈ) மீ/வி

விடை : ஈ) மீ/வி

 

2. கீழ்க்கண்டவற்றுள்  எது அலைவுறு இயக்கம் ?

அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்

இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

 

3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொர்பினைத் தேர்ந்தெ.

அ) வேகம் = தொலைவு x காலம்

ஆ) வேகம் = தொலைவு / காலம்

இ) வேகம் = காலம் / தொலைவு

ஈ) வேகம் = 1 / (தொலைவு x காலம்)

விடை: ஆ) வேகம்=தொலைவு / காலம்

 

4. கீதா தன் தந்தையுடன் ஒரு வண்டியில் அவளுடைய வீட்டிலிருந்து 40 தொலைவிலுள்ள அவளது மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

கூற்று 1: கீதாவின் வேகம் 1 கி.மீ / நிமிடம்

கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ / மணி

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

விடை: அ) கூற்று 1 மட்டும் சரி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் நேர்க்கோட்டு இயக்கம் இயக்கத்திற்கு ஒரு உதாரணமாகும்.

2. புவிஈர்ப்பு விசை தொடா விசை  விசையாகும்.

3. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் தற்சுழற்சி இயக்கம்  இயக்கமாகும்.

4.ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் சீரான இயக்கம்

 

 

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

 

1. மையப் புள்ளியைப் பொருத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும். சரி

2. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும். சரி

3. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன. தவறு சரியான விடை :  இது சீரற்ற இயக்கம்

4. வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபாட்டுகள் செயல்படும். தவறு  அக உணர்வு நிலையில் இருக்காது

 

 

IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.

 

1. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : தொடா விசை ?

2. தொலைவு: மீட்டர் :: வேகம் : மீ/வி?

3. சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : தனிஊசல்?

 

V. பொருத்துக. 

 அ) வட்ட இயக்கம்  ) நேர்கோட்டு இயக்கம்

 ஆ) அலைவு இயக்கம் ஈ) சுழற்சி இயக்கம்

 இ) நேர்கோட்டு இயக்கம் ஆ) அலைவு இயக்கம்

 ஈ) சுழற்சி இயக்கம் அ) வட்ட இயக்கம்

 உ) நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும் உ) நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்

 

 

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க.


 

VII. அட்டவணையைப் பூர்த்தி செய்க.


 

VIII. ஓரிரு வார்த்தையில் விடை எழுதுக.

 

1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை தொடா விசை

2. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது இயக்கம்

3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் இயக்கம்  கால ஒழுங்கு இயக்கம்

4. சமகால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் சீரான இயக்கம்

5. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ரோபோட்டுகள்

 

IX. சுருக்கமாக விடையளி.

 

1. விசை - வரையறு.

விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

 

2 பொருள் நகரும் பாதையின் அடிப்படையிலான இயக்கங்களைக் கூறுக.

1) நேர்க்கோட்டு இயக்கம்

(2) வளைவுப்பாதை இயக்கம்

(3) வட்டப்பாதை இயக்கம்

(4) தற்சுழற்சி இயக்கம்

(5) அலைவு இயக்கம்

(6) ஒழுங்கற்ற இயக்கம்

 

3. இயங்கும் மகிழுந்தினுள் நீ அமர்ந்திருக்கும் போது உன் நண்பனைப் பொருத்து ஓய்வு நிலையில் இருக்கிறாயா அல்லது இயக்க நிலையில இருக்கிறாயா?

இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.

 

4. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் -காரணம் கூறு.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.

 

5. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.


சுழற்சி இயக்கம்

ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல்

(எ.கா): பம்பரத்தின் இயக்கம்.

வளைவுப்பாதை இயக்கம்

பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.

(எ.கா) பந்தினை வீசுதல்


 

 

X. கணக்கீடு.

1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் வேகம் என்ன?

தீர்வு:

வேகம் (S) = கடந்த தொலைவு (d) /எடுத்துக் கொண்ட நேரம் (t)

400 கிலோ மீட்டர்/  5 மணி நேரம்

= 80 கிலோ மீட்டர்/ மணி

விடை: 80 கிலோ மீட்டர்/ மணி

 

XI. விரிவாக விடையளி.

 

1. இயக்கம் என்றால் என்ன?


இயக்கம்:

• இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.

• இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:

1. நேர்க்கோட்டு இயக்கம்

4. தற்சுழற்சி இயக்கம்

2. வளைவுப்பாதை இயக்கம்

5. அலைவு இயக்கம்

3. வட்டப்பாதை இயக்கம்

6. ஒழுங்கற்ற இயக்கம்

 

2. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.

1.  நேர்க்கோட்டு இயக்கம் : பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள்.

2.  வளைவுப்பாதை இயக்கம் : பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும். (உ.ம்) பந்தினை வீசுதல்

3. வட்டப்பாதை இயக்கம் : ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.

4. தற்சுழற்சி இயக்கம் : ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உ.ம்): பம்பரத்தின் இயக்கம்.

5. அலைவு இயக்கம் : ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் - (உ.ம்) தனிஊசல்.

6. ஒழுங்கற்ற இயக்கம் : ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

காலத்தை பொறுத்த இயக்கம் :

1. கால ஒழுங்கு இயக்கம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கம். (உம்) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.

2. கால ஒழுங்கற்ற இயக்கம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது.

வேகத்தை பொறுத்த இயக்கம் :

1. சீரான இயக்கம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம். (உ.ம்) தொடர் வண்டியின் இயக்கம்.

2. சீரற்ற இயக்கம் : மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம். (உ.ம்) வாகன இயக்கம்.

 

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.



Tags : Forces and Motion | Term 1 Unit 2 | 6th Science விசையும் இயக்கமும் | பருவம் 1 | அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 2 : Forces and Motion : Questions Answers Forces and Motion | Term 1 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும் : வினா விடை - விசையும் இயக்கமும் | பருவம் 1 | அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்