Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | மெய் பிம்பமும் மாய பிம்பமும்
   Posted On :  13.09.2023 03:46 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி

மெய் பிம்பமும் மாய பிம்பமும்

பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப் பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய் பிம்பம் எனப்படும். மேலும், அது எப்போதும் தலைகீழாகவே இருக்கும். மெய் பிம்பத்தைத் திரையில் வீழ்த்த முடியும்.

மெய் பிம்பமும் மாய பிம்பமும்

பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப் பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய் பிம்பம் எனப்படும். மேலும், அது எப்போதும் தலைகீழாகவே இருக்கும். மெய் பிம்பத்தைத் திரையில் வீழ்த்த முடியும்.

பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப் பின் ஒன்றையொன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாய பிம்பம் எனப்படும். மாய பிம்பம் எப்போதுமே நேரான பிம்பமாகவே இருக்கும். மேலும் அதைத் திரையில் வீழ்த்த முடியாது (படம் 6.3).


செயல்பாடு -1

ஒப்பனை ஆடியின் முன் நிற்கவும். உங்கள் முழு உருவமும் தெரிகின்றதா? இப்போது நிலைப் பேழையில் (பீரோ) உள்ள ஆடியின் முன் நிற்கவும். இப்போது உங்கள் முழு உருவமும் தெரிகின்றதா? இதிலிருந்து என்ன அறிகிறீர்கள்? ஆடியில் ஒருவரது முழு உருவமும் தெரிய வேண்டுமெனில் ஆடியின் உயரம் அந்நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும். அதாவது, ஆடியின் உயரம் = உங்கள் உயரம் / 2

9th Science : Light : Real and Virtual Image Curved Mirrors in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி : மெய் பிம்பமும் மாய பிம்பமும் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி