Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Physics : Electric Charge And Electric Current

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. கருத்துரு வினாக்கள்

1. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. எப்படி?

விடை:  

உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. ஏனெனில் ஒரே கம்பியில் இருப்பதால் மின் சுற்று பூர்த்தியாகாது.

மின்னழுத்த வேறுபாடு சுழி ஆகும்.

இதே பறவை மற்றொரு காலை () இறகை அருகிலுள்ள கம்பியில் மோதச் செய்தால் மின்சுற்று பூர்த்தியடைந்து பறவை எரிந்துவிடும்.

 

2. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.

விடை:  

சூரிய மின்கலத்தில் மின்னழுத்தம் எப்போதும் ஓரே சீராக இருக்காது.

சூரிய மின்கலம் ஒளி மின்னழுத்த விளைவு தத்துவத்தில் செயல்படுகிறது.

இதனால் மின்னோட்டம், மின்னழுத்தம், மின் தடை ஆகியவை மாறுபடும். சூரிய கதிர் குறைந்த செறிவிலிருந்து, உயர் செறிவிற்கு செல்லும்.

 

3. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு.

விடை:  

மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியாது.

காலத்தைப் பொறுத்து மின்னோட்டத்தின் திசை மாறிக் கொண்டே இருக்கும். எனவே A.C ஐக் கொண்டு மின் முலாம் பூச முடியாது.

எனவே மின்முலாம் பூச நேர்த்திசை மின்னோட்டத்தை (DC) பயன்படுத்த வேண்டும்.

 

VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

1. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?

விடை:  

i) மின்னூட்ட மதிப்பு

ii) மின்னூட்டங்களுக்கு இடையேயான தொலைவு

iii) அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை

 

2. மின்விசைக் கோடுகள் என்றால் என்ன?

விடை:  

மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் மின்விசைக்கோடுகள் எனப்படும். மின்புலத்தில் வைக்கப்படும் ஓரலகு நேர் மின்னோட்டம் நகரும் நேர் அல்லது வளைவு கோடுகள்.

 

3. மின்புலம் - வரையறு.

விடை:  

ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு நேர்மின்னூட்டத்தினால் உணரப்படும் விசையே அப்புள்ளியில் மின்புலம் எனப்படும்.

 

4. மின்னோட்டம் - வரையறு. அதன் அலகினைத் தருக.

விடை:  

மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு.

I = q / t

• SI அலகு: ஆம்பியர் (A)

 

5. ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

விடை:   

மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, வறுதட்டு (ரொட்டி)

 

6. வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.

விடை:   

பக்க இணைப்பு:

பக்க இணைப்பில் ஒவ்வொரு மின் சாதனத்திற்குமிடையே மின்னழுத்த வேறுபாடு சமமாக இருக்கும்.

மேலும் ஒவ்வொரு சாதனத்தையும் தனித் தனியாக ON, OFF செய்ய இயலும் தொடரிணைப்பில் இது முடியாது.

தொடரிணைப்பில் இணைத்தால் ஒரு மின் சாதனத்தில் பழுது ஏற்பட்டால் மற்ற சாதனங்கள் இயங்காது.

 

7. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.

விடை:   

தரையிணைப்பு :

அதிகப்படியான மின்னோட்டம் நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூமிக்கு சென்று விடும்.

முறிசாவி

குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை துண்டித்து விடும்.

மின்னுருகு இழை :

மின் சுற்றில் குறிப்பிட்ட விழைவு மதிப்பிற்கு மேல் இவ்விழை வழியே

மின்னோட்டம் பாயும் போது உருகி இணைப்பை துண்டித்துவிடும்.

 

VII. பயிற்சிக் கணக்குகள்

1. நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,

() எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?

() இந்நிகழ்வில் இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:   

() தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கும். சீப்பு எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்ளும்.

() இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான் எண்ணிக்கை = n = q / e

= -0.4 / 16 × 10-19

q - மின்னூட்டம்  

e - எலக்ட்ரானின் மின் விட்டம்

n - எலக்ட்ரானின் எண்ணிக்கை n = -0.25 × 1019 = 2.5 × 1018

விடை:   

எலக்ட்ரானின் எண்ணிக்கை n = 2.5 × 1018

 

2. 2.5A அளவு மின்னோட்டம் மின்விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.

தீர்வு :

I = q / t

நேரம் t = 2 மணி = 2 × 60 × 60 = 7200

வினாடி மின்னோட்டம் = 2.5 A

மின்னூட்டம் q = I × t

= 2.5 × 7200

=18000 கூலும்

விடை:   

மின்னூட்டம் q = 18000 கூலும்

 

3. மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (1) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (V) ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்தடையத்தின் மின்தடை மதிப்பு என்ன?

தீர்வு :


I (ஆம்பியர்) - 0.5 , 1.0 , 2.0 , 3.0 , 4.0

V (வோல்ட்) - 1.6 , 3.4 , 6.7 , 10.2 , 13.2

நினைவுக் குறிப்பு : V-1 வரைபடத்தை வரைந்து அதன் சாய்வை எடுக்கவும்.

மின்தடையின் மதிப்பானது (R), சாய்விலிருந்து பெறப்படுகிறது.

சாய்வு = 1 / R = BC / AC = 2 / 6.8

P = 6.8 / 2 = 3.4 Ω

விடை:   

மின்தடை மதிப்பு = 3.4 Ω



பிற நூல்கள்

1. Fundamentals of Physics by K.L. Gomber & K.L. Gogia

2. Concepts of Physics by H.C Verma

3. General Physics by W.L. Whiteley

 

இணைய வளங்கள்  

https://www.qrg.northwestern.edu/projects/vss/ docs/propulsion/1-what-is-an-ion.html

http://www.explainthatstuff.com/batteries.html

http://www.woodies.ie/tips-n-advice/how-thefusebox-works-in-the-home-new


கருத்து வரைபடம்


 

இணையச் செயல்பாடு

ஓம் விதியை மெய்ப்பித்தல்

இச்செயல்பாடு மூலம் மின்னோட்டத்திற்கும் மின்னழுத்த வேறுப்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை அறிந்து கொள்ளுதல்.


படிநிலைகள்

● கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.

'● 'V' மற்றும் 'P' ஆகியவற்றின் மதிப்பினை மாற்றி உள்ளீடு செய்வதன் மூலம், மின்கடத்தியில் உள்ள மின்னோட்டத்தை அறிய இயலும்.

● இப்பக்கத்தின் வலப்புறத்தில், 'V' மற்றும் 'R' –ன் மதிப்புகளை மாற்றி மின்னோட்ட வேறுபாடுகளை அறிந்து கொள்ளலாம்.


உரலி : https://phet.colorado.edu/en/simulation/ohms/law

Tags : Electric Charge and Electric Current | Physics | Science மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Electric Charge And Electric Current : Answer the following questions Electric Charge and Electric Current | Physics | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - மின்னூட்டமும் மின்னோட்டமும் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்