சக்தியின் பயணம் | பருவம்-3 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey
சக்தியின் பயணம் (பருவம்-3 அத்தியாயம்
3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
மதிப்பீடு
1. நான் யார்? சரியான விடைக்கு
(✓) குறியிடுக.
அ.
நான் எரிபொருள் இல்லாமல் இயங்குவேன். (மகிழுந்து / மிதிவண்டி✓)
ஆ.
நான் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வேன். (பயணிகள் தொடர்வண்டி✓ / அதிவிரைவு
தொடர்வண்டி)
இ.
நான் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிக்கொண்டு வானில் பறப்பேன். (வானூர்தி / உலங்கு ஊர்தி✓)
ஈ.
நான் ஆறு,
ஏரி இரண்டிலும் பயணிக்க உதவுவேன். (படகு ✓ / கப்பல்)
2. சொற்களோடு தொடர்புடைய படத்தை இணைக்க.
3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ.
மீன் பிடிக்க மீனவர் பயன்படுத்துவது _____________
.
i) கட்டுமரம்
ii) பேருந்து
iii) தொடர்வண்டி
விடை : i) கட்டுமரம்
ஆ.
மக்களைக் காப்பாற்ற இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது _____________.
i) ஈருருளி
ii) வானூர்தி
iii) உலங்கு ஊர்தி
விடை : iii) உலங்கு
ஊர்தி
இ.
மின்சார ரயில்கள் _____________ .
i) புகையை வெளிவிடுவதில்லை
ii) புகையை வெளிவிடும்
iii) டீசலில் ஓடும்
விடை : i) புகையை
வெளிவிடுவதில்லை
4. போக்குவரத்து வகைகளின் அடிப்படையில் சரியற்ற
இணையைத் தேர்ந்தெடுத்து (✓) குறியிடுக.
அ.
கப்பல்,
பாய்மரப் படகு
ஆ.
உலங்கு ஊர்தி, வானூர்தி
இ.
மிதிவண்டி, சரக்கு உந்து
ஈ.
மகிழுந்து, பரிசல் ✓
5. சாலையில் செய்யக்கூடாத இரண்டு செயல்களை எழுதுக.
அ. சாலையின் குறுக்கே
ஓடாதீர்கள்
ஆ. சாலையில் தனியாக
செல்ல வேண்டாம். எப்போதும் ஒரு பெரியவருடன் செல்லுங்கள்.
6. எரிபொருளைப் பயன்படுத்தி நகரும் வாகனங்களுக்கு (✓) குறியிடுக.
7. படங்களை உற்றுநோக்கி, சிந்தித்து
சரியான செயல்களுக்கு (✓) குறியிடுக.
தன் மதிப்பீடு
* என்னால் பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண முடியும்.
* நான்
சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவேன்.