Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 5 : Digestion and Absorption

   Posted On :  07.01.2024 04:14 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

18. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

இரைப்பையில் குடலுறிஞ்சிகள் காணப்படுவதில்லை. ஏனெனில் அங்கு உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல் நிகழ்வு நடைபெறுவதில்லை.

இரைப்பையில் உணவானது இரைப்பை நொதிகளைக் கொண்டு அமில தன்மையில் செரிக்கப்படுகிறது. உணவானது இரத்தத்திலும் நிணநீரிலும் கரையும் பொருளாக மாறவில்லை


19. பித்தநீரில் செரிமான நொதிகள் இல்லை, இருந்தும் செரித்தலில் முக்கியத்துவம் பெறுகிறது ஏன்

1. இறந்த சிவப்பணுக்களின் சிதைவினால் உருவான ஹீமோகுளோபினின் பொருட்களிலிருந்து உருவான பித்த நிறமிகள் பிலிரூபின் மற்றும் பிலிவெர்ட்டின் உள்ளன

2. பித்தநீர் உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமடையச் செய்கின்றது.

3. பித்த உப்புகள் கொழுப்பு துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன.

4. பித்த நீரானது லிபேஸ் நொதியைத் தூண்டிக் கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.


20. ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களைப் பட்டியலிடுக.



21. கலோரி மதிப்பின் அடிப்படையில் புரதத்திற்கும் கொழுப்பிற்கும் இடையிலான வேறுபாடு மற்றும் உடலில் இவற்றின் பங்கு குறித்து எழுதுக.



22. செரிமான நொதிகள் தேவையின் போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்.

செரிமான நொதிகள் தேவைப்பட்டால் மட்டுமே உணவுப் பாதையில் சுரக்கிறது.

மனிதன் உணவுப் பொருளை பார்த்தாலோ அல்லது அதன் வாசனையை நுகர்ந்தாலோ வாயில் உள்ள உமிழ் நீர் சுரக்கிறது.

உமிழ்நீர்:

நீர், Na+, K+, CI, HCO3 போன்ற மின்பகு பொருட்களும், டயலின் எனும் நொதியும் ; பாக்டீரியா எதிர்ப்பு பொருளான லைசோசைம், கோழை (கிளைக்கோ புரதம்) ஆகியன உள்ளன

கோழை உணவை ஈரப்படுத்தி, மென்மையாக்கிக் குழைந்த நிலைக்கு மாற்றி உயவு தன்மையேற்றி விழுங்குவதற்கேற்ற தன்மையாக மாற்றுகின்றது.

+ பாலிசாக்கரைடுகள் இரட்டைச்சர்க்கரை

இரைப்பை

உணவு வாயினுள் இருக்கும்பொழுதே இரைப்பை நீர் சுரப்பு துவங்குகிறது.

ஹைட்ரோகுளோரிக் அமிலம், பல முன்னொதிகளும் உள்ளன.

பெப்ஸினோஜன் பெப்சின்

புரதம் "புரோடியோஸ்கள் + பெப்டோன்கள்

ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பணி

1. HCI உணவை அமிலத்தன்மையுடன் இருக்க செய்கிறது.

2. பெப்சின் செயல்பாட்டிற்கு உகந்த நிலையை அளிக்கிறது.

3. பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளை அழிக்கிறது

4. உணவு அழுகுதலை தடுக்கிறது.

ரெனின்

ரெனின் என்னும் மற்றொரு புரத நொதி இளங்குழந்தை இரைப்பை நீரில் உள்ளது.

சிறுகுடல் :- கணையம்

கணைய நீரில் டிரிப்ஸினோஜன், கைமோடிரிப்ஸினோஜன் கார்பாக்ஸிபெப்டிடேஸ்கள், கணைய அமைலேஸ், கணைய லிப்பேஸ் போன்ற நொதிகள் உள்ளன.

சிறுகுடலின் கோழைப்படலத்திலிருந்து என்டிரோகைனேஸ் எனும் நொதி சுரக்கிறது.


பித்தநீர்

பிலிரூபின் மற்றும் பிலிவெர்டின் உள்ளன 

பித்தநீர் உணவிலுள்ள கொழுப்பைப் பால்மமடையச் செய்கின்றது.

பித்த உப்புகள் கொழுப்பு துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்து சிறு சிறு திவலைகளாக மாற்றுகின்றன.

பித்த நீரானது லிபேஸ் நொதியைத் தூண்டிக் கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.

செரிக்கப்படாத புரதங்கள் மீது கணைய நீரில் உள்ள புரதச் சிதைவு நொதிகள் செயல் படுகின்றன.


கைமோடிரிப்ஸின் குறிப்பிட்ட அமினோ அமிலத்துடன் இணைந்துள்ள பெப்டைடு பிணைப்புகளை நீராற்பகுக்கின்றன.

கணைய அமைலேஸ்


கணைய லிப்பேஸ்


கணைய நியூக்ளியேஸ்

நியூக்ளிக் அமிலம் நியூக்ளியோடைடுகள் + நியூக்ளியோசைடுகள் 

பிரான்னரின் சுரப்பியின் சுரப்பு பொருளும், சிறுகுடல் சுரப்பிகளின் சுரப்புப் பொருளும் இணைந்து சக்கஸ் என்டரிகஸ் எனும் சிறுகுடல் நீரை உருவாக்குகின்றன.

சிறுகுடல் நீர் உள்ள நொதிகளான மால்டேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ் (இன்வர்ட்டேஸ்). லிப்பேஸ்கள் டைபெப்டிடேஸ்கள், நியூக்ளியோசைடேஸ்கள் ஆகியன பித்தநீர் மற்றும் கணைய நீரால் செரிக்கப்பட்ட உணவின் மீது வினையாற்றுகின்றன.

Tags : Digestion and Absorption | Zoology செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல்.
11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Answer the following questions Digestion and Absorption | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்