சுவாசம் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 07:28 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : முக்கிய கலைச்சொற்கள்

முக்கிய கலைச்சொற்கள்

 

கலைச் சொற்கள்  - விளக்கம்

1. மூச்சுத் தடை அப்நோயியா (Apnoea) - தற்காலிகமாகச் சுவாசம் நிறுத்தப்படுதல்

2. புத்தகச் செவுள்கள் (Book gills) - நீர்வாழ் லிமுலஸில் உள்ள சுவாச உறுப்பு

3. புத்தக நுரையீரல் (Book lungs) - தேள், சிலந்தி போன்றவற்றின் சுவாச உறுப்பு

4. சளி (Cold) - நாள்பட்ட நுரையீரல் பாதை அடைப்பு நோய்

5. டிஸ்ப்னோயா - வலியுடன் கூடிய சுவாசம்

6. குரல் வளை மூடி (Epiglottis) - குரல்வளை திறப்பை மூடியுள்ள மெல்லிய மீட்சித் தன்மை கொண்ட குருத்தெலும்பாலான சிறு மடலாகும். இது குரல் வளைக்குள் உணவு செல்வதைத் தடுக்கிறது.

7. ஹீமோகுளோபின் (Haemoglobin) - முதுகெலும்பிகளின் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள சிவப்பு நிறமியாகும். இது இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைத் தருகிறது.

8. ஹெர்ரிங் ப்ரூயர் எதிர்வினை (Herring Breuer Reflex) - நுரையீரல் அதிகமாக விரிவடைதலுக்கு எதிரான தற்காப்பு வினை

9. ஹைபாக்ஸியா (Hypoxia) - தேவையான அளவிற்குத் திசுக்கள் ஆக்ஸிஜனை பெறாத நிலை.

10. காற்றுடைமார்பு (Pneumothorax) - புளூரல் இடைவெளியில் காற்றுள்ள நிலை. இது நுரையீரல்களைச் சிதைக்கும்.

11. குரல் நாண் (Vocal cords) - ஒலி உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நாண்கள். இதற்குக் குரல்வளை (அ) ஒலிப்பெட்டகம் என்னும் பெயருமுண்டு

12. கொட்டாவி (Yawning) - கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதனால் ஏற்படும் நீண்ட நேர உட்சுவாசம்

Tags : Respiration | Zoology சுவாசம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Glossary Respiration | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : கலைச்சொற்கள் - சுவாசம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்