Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Chemistry : Periodic Classification of Elements

   Posted On :  18.09.2023 12:15 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

1. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

விடை :

தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும்.

 

2. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

விடை :

தொகுதிகள்:

தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள அமைப்புதொகுதிகள்ஆகும். மொத்தம் 185 தொகுதிகள் உள்ளன.

வரிசைகள்:

தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு வரிசைகள்' ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உள்ளன.

 

3. மெண்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

விடை :

பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

(எகா) கடின உலோகங்கள் : இரும்பு (Cu), வெள்ளி (Ag)

மென் உலோகங்கள் : சோடியம் (Na), பொட்டாசியம் (K)

• H-க்கு என்று ஒரு தனி இடம் இல்லை . அலோகமாகிய ஹைட்ரஜன், Li, Na & K போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டது.

கூடிக்கொண்டே செல்லும் அணுநிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடியவில்லை. (.கா) Cu & Ni ,Te & I

தனிம வரிசை அட்டவணையில் ஓரகத் தனிமங்களுக்கு (ஐசோடோப்புகள்) இடம் கொடுக்கப்படவில்லை

 

4. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.

விடை :

 i) எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றார் போல் உள்ளன.

ii) தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடை மட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்புவரிசைகள்ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உண்டு.

iii) தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.

iv) தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்திதொகுதிகள்ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

v) ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்களின் பண்பிற்கு ஏற்ப இவைகள் பல குடும்பங்களாக பிரிக்கப்படுகின்றன.


பிற நூல்கள்

CONCISE Inorganic chemistry: 5th Edition by J.D. Lee

Inorganic Chemistry by P.L.Soni The Periodic table: Its story and its significance: Eric R. Scerri

 

இணைய வளங்கள்

https://www.ptable.com/

https://iupac.org/what-we-do/periodic-table-ofelements/

www.rsc.org/periodic-table

https://sciencestruck.com/periodic-table-facts

 

கருத்து வரைபடம்



இணையச்செயல்பாடு

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

இச்செயல்பாடு மூலம் தனிமங்களின் பண்புகளை அறிதல்.

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் செயல்பாட்டின் இணையப் பக்கத்திற்குச் செல்க. மேலும், 'Royal Society of Chemistry என்ற அலைபேசி செயலியையும் பின்வரும் உரலியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படி 2. எந்தத் தனிமத்தின் பண்பினை அறிய விழைகிறோமோ, கட்டகத்தில் அந்தக் குறிப்பிட்ட தனிமத்தைச் சொடுக்கவும்.

படி 3. இப்பக்கத்தின் வலமேற் புறத்தில் உள்ள விருப்பத்தேர்வினைச் சொடுக்கி, தனிமத்தின் பயன்களையும், பண்புகளையும் அறியலாம். படி 4. இவ்வாறு அனைத்து தனிமங்களின் பயன்களையும் பண்புகளையும் நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

உரலி :https://play.google.com/store/apps/details?id=org.rsc.periodictable or Scan the QR Code.


Tags : Periodic Classification of Elements | Chemistry | Science தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Periodic Classification of Elements : Answer the following questions Periodic Classification of Elements | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை