Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Periodic Classification of Elements

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு 12

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?

அ) நவீன தனிம அட்டவணை

ஆ) ஹுண்ட்ஸ் விதி

இ) எண்ம விதி

ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு

விடை :

இ) எண்ம விதி


2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ……………… இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.

அ) அணு எண்

ஆ) அணு நிறை

இ) ஒத்த தன்மை

ஈ) முரண்பாடு

விடை :

அ) அணு எண்


3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் …………………….. தொகுதி ………………….. தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.

அ) 7,18

ஆ) 18,7

இ) 17,8

ஈ) 8, 17

விடை :

ஆ) 18,7

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. டாப்ரீனீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ………………… ஆகும்.

விடை :

சராசரி

2. அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ……………….

தொகுதியில் காணப்படும்.

விடை :

18வது

3. தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாப்ரீனீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ………………… ஆகும்.

விடை :

அணு நிறை

4. திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ……………………… .

விடை :

பாதரசம்

 

III. பொருத்துக

1. மும்மை விதி - நியூலாந்து

2. கார உலோகம் - கால்சியம்|

3. எண்ம விதி - ஹென்றி மோஸ்லே

4. கார மண் உலோகம் - சோடியம்

5. நவீன ஆவர்த்தன விதி – டாபர்னீர்

விடை :

1. மும்மை விதி - டாபர்னீர்

2. கார உலோகம் - சோடியம் 

3. எண்ம விதி - நியூலாந்து

4. கார மண் உலோகம் - கால்சியம்

5. நவீன ஆவர்த்தன விதி –  ஹென்றி மோஸ்லே

 

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

விடை :

சரி


2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.

விடை :

தவறு

உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும்.


3. உலோகப் போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.

விடை :

சரி


4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

விடை :

சரி


5. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

விடை :

சரி

 

V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்

1. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.

விடை :

அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

Tags : Periodic Classification of Elements | Chemistry | Science தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Periodic Classification of Elements : One Mark Questions Answers Periodic Classification of Elements | Chemistry | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை