Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Chemistry : Carbon and its Compounds

   Posted On :  18.09.2023 03:24 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

IV. சுருக்கமாக விடையளி

1. வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்

விடை :


கிராஃபைட்:

1. ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது

2. மிருதுவானது. தொடுவதற்கு வழவழப்பானது, ஒளி புகாத் தன்மையுடையது

3. அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளது

4. இது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும்

வைரம்:

1. ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது

2. கடினமானது, அடர்த்தியானது, ஒளிபுகும் தன்மையுடையது.

3. நான்முகி அலகுகள் முப்பரிமான அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன

4. இது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது

 

2. C2H6O ன் மாற்றியங்களை எழுதுக.

விடை :

மூலக்கூறு வாய்பாடு:

C2H6O

அமைப்பு மாற்றியங்களின் வாய்பாடு:

CH3 – CH2 – CH2 – CH3

CH3 - O – CH3

பெயர்:

எத்தில் ஆல்கஹால்

டை மெத்தில் ஈதர்

 

3. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை . ஏன்?

விடை :

கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்காது. ஏனெனில், கார்பனின் இணைதிறன் 4.

கார்பன் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டாலோ அல்லது இழந்தாலோ வெளிமட்டத்திலுள்ள நான்கு எலக்ட்ரான்களும் அயனிப் பிணைப்புகளை உருவாக்காது.

 

4. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

விடை :

இவை குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, நீர் நிலைகளைப் பாதிக்கின்றன.

இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேடை உண்டு பண்ணுகின்றன,

 

V. விரிவாக விடையளி

1. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?

விடை :

சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும்.

சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன்.

கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளைச்சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.

 

2. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

விடை :

1) ஆக்சிஜனேற்றம்: (ஆக்சிஜனோடு வினைபுரிதல்)

உயர் வெப்பநிலையில் கார்பன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றது.

2C(s) + O2(g) à 2CO(g) + வெப்பம்

C(s) + 02(g) à CO2(g) + வெப்பம்

ii) நீராவியுடன் வினை :

கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜனைத் தருகிறது. இக் கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.

C(s)+H2O(g) à CO(g) + H2(g)

iii) கந்தகத்துடன் வினை :

உயர் வெப்ப நிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன்டை சல்ஃபைடை உருவாக்கும்.

C(s) + S(g) à CS2(g)

iv) உலோகத்துடன் வினை:

உயர்வெப்பநிலையில்கார்பன்உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளைத் தருகிறது.

W(s) + C(g) à WC(S)

 

3. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை? அவற்றின் தன்மையை விவரி.

விடை :

ரெசின் குறியீடுகள்

1 #3PVC,

2 # 6 PS,

3 #7 ABS/PC

1. PVC - பாலிவினைல் குளோரைடு:


இதில் காட்மியம் மற்றும் காரியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. • இதில் உள்ள தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோனைப் பாதிக்கிறது.

• PVC யை எரிப்பதால் உண்டாகும் டை ஆக்ஸின்கள் மனிதர்களுக்கு தீமையை உண்டாக்குகிறது.

2. PS - பாலிஸ்டைரீன் நெகிழிகள்:


ஸ்டைரின் - இதில் உள்ள முக்கிய பொருளாகும். இது புற்று நோயை உண்டாக்கும்.

இது சிதைய 100 - 10 லட்சம் ஆண்டுகள் ஆகும்.

உணவுப்பொருள்கள் மற்றும் பானங்கள் சூடாக இருக்கும்போது ஸ்டைரின் அப்பொருள்களுக்குள் கலக்கிறது

3. PC - பாலி கார்பனேட் நெகிழிகள்:


• PC நெகிழியில் பிஸ் பீனால் A (BPA) பொருள் உள்ளது

உணவு மற்றும் பானங்களில் இதை பயன்படுத்தும்போது வெளிவருகிறது. • இது மனித உடலில் ஹார்மோன் அளவை குறைத்து அல்லது அதிகரிக்கச்செய்து, உடல் செயல்படும் வீதத்தை மாற்றுகிறது.

 

VI. உயர் சிந்தனை வினாக்கள்

1. கார்பன்பெரும்பாலும் இணைந்தநிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

விடை :

 சங்கிலித் தொடராக்கம் என்ற பண்பினால் கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.

 

2. குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?

விடை :

குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, நச்சுத்தன்மையுடைய கார்பன் மோனாக்சைடு வாயு உருவாகிறது.

மனிதர்கள் இதை சுவாசிக்கும்போது இது மனித உடலுக்குள் நுழைந்து ஹீமோகுளோபினைத் தாக்குகிறது.

இது ஹீமோகுளோபினில் காணப்படும் ஆக்சிஜனை இடப்பெயர்ச்சி செய்து மனித உடலின் பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செல்ல விடாமல் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

 

3. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

விடை :

டையாக்ஸின் PVC நெகிழியை எரிப்பதால் உருவாகிறது.

டையாக்ஸினோடு தொர்புடைய நெகிழி வகை ரெசின் குறியீடு #3 PVC

டையாக்ஸின்கள் மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள்கள்.

 

4. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

விடை :

யோகா ரெசின் குறியீடு #2 HDPE கொண்ட நெகிழியாலான தண்ணீர் புட்டியை வாங்க வேண்டும்.

ஏனெனில், ரெசின் குறியீடு #2 HDPE நெகிழியானது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.


பிற நூல்கள்

1. Modern Inorganic Chemistry by R.D Madan

2. Fundamentals of Organic Chemistry by B.S.Bahlet.al

3. Organic Chemistry by Paula Bruise, 6th Edition

 

இணைய வளங்கள்

http://www.chemicool.com/elements/carbon.html

https://en.wikipedia.org/wiki/Carbon

https://courses.lumenlearning.com/introchem/

chapter/allotropes-of-carbon/

 https://plastics.americanchemistry.com/

PlasticResin-Codes-PDF/

 

கருத்து வரைபடம்


 

இணையச்செயல்பாடு

கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

மூலக்கூறு திருத்தி மற்றும் காட்சிப்படுத்துதல் கருவி கொண்டு கார்பன் பிணைப்பினைச் சோதனை செய்தல்.

படி 1. "Avogadro" என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள உரலி விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்துக.

படி 2. Avogadro செயலியில் உள்ள "Element" என்பதில் கார்பனைத் தேர்வு செய்க. மேலும் "Single" or "Double" or - "Triple" ஆகியவற்றில் தேவையானதைத் தேர்வு செய்க.

 படி 3. கருப்புத்திரையில் சுட்டியின் குறிமுள்ளை வைத்து கார்பனின் அமைப்பை வரைக. அதனைத் தொடர்ச்சியாக இழுப்பதன் மூலம் பிணைப்பை நீட்டிக்கவும். ஈத்தேன், மீத்தேன் போன்றவைகளின்

கட்டமைப்பை உருவாக்கவும்.

படி 4. "Auto Rotation" என்பதைத் தேர்வு செய்து, சுட்டியின் உதவியுடன் மூலக்கூறுகளின் கட்டமைப்பைச் சுழற்றுக. வரையப்பட்ட இணைப்பின் பல்வேறுபட்ட பண்புகளைக் காண View இல் உள்ள Properties யைச் சொடுக்கவும்.

உரலி: https://avogadro.cc/ or Scan the QR Code.

Tags : Carbon and its Compounds | Chemistry | Science கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Carbon and its Compounds : Answer the following questions Carbon and its Compounds | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்