Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Chemistry : Applied Chemistry

   Posted On :  18.09.2023 06:12 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

IV. சுருக்கமாக விடையளி.

1. கார்பன் தேதியிடல் என்றால் என்ன?

விடை :

இது C-14 ஐசோடாப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.


2. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

விடை :

உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மூட்டிகள் எனப்படும். * இவை இருவகைப்படும்.

பொது மயக்கமூட்டிகள்

குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்

 

3. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

விடை :

தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்கு இரசாயன உரங்கள் தேவைப்படுகிறது.

பயிர் விளைச்சளை அதிகரிக்கவும், நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

 

4. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?

விடை :

குற்றம் பற்றிய விசாரணைக்கு அறிவியல் கொள்கைகள், மற்றும் நுட்பங்களை தடயவியல் வேதியியல் பயன்படுத்துகிறது.

1 - கைரேகை பதிவு,

2 - ஆல்கஹால் பரிசோதனை,

3 - தடய நச்சுவியல்

 

V. விரிவாக விடையளி.

1. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

விடை :

1. அமிலச் சாயங்கள் :

அமிலத் தன்மை கொண்டவை.

விலங்குத் தோல், செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.

.கா : பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்

2. காரச் சாயங்கள் :

காரத்தொகுதிகளைக் கொண்டுள்ளன.

தாவர மற்றும் விலங்கு நூலிழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன. 3. மறைமுக சாயம் :

பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை .

எனவே இவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் லேக் எனும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றன.

.கா. அலிசரின்.

4. நேரடி சாயங்கள் :

பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன.

.கா : காங்கோ சிவப்பு

5. தொட்டிச்சாயம் :

பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது. பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்கு பயன்படாது.

சாயமிடுதலை தொடர்ச்சியாக செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால் இவை தொட்டிச் சாயம் எனப்படுகிறது.

.கா : இண்டிகோ.

 

2. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.

விடை :

•  ஒரு சில சிறப்பான செயல்பாடுகளுக்காக உணவில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உணவுச் சேர்க்கைகள் எனப்படும்.


 

VI. உயர் சிந்தனை வினாக்கள்

1. கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

விடை :

கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்ய முடியாது.

ஏனெனில் அவை மறு ஊட்டம் செய்ய இயலா மின்கலங்கள்.

அவற்றை மறு ஊட்டம் செய்ய முயற்சி செய்தால் மின்கலங்கள் வெப்பமாகி கசிவு ஏற்படலாம் அல்லது வெடிக்க நேரிடலாம்.

 

2. சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?

விடை :

நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைதடுப்பான்களை பயன்படுத்த வேண்டும்.

.கா : அயோடோபார்ம்

எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.

.கா : ஆஸ்பிரின்.

காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சல் நிவாரணிகளை பயன்படுத்தவேண்டும். .கா. ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால்.

 

3. ஒரு பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

விடை :

பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5 எனில் அது அதிக அமிலத்தன்மை உடையது.

எனவே அமிலத்தன்மையை குறைப்பதற்கு காரத்தன்மையுடைய உரங்களை பயன்படுத்த வேண்டும்.

.கா : கால்சியம் பாஸ்பேட், அம்மோனியம் நைட்ரேட்.


பிற நூல்கள்

1. Nanomaterials and Nanochemistry by Catherine Brechignac

2. Nuclear and Radiochemistry – Fundamentals and applications by Karl Heinrich Lieser

3. Food Chemistry (Third Edition) by Owen Fennema

 

இணைய வளங்கள்  

https://en.wikipedia.org/wiki/Agricultural_ chemistry 

https://www.medicalnewstoday.com/ articles/321108.php 

https://www.youtube.com/watch?v=kC1a POqoYWC


கருத்து வரைபடம்



இணையச்செயல்பாடு

பயன்பாட்டு வேதியியல்

படி 1. கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப்பயன்படுத்திச் செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும். "JAVA Script" தேவையெனில் அனுமதிக்கவும்.கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைப் படித்துப் பார்த்து செயல் விளக்கத்தைச் செய்து கற்க அறிந்து கொள்ளவும்.

படி 2. வருடங்களின் எண்ணிகையை உயர்த்துவதற்க்கு "Years Passed" என்னும் பொத்தானைச் சொடுக்கவும்.பின்பு "Count the Remaining Atom" என்பதை அழுத்தி அணுக்களின் "Daughter atoms"யை தெரிந்துகொள்ளவும்.

 படி 3. கூர் நோக்குகளை பதிவுசெய்ய விளக்கத்தின் கீழே உள்ள "Table/Graph" என்னும் பொத்தானை பயன்படுத்தவும்.

படி 4. அணுக்களின் இழிப்பு நிலையை பார்பதற்க்கும் அதனை கணைக்கிடுவதற்க்கும் "video" பொத்தானை அழுத்தவும்.

உரலி:http://www.glencoe.com/sites/common_assets/science/virtual_labs/E18/E18.html or Scan the QR Code.

Tags : Applied Chemistry | Chemistry | Science பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Applied Chemistry : Answer the following questions Applied Chemistry | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்