Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

விலங்குலகம் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Animal Kingdom

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 17

விலங்குலகம்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக.

அ) மெல்லுடலிகள்

ஆ) துளையுடலிகள்

இ) குழியுடலிகள்

ஈ) முட்தோலிகள்

விடை :

ஈ) முட்தோலிகள்


2. மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்

ஆ) குழியுடலிகள்

இ) வளைதசையுடலிகள்

ஈ) கணுக்காலிகள்

விடை :

ஆ) குழியுடலிகள்


3. பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்

ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்

இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்

விடை :

இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்


4. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.

அ) பல்லி

ஆ) பாம்பு

இ) முதலை

ஈ) ஓணான்

விடை :

இ) முதலை


5. மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அ) ஏக்ரேனியா

ஆ) ஏசெபாலியா

இ) ஏப்டீரியா

ஈ) ஏசீலோமேட்டா

விடை :

அ) ஏக்ரேனியா


6. இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்

ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்

ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு

விடை :

ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்


7. குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்

ஆ) மீன், தவளை, பல்லி,மாடு

இ) மீன், தவளை, பல்லி, பாம்பு

ஈ) மீன், தவளை, பல்லி, காகம்

விடை :

இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு


8. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்

ஆ) தவளை

இ) பறவை

ஈ) வௌவால்

விடை :

இ) பறவை


9. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) உடல் செல்கள்

ஆ) நெஃப்ரீடியா

இ) உடற்பரப்பு

ஈ) சொலினோசைட்டுகள்

விடை :

அ) உடல் செல்கள்


10. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது?

அ) ஹைடிரா

ஆ) மண்புழு

இ) நட்சத்திர மீன்

ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு)

விடை :

ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை ……………………… .

விடை :

ஆஸ்டியா

2. டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………… ல் காணப்படும்.

விடை :

மெல்லுடலிகள்

3. ஸ்கேட்ஸ் என்பது ………………………. மீன்களாகும்.

விடை :

குருத்தெலும்பு

4. ………………………….. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.

விடை :

தலைபிரட்டை

5. …………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.

விடை :

லாம்பிரே  , வட்டவாயுடையவை

6. ……………….. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.

விடை :

தாய் சேய் இணைப்பு சிசு

7. முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………….. பாலூட்டிக்கு உதாரணமாகும்

விடை :

முட்டையிடும்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது.

விடை :

தவறு கால்வாய் மண்டலம் துளையுடலிகளில் காணப்படுகிறது.


2. இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.

விடை :

சரி


3. வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும்.

விடை :

தவறு

வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவர் ஆகும். (அ)

கணுக்காலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும்.


4. மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும்

விடை :

தவறு

மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.


5. பலனோகிளாசஸ் குறுஇழை வழி உணவூட்டிகளாகும்.

விடை :

சரி


6. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.

விடை :

சரி


7. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன.

விடை :

தவறு

மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.


8. முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.

விடை :

சரி


9. பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.

விடை :

சரி

 

IV. பொருத்துக.

அ) குழியுடலிகள் - நத்தை

ஆ) தட்டைப்புழுக்கள் - நட்சத்திரமீன்

இ) முட்தோலிகள் - நாடாப்புழு

ஈ) மெல்லுடலிகள் – ஹைட்ரா

விடை :

அ) குழியுடலிகள் - ஹைட்ரா

ஆ) தட்டைப்புழுக்கள் - நாடாப்புழு

இ) முட்தோலிகள் - நட்சத்திரமீன்

ஈ) மெல்லுடலிகள் - நத்தை

Tags : Animal Kingdom | Biology | Science விலங்குலகம் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Animal Kingdom : One Mark Questions Answers Animal Kingdom | Biology | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - விலங்குலகம் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம்