Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

விலங்குலகம் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Animal Kingdom

   Posted On :  18.09.2023 06:26 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. மிகச் சுருக்கமாக விடையளி.

1. வகைப்பாட்டியல் - வரையறு.

விடை :

அடிப்படைக்கொள்கைகள், முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

 

2. கொட்டும் செல்கள் என்றால் என்ன?

விடை :

குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்

 

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?

விடை :

உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

 

4. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

விடை :

1 - செவுள்கள்,

2 - நுரையீரல்,

3 - தொண்டை .

4 - தோல்

 

5. நட்சத்திர மீன்கள் எவ்வாறு இடப்பெயர்ச்சி செய்கின்றன?

விடை :

நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

 

6. ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில் விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.

விடை :

இல்லை

1. ஜெல்லி மீன் குழியுடலிகள்

2. நட்சத்திர மீன் முட்தோலிகள்

3. இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

4. ஆனால் மீன் முதுகெலும்புள்ளவை

 

7. தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?

விடை :

இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

 

VI. சுருக்கமாக விடையளி

1. தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.

விடை :

1 உண்மையான உடற்குழி உண்டு

2. சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

3. உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது. 4. கழிவு நீக்கம் நெஃப்ரிடியாவால் நடக்கிறது.

5. மூளையாகக்கொண்ட நரம்பு மண்டலம் காணப்படுகின்றது.

6. டீராக்கோபோர் லார்வா இவற்றின் பொதுலார்வா ஆகும்.

(.கா) மண்புழு, அட்டை

 

2. தட்டைப்புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக.

விடை :

தட்டைப்புழுவினம்:

1. தொகுதி : பிளாட்டி ஹெல்மின்தஸ்

2. உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது

3. உடல் கண்டங்களைக் கொண்டது

4. கழிவுநீக்கம் சுடர்செல்கள் மூலம் நடைபெறுகின்றன:

5. ஒட்டுண்ணிகள்

உருளைப்புழுவினம்:

1. தொகுதி : நிமட்டோடா

2. உணவுக்குழல் நீண்ட குழாய் அமைப்புடையது

கண்டங்களற்றது.

4. கழிவுநீக்கம் கழிவு நீக்க கால்வாய் மூலம் நடைபெறுகிறது.

5. ஒட்டுண்ணி மற்றும் தனித்து வாழ்பவை.

 

3. தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.

விடை :

 

 

4. மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.

விடை :

1. மீன்கள் நீரில் வாழ்பவை மற்றும் குளிர்ரத்தப்பிராணிகள்

2. உடல் படகு போன்று அமைந்துள்ளது

3. இணைத் துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.

4. உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.

5. தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

 

5. இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.

விடை :

நீர் வாழ் பண்புகள்:

தோல் ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.

பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.

சுவாசம் செவுள் மூலம் நடைபெறுகிறது.

நிலவாழ் பண்புகள்:

இரண்டு ஜோடி கால்களைப் பெற்றுள்ளது.

நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

 

6. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?

விடை :

1. பறவைகளில் ஈரினைக்கால்கள் உண்டு. இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளன.

2. பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

 

VII. விரிவாக விடையளி

1. முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.

விடை :

1. முன் முதுகு நாணிகள் முதுகெலும்பிகளின் முன்னோடிகள்.

2. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏக்ரேனியா என்றழைக்கப்படுகின்றன.

3. முகுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை மூன்று துணைத் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.

i) அரை முதுகு நாணிகள்

ii) தலை முதுகு நாணிகள்

iii) வால் முதுகு நாணிகள்

i அரைமுதுகு நாணிகள் :


1. கடல் வாழ் உயிரிகள்

2. இவை புழு வடிவமுடையது

3. உடல் மென்மையானது (உடற்கண்டமற்றவை) இருபக்க சமச்சீர்

உடையவை.

4. இவைகள் மூவடுக்கு உயிரிகள்

5. முதுகு நாணானது தொண்டைப் பகுதிகள் மேல்புறத்திலிருந்து முன்னோக்கிய சிறிய நீட்சியாக உள்ளது.

.கா - பலனோகிளாஸஸ்

ii. தலை முதுகு நாணிகள்:


1. இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகு நாணிகள்

இவற்றில் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.

3. முதுகு நாண் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான

அமைப்பாகும்

.கா - ஆம்பியாக்ஸிஸ்

iii. வால் முதுகு நாணிகள்:


1. முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.

2. முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில்

ஒட்டி வாழ்பவை.

3. உடலைச் சுற்றி டியுனிக் எனும் உரை உண்டு

.கா - அசிடியன்

 

2. தொகுதி - கணுக்காலிகளைப் பற்றி எழுதுக

விடை :

1. அதிக சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி.

2. வர்க்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.

3. இதன் உடல், தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

4. உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.

5. உடற்குழி ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.

6. நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக்குழல்கள் இல்லை.

7. தோலுரித்தல் மூலம் புறச் சட்டகத்தை களைகிறது.

8. சுவாசம் டிரக்கியா மற்றும் புத்தக நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.

9. பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் மூலமும் இறால்களில் பச்சைச் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.

.கா- எட்டுக்கால்பூச்சி, நண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள்


பிற நூல்கள்

1. Manual of Zoology Vol (Invertebrata), M. Ekambaranatha Ayyar and T.N. Ananthakrishnan, Reprint 2003. S. Viswanathan (Printers and Publishers) Pvt. Ltd Chennai.

2. Manual of Zoology Vol. I. Part. II. (Invertebrata), M. Ekambaranatha Ayyar and T.N. Ananthakrishnan, Reprint 2003. S. Viswanathan (Printers and Publishers) Pvt. Ltd Chennai.

3. Manual of Zoology Vol. II. Chordata M. Ekambaranatha Ayyar and T.N. Ananthakrishnan, Reprint 2003.S.Viswanathan (Printers and Publishers) Pvt. Ltd Chennai.

4. Chordate Zoology E. L. Jordan and P. S. Verma.Reprint 2003. S. Chand .and Company, New Delhi.

 

இணைய வளங்கள்  

http://home.pcisys.net/-dlblanc/taxonomy.html

http://can-do.com/uci/lessons 98/Invertebrates.

html http://www.student.loretto.org/zoology/chordates.


கருத்து வரைபடம்

Tags : Animal Kingdom | Biology | Science விலங்குலகம் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Animal Kingdom : Answer the following questions Animal Kingdom | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - விலங்குலகம் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 17 : விலங்குலகம்