Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Plant Physiology

   Posted On :  18.09.2023 06:55 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்: புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. மிகச் சுருக்கமாக விடையளி.

1. திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?

விடை :

அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.

 

2. பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.

) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.

விடை :

வேர்

 

) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.

விடை :

தண்டு

 

3. ஒளிசார்பசைவு (phototropism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.

விடை :

ஒளிச் சார்பசைவு :

1. ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையும்

.கா. தண்டுப்பகுதி ஒளியை நோக்கி வளர்தல்

3. நிரந்தரமானது மற்றும் மீளாதது

ஒளியுறு வளைதல் :

1. ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல்

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையாது.

.கா. டான்டிலியான் மலர்கள் காலையில் திறந்த

நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படுதல்

3. தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது.

 

4. ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் × ஆனது Y ஆற்றலாக மாறுகிறது ) × மற்றும் Y என்றால் என்ன?

) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையைக் கொண்டவை? ஏன்?

விடை :

) ×-சூரிய ஒளி Y-வேதியாற்றல்

) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.

 

5. நீராவிப் போக்கு - வரையறு.

விடை :

நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.

 

6. இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?

விடை :

காப்பு செல்கள்

 

VI. சுருக்கமாக விடையளி.

1. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.

) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்

) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்

விடை :

. திசைசார் அசைவு,

. திசை சாரா அசைவு

 

2. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.

விடை :

 எதிர் புவி சார்பசைவு ஆகும்.

எதிர்புவி சார்பசைவு உடைய வேர்களை உருவாக்குகின்றன.

இவை 180° கோணத்தில் செங்குத்தான சுவாச வேர்களைக் கொண்டவை.

 

3. 

விடை:

6H2O C6H12O6

 

4. பச்சையம் என்றால் என்ன?

விடை:

தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் - பச்சையம் எனப்படும்.

 

5. நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?

விடை:  

வேர் :

வேர்கள் பூமியில் நிலையாக நிற்ப்பதற்காக புவியை நோக்கி வளர்கிறது. எனவே வேர்கள் நேர் புவிசார்பசைவை கொண்டுள்ளது.

 

6. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.

விடை:

தொட்டால் சிணுங்கி தாவரத்தில் ஏற்படும் அசைவு :

1. நடுக்கமுறு வளைதல்.

2. தொடுதல் மூலமாக தாவரத்தில் ஏற்படும் வளைவு.

சூரிய காந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவு :

1. ஒளியுறு வளைதல்.

2. ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல்.

 

7. ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்?

விடை:

ஒரு தொட்டி ரோஜா செடியின் மண்பரப்பு மற்றும் கிளை பகுதியை ஒரு பாலித்தின் பையினால் மூடவும்.

இந்த அமைப்பை ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் பாலித்தின் பையில் நீர் துளிகள் ஒட்டியுள்ளது

இந்த நிகழ்வு இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடப்பதை நிரூபிக்கிறது.

 

8. இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.

விடை:

இலைத்துளை நீராவிப் போக்கு :

1. இலைத்துளை வழியாக நடைபெறுகிறது

2. எல்லா தாவரங்களிலும் நடைபெறுகிறது

3. 90-95% நீர் இழக்கப்படுகிறது.

பட்டைத்துளை நீராவிப் போக்கு :

1. பட்டைத்துளை வழியாக நடைபெறுகிறது.

2. மரப்பட்டைகளை உடைய பெரிய மரங்களில் காணப்படுகிறது.

3. மிக குறைந்த அளவு நீர் இழக்கப்படுகிறது

 

9. தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?

விடை:

வேர் - புவியீர்ப்பு விசை

தண்டு - சூரிய ஒளி

 

VII. விரிவாக விடையளி.

1. திசை சார்பசைவு மற்றும் திசை சாரா அசைவு வேறுபடுத்துக.

விடை:

திசை சார் அசைவுகள் :

1. அசைவுகள், திசைத் தூண்டலின் ஒரு திசையைப் பொருத்தமையும்

2. வளர்ச்சியைச் சார்ந்தது

3. ஏறக்குறைய நிரந்தரமானது. மற்றும் மீள் தன்மையற்றது

4. அனைத்து தாவரங்களிலும் காணப்படும்

5. மெதுவான செயல்

6. .கா. வேரின் வளர்ச்சி

திசை சாரா அசைவுகள்:

1. இவை, திசைத் தூண்டலின் ஒரு திசையைச் சார்ந்து அமையாது.

2. வளர்ச்சியைச் சாராதது

3. தற்காலிகமானது மீள் தன்மை உடையது.

4. சில சிறப்புத் தன்மை பெற்ற தாவரங்களில் காணப்படும் 

5. விரைவான செயல்

6. .கா. தொட்டால் சிணுங்கி

 

2. நீராவிப்போக்கின் வகைகளை விவரி.

விடை:

இலைத்துளை நீராவிப்போக்கு :

 பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.

கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு :

புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூடிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.

பட்டைத்துளை நீராவிப்போக்கு :

இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகை தாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

 

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

1. A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில் பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.

) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.

) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.

) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக.

) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒரு தாவரத்தின் பெயரினை எழுதுக.

விடை:

) தாவரம் A - ஒளியுறு வளைதல்

தாவரம் B - இருளுறு வளைதல் கொண்டுள்ளது

) A - டான்டலியன்

B - நிலவுமலர்

) C- நடுக்கமுறு அசைவு

) மைமூசா பியூடிகா

 

2. கற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.

) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?

) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?

) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?

) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் என்ன?

விடை:

) ஒளிச்சேர்க்கைக்குசூரிய ஒளி' அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டது.

) இலையில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க,

) அயோடின் கரைசலைக் கொண்டு ஸ்டார்ச் சோதனை செய்தல்.

) கார்பன் டை ஆக்ஸைடு, நீர், சூரிய ஒளி மற்றும் பச்சையம்.


பிற நூல்கள்

1. Plant physiology by Devlin and Witham first Indian edition 1986.

2. Modern practicals botany B.P. Pandey vol. II.  New print 2003.

3. Plant physiology by V.K. Jain first edition 2003.

 

இணையத் தொடர்புகள்  

http://web.mit.edu/esgbio

http://www.bioedonline.org/

http://www.biology.arizona.edu/default.html

 

கருத்து வரைபடம்


Tags : Plant Physiology | Biology | Science தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Plant Physiology : Answer the following questions Plant Physiology | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - தாவர உலகம் - தாவர செயலியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்