Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சுருக்கமாக விடையளிக்கவும்
   Posted On :  05.01.2024 04:04 am

11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல்

சுருக்கமாக விடையளிக்கவும்

11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல் : சுருக்கமாக விடையளிக்கவும், விரிவான விடையளி

III. சுருக்கமாக விடையளி


26. பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.

விடை :

வளி மண்டலத்திலுள்ள சில வாயுக்கள் வெப்பத்தை சிறைப்படுத்தும் விளைவே பசுமைக்குடில் விளைவு எனப்படும்.

பூமியின் வளிமண்டலமானது சூரியனிலிருந்து வெளிப்படும் கட்புலனாகும் ஒளியின் பெரும் பகுதியை அனுமதித்து பூமியின் மேற்பரப்பை அடையச் செய்கிறது. பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியினால் வெப்பமடைகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதியை பூமி அதிக அலைநீளம் கொண்ட ஒளியாக (அகச்சிவப்புக் கதிர்கள்) வளிமண்டலத்தை நோக்கி திருப்பி அனுப்புகிறது.

வெப்பத்தின் ஒரு பகுதியானது வளிமண்டலத்தில் உள்ள CH4, CO2, CFC மற்றும் நீராவியால் சிறைபிடிக்கப்படுகிறது. அவைகள் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சுகின்றன. இதனால் பூமியினால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் பெரும்பகுதியை வெளியே செல்லாமல் தடுக்கின்றன. உறிஞ்சப்பட்ட கதிர்வீச்சின் ஒருபகுதி மீண்டும் பூமியின் மேற்பரப்பின் மீதே திருப்பி செலுத்தப்படுகிறது. எனவே பூமியின் மேற்பரப்பு பசுமைக்குடில் விளைவு எனும் நிகழ்வால் வெப்பமடைகிறது.

● "பூமியின் மேற்பரப்பால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்பு கதிர்களை வளிமண்டலத்திலுள்ள CO2 படலம் உறிஞ்சி சிறைப்பிடிக்கும் காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு வெப்பமடையும் நிகழ்ச்சி பசுமைக்குடில் விளைவு என வரையறுக்கப்படுகிறது. பசுமைக்குடில் விளைவின் காரணமாக பூமி வெப்பமடையும் நிகழ்வு உலகம் வெப்பமாதல் என்றழைக்கப்படுகிறது.


27. இந்திய தரநிலை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடிநீருக்கான தரநிலை அளவுகளை குறிப்பிடுக.

விடை 

குடிநீருக்கான பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள்



28. பனிப்புகை என்றால் என்ன? தீவிர பனிப்புகை எவ்வாறு ஒளிவேதிப் பனிப்புகையிலிருந்து வேறுபடுகிறது

விடை


தீவிர பனிப்புகை () லண்டன் பனிப்புகை

● SO2, SO3, ஈரப்பதம் நிலக்கரி புகை () மூடுபனியால் உருவாதல்

இது குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த கால நிலையில் உருவாகிறது. காலையில் உருவாகி சூரிய உதயத்திற்கு பிறகு மோசம் அடைகிறது.

● SO2 ஆனது தூண்டப்பட்ட ஆக்ஸிஜனேற்றத்தால் SO3 ஆக மாற்றமடைந்து, ஈரப்பதத்துடன் வினைப்பட்டு கந்தக அமில காற்றுக் கரைசலை தருவதால் இது உருவாகிறது.

ஒடுக்கும் பனிப்புகை 

விளைவுகள்:

1. அமில மழை

2. பார்வைத்திறன் குறைப்பு - வான்வெளி, சாலைப் போக்குவரத்து பாதிப்பு

3. மூச்சுக் குழல் எரிச்சல்

ஒளிவேதிப் பனிப்புகை () லாஸ் ஏஞ்சல்ஸ் பனிப்புகை

புகை, தூசி, NO2, NO ஹைட்ரோகார்பன்கள் போன்ற காற்று மாசுபடுத்திகள் நிரம்பியது

இது உச்சி வேளையில் உருவாகி, பிற்பகலில் மிகவும் மோசமடைகிறது.

● NO () O3 ஆகியன வலிமை மிக்க ஆக்ஸிஜனேற்றி களாகும். இவை மாசுப்பட்ட காற்றில் உள்ள எரிக்கப்படாத ஹைட்ரோ கார்பன்களுடன் வினைபுரிந்து ஃபார்மால்டிஹைடு, அக்ரோலின், PAN ஆகியவற்றை உருவாக்கும்.

ஆக்ஸிஜனேற்ற பனிப்புகை 

விளைவுகள்:

1. கண், தோல் () நுரையீரல் எரிச்சல் 

2. மார்புவலி, சுவாச அடைப்பு

3. உலோகங்கள், கற்கள், கட்டிட பொருட்கள், அரித்தல் 

4. இரப்பர் பொருட்களில் வெடிப்பு () மங்குதல்

5. PAN தளிர் இலையை பழுப்பாகவும் மாற்றுதல்


29. துகள் மாசுக்கள் என்றால் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.

விடை 

துகள்பொருள்கள் (துகள் மாசுபடுத்திகள்)

துகள் மாசுபடுத்திகள் என்பவை, சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலைப்படுத்தப்பட்ட திரவ துளிகளாகும். பெரும்பாலான துகள் மாசுபடுத்திகள் அபாயகரமானவை.

எடுத்துக்காட்டுகள் : தூசி, மகரந்தத்தூள், புகை, புகைக்கரி மற்றும் திரவதுளிகள் (நீர்ம காற்று கரைசல்) போன்றவை.

1. புகை:

புகையானது, திண்ம துகள்கள் அல்லது கரிம பொருட்களை எரிப்பதால் உருவாகும் திண்ம மற்றும் நீர்ம துகள்களின் கலவையை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்: சிகரெட் புகை, எண்ணெய் புகை, புகைபடிம எரிபொருள்கள், குப்பை மற்றும் காய்ந்த இலைகளை எரிப்பதனால் உருவாகும்.

2. தூசி:

தூசி என்பது திண்ம பொருட்களை இடித்தல் மற்றும் அரைக்கும் போது உருவாகும் நுண்ணிய திண்ம துகள்களால் ஆனது

எடுத்துக்காட்டுகள்: மண்ணூதையிடுதலில் உருவாகும் மணல் துகள்கள், மரவேலையின்போது உருவாகும் மரத்தூள், சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து உருவாகும் சிமெண்ட் தூசி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் பறக்கும் சாம்பல்

3. மூடுபனி:

காற்றில் தெறிக்கப்படும் திரவதுளிகள் மற்றும் காற்றில் உள்ள குளிர்ந்த ஆவிநிலை மூலக்கூறுகளால் மூடுபனி உருவாகிறது

எடுத்துக்காட்டுகள்: கந்தக அமில மூடுபனி, களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதாலும் மூடுபனி உருவாக முடியும்

4. கரும்புகை:

பதங்கமாதல், காய்ச்சிவடித்தல், கொதிக்கவைத்தல் மற்றும் கால்சினேற்றத்தின்போதும், மேலும் பல வேதிவினைகளின் போதும் வெளிப்படும் வாயுக்கள் சுருங்குவதால் கரும்புகை உருவாகிறது

எடுத்துக்காட்டுகள் : கரிம கரைப்பான்கள், உலோகங்கள் மற்றும் உலோக ஆக்சைடுகள் கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன.


30. நுண்ணுயிர்க்கொல்லிகள், தானிய உற்பத்திய அதிகரித்தபோதிலும், அவை உயிரினங்களை கடுமையாக பாதிக்கின்றன நுண்ணுயிர்க்கொல்லிகளின் பாதிப்பு விளைவுகளை விளக்குக.

விடை 

நுண்ணுயிர்க்கொல்லிகள் :

நுண்ணுயிர்க்கொல்லிகள் என்பவை, தேவையற்ற நுண்ணுயிரிகளை கொல்வதற்காகவோ அல்லது அவற்றின் வளர்ச்சியை தடைசெய்வதற்காகவோ பயன்படுத்தப்படும் சேர்மங்கள் ஆகும். ஆனால் இந்த நுண்ணுயிர்க்கொல்லிகள் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை

வகைகள்:

1. பூச்சிக்கொல்லிகள்:

DDT, BHC, ஆல்டிரின் போன்ற பூச்சிக்கொல்லிகளால் மண்ணில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியும். இவை மண்ணினால் உறிஞ்சப்படுகின்றன. இவை கேரட், முள்ளங்கி போன்ற வேர்த் தாவரங்களை மாசுபடச் செய்கின்றன

2. பூஞ்சைக்கொல்லிகள்:

பொதுவாக கரிம மெர்குரி சேர்மங்கள் பூஞ்சைக் கொல்லிகளாக பயன்படுத்தப்படுகின்றன. அவை நீரில் கரைந்து அதிக நச்சுத்தன்மையுடைய மெர்குரியை உருவாக்குகின்றன.

3. களைக்கொல்லிகள்:

களைக்கொல்லிகள் என்பவை, தேவையற்ற பயிர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன

எடுத்துக்காட்டுகள்: சோடியம் குளோரேட் (NaClO3) மற்றும் சோடியம் ஆர்சினைட் (Na3AsO3) பெரும்பாலான களைக்கொல்லிகள் பாலூட்டிகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன


31. ஈத்தேன் காற்றில் முற்றிலுமாக எரிந்து CO2 தருகிறது. ஆனால் குறைந்தளவு காற்றில் CO தருகிறது. இதே வாயுக்கள் மோட்டார் வாகனப் புகையிலும் காணப்படுகின்றன. CO மற்றும் CO2 இரண்டும் வளிமண்டல மாசுபடுத்திகளாகும்.

i) இந்த வாயுக்களுடன் இணைந்த ஆபத்துகள் என்ன?

ii) மாசுபாடு எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது?

விடை

1. கார்பன் மோனாக்சைடு:

முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் கார்பன் மோனாக்சைடு உருவாக்கப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு முதன்மையாக வாகனப்புகையின் மூலம் காற்றில் வெளிவிடப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்டது.

இது ஹீமோகுளோபினுடன் பிணைந்து கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.

இது இரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை பாதிக்கிறது.

இதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் கடத்தும் திறன் குறைகிறது.

இந்த ஆக்ஸிஜன் குறைபாடு தலைவலி, தலைச்சுற்றல், சுயநினைவிழத்தல், பதற்றம், கண்பார்வை மங்குதல் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

2. கார்பன்டையாக்சைடு

சுவாசித்தல், புதைப்படிம எரி பொருள்களை எரித்தல், காட்டுத் தீ, சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக் கற்கள் சிதைக்கப்படுதல் போன்ற செயல் முறைகளினால் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது

ஒளிச்சேர்க்கை எனும் செயல் முறையின் மூலம், காற்று மண்டலத்திலுள்ள CO2 வாயுவை கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜன் வாயுவாக பச்சைத் தாவரங்களால் மாற்ற முடியும்.

காற்று மண்டலத்தில் உருவாகும் அதிகரிக்கப்பட்ட CO2 அளவானது உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது. இது தலைவலி மற்றும் குமட்டலை உருவாக்குகிறது.



IV. விரிவான விடையளி


32. CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.

விடை 

குளோரோபுளூரோ கார்பன்கள்(CFC) ஃபிரியான்கள்:

மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோபுளூரோ பெறுதிகளானவை ஃபிரியான்கள் எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன. இந்த குளோரோபுளூரோ கார்பன் சேர்மங்கள் நிலைத்தன்மையுடையவை, நச்சுத் தன்மையற்றவை, அரிக்கும் தன்மையற்றவை, எளிதில் தீப்பற்றாதவை மற்றும் எளிதில் திரவமாகும் வாயுக்கள். மேலும் இவை குளிர்ப்பதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைப்புகள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.

உயர்வளி மண்டல அடுக்குகளில் பயனிக்கும் சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் மற்றும் ஜம்போஜெட்களிலிருந்து CFC வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை அடிவெளிப் பகுதியிலிருந்து மெதுவாக அடுக்கு மண்டலத்திற்கு செல்கின்றன. அவைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை மிக நீண்ட காலத்திற்கு நிலைத்து உள்ளன. uv கதிர்வீச்சின் முன்னிலையில் CFC வாயுக்கள் குளோரின் தனி உறுப்புகளாக சிதைக்கின்றன.

வினைச் சங்கிலியில் குளோரின் தனி உறுப்புகள் மீண்டும் உருவாகின்றன. குளோரின் தனி உறுப்புகளின் இந்த தொடர் தாக்குதலின் காரணமான ஓசோன் படலம் மெலிந்து, ஓசோன் துளைகள் உருவாகின்றன.

அடுக்கு மண்டலத்தில் உருவாகும் ஒவ்வொரு வினைதிறன் மிக்க குளோரின் அணுவும் 1,00,000 ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.


33. அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.

விடை 

வளிமண்டலத்தில் உள்ள CO2 மழை நீரில் கரைந்திருப்பதன் காரணத்தால் சாதாரணமாக மழைநீரின் pH மதிப்பு 5.6 ஆக உள்ளது.

மழைநீரின் pH மதிப்பு 5.6க்கு கீழ் குறையும்போது, அது அமில மழை என்றழைக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உள்ள நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.

அமிலமழை என்பது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளின் பக்கவிளை பொருளாகும். நிலக்கரி போன்ற புதை படிம எரி பொருள்களை எரித்தல், அனல் மின்நிலையங்கள் மற்றும் உலைகளில் எண்ணெய்களை எரித்தல், வாகன இயந்திரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை எரித்தல் ஆகியவை சல்பர் டையாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன. SO2 மற்றும் NO2 ஆகியன அமில மழைக்கு முக்கிய பங்களிக்கின்றன. இவை ஆக்சிஜன் மற்றும் நீருடன் வினைபுரிந்து முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன

2SO2 + O2 + 2H2 → 2H2SO4

4NO2 + O2 + 2H2O → 4HNO3

அமிலமழையின் தீய விளைவுகள்:

அமில மழையின் சில தீய விளைவுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

அமில மழையானது, கட்டிடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருள்களின் மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது. பளிங்கு கற்களின் மீது நிகழும் இந்த தாக்குதல் 'கல்குஷ்டம்' (Stone leprosy) எனப் பெயரிடப்படுகிறது.

அமில மழையானது, நீர்ச் சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது

CaCO3 +H2SO4 → CaSO4 + H2O + CO2

தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கின்றன.

இது தண்ணீர் குழாய்களை அரித்து, இரும்பு, லெட் மற்றும் காப்பர் போன்ற கன உலோகங்களை குடிநீரில் கரைக்கிறது. இவை நச்சுவிளைவுகளை உருவாக்கும் தன்மை கொண்டவை ஆகும்.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சுவாசக் கோளாறுகளை உருவாக்குகிறது.


34. பின்வருவனவற்றை வேறுபடுத்துக

(i) BOD மற்றும் COD

(ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்

விடை 

உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD)

20°C, வெப்பநிலையில், 5 நாள்கள் கால இடைவெளியில் ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிம கழிவுகளை சிதைக்க நுண்ணுயிரிகளால் நுகரப்படும் மொத்த ஆக்ஸிஜனின் மில்லிகிராம் அளவு உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை (BOD) என்றழைக்கப்படுகிறது.

BOD ஆனது நீர் மாசுபாட்டின் அளவை குறிப்பிடப் பயன்படுகிறது. தூய நீரின் BOD மதிப்பு 5 ppm விட குறைவாக இருக்கும். அதே சமயம் மாசுபட்ட நீரின் BOD மதிப்பு 17 ppm அல்லது அதற்கு அதிகமாக இருக்கக்கூடும்

வேதி ஆக்சிஜன் தேவை (COD)

BOD மதிப்புகளை அளவில் 5 நாட்கள் தேவைப்படுகிறது. எனவே வேதி ஆக்ஸிஜன் தேவை (COD) என்றழைக்கப்படும்.

குறிப்பிட்ட நீர் மாதிரியிலுள்ள கரிம பொருட்களை, அமில ஊடகத்தில், 2 மணி நேர கால இடைவெளியில், K2Cr2O7 போன்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றி கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவானது வேதி ஆக்ஸிஜன் தேவை (COD) என வரையறுக்கப்படுகிறது.

ii) ).உயிருள்ள துகள் பொருள்கள்:

இவை காற்றில் விரவியுள்ள பாக்டீரியா, பூஞ்சை, நுண்பூஞ்சை, பாசி போன்ற நுண்ணுயிரிகளாகும். சில பூஞ்சைகள் மனிதர்களுக்கு ஒவ்வாமையையும், தாவரங்களில் நோய்களையும் உருவாக்குகின்றன.

) உயிரற்ற துகள் பொருள்கள்:

உயிரற்ற துகள் பொருள்கள் என்பவை சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலை பெற்றுள்ள திரவ மூலக்கூறுகளாகும். வளிமண்டலத்தில் நான்கு வகையான உயிரற்ற துகள் பொருள்கள் காணப்படுகின்றன.

.கா. புகை, தூசு, மூடுபனி மற்றும் கரும்புகை.


35. நம் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடால் உருவாக்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை விளக்குக. அதன் விளைவுகளை எழுதுக.

விடை 

முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் கார்பன் மோனாக்சைடு உருவாக்கப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு முதன்முறையாக வாகனப்புகையின் மூலம் காற்றில் வெளியிடப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்டது.

இது ஹீமோகுளாபினுடன் பிணைந்து கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.

இது இரத்தத்தின் ஆக்சிஜன் கடத்தும் திறனை பாதிக்கிறது.

இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் கடத்தும் திறன் குறைகிறது.

இந்த ஆக்சிஜன் குறைபாடு தலைவலி, தலைச்சுற்றல், சுய நினைவிழத்தல், பதற்றம், கண்பார்வை மங்குதல் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.


36. மாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை?

விடை 

கழிவு மேலாண்மை: கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

மறு சுழற்சி: அகற்றப்பட்ட கழிவு பொருள்களில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றுகிறது.

சில குறிப்பிட்ட தொழில்முறைகளில் பயன்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட கரைப்பான்களை நீக்கி குறைந்த நச்சுத் தன்மை கொண்ட கரைப்பான்களை பதிலீடு செய்தல்

குறைந்தளவு சல்பரை கொண்டுள்ள எரிபொருட்களை பயன்படுத்துதல். (.கா. சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி

அதிக மரங்களை வளர்த்தல்

வாகனப் புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சிகளினால், பசுமை வேதியியல் என்றழைக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு சாதகமான வேதிப்பொருள்களை தொகுக்கக்கூடிய வேதியியல் உருவாக்கப்பட்டது.

11th Chemistry : UNIT 15 : Environmental Chemistry : Brief questions and answers: Chemistry: Environmental Chemistry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல் : சுருக்கமாக விடையளிக்கவும் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல்