Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையினைத் தேர்வு செய்க

பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையினைத் தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 15 : Environmental Chemistry

   Posted On :  05.01.2024 03:58 am

11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல்

சரியான விடையினைத் தேர்வு செய்க

11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல் : சரியான விடையினைத் தேர்வு செய்க, குறுவினாக்கள்

மதிப்பீடு


சரியான விடையை தெரிவு செய்க:

1. பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறைவளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி ----------

) அடிவெளிப்பகுதி 

) மத்திய அடுக்கு

) வெப்ப அடுக்கு

) அடுக்கு மண்டலம்

[விடை : ) அடுக்கு மண்டலம்]


2. பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?

) காட்டுத் தீ

) வெள்ளம்

) அமில மழை

) பசுமைக்குடில் விளைவு

[விடை : ) காட்டுத் தீ]


3. போபால் வாயு துயரம் என்பது --------- இன் விளைவு ஆகும்.

) வெப்ப மாசுபாடு 

) காற்று மாசுபாடு 

) கதிர்வீச்சு மாசுபாடு

) நில மாசுபாடு

[விடை : ) காற்று மாசுபாடு]


4. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் ---------  உடன் கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.

) கார்பன் டையாக்சைடு

) கார்பன் டெட்ரா குளோரைடு

) கார்பன் மோனாக்சைடு

) கார்பானிக் அமிலம்

[விடை : ) கார்பன் மோனாக்சைடு]


5. பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?

) CFC > N2O > CO2 > CH4

) CFC > CO2 > N2O > CH4

) CFC > N2O > CH4 > CO2

) CFC > CH4 > N2O > CO2

[விடை : ) CFC > N2O > CH4 > CO2]


6. நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக ------------- கொண்டுள்ளது.

) ஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்

) ஓசோன், PAN மற்றும் NO2

) PAN, புகைமற்றும் SO2

) ஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2

[விடை : ) ஓசோன், PAN மற்றும் NO2]


7. மழைநீரின் pH மதிப்பு

) 6.5

) 7.5

) 5.6

) 4.6

[விடை : ) 5.6]


8. ஓசோன் படல சிதைவு உருவாக்குவது

) காட்டுத்தீ

) தூர்ந்துபோதல்

) உயிர் பெருக்கம்

) உலக வெப்பமயமாதல்

[விடை : ) உயிர் பெருக்கம்]


9. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.

) தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.

) பசுமைக்குடில் விளைவு ஆனது உலக வெப்பமயமாதல் எனவும் அழைக்கப்படுகிறது

) காற்றிலுள்ள நுண்ணிய திண்ம துகள்கள், துகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.

) உயிர்க்கோளம் ஆனது பூமியை சூழ்ந்துள்ள பாதுகாப்பு போர்வையாகும்

[விடை : ) தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.]


10. CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது, ஏனெனில்

) உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 உருவாக்குகிறது.

) திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது

) ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.

) இரத்தத்தை நீர்க்க செய்கிறது

[விடை : ) இரத்தத்தை நீர்க்க செய்கிறது]


11. மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ---------- பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

) சரளை அறை

) துப்புரவாக்கிகள்

) சொட்டுநீர் பிரிப்பான்கள்

) வினையூக்கி மாற்றிகள்

[விடை : ) சொட்டுநீர் பிரிப்பான்கள்]


12.  உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது

) அதிகளவில் மாசுபட்டுள்ளது

) குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்

) அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது

) குறைந்த COD

[விடை : ) அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது]


13. பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.


[விடை : .  4  3   2  1]


14.


கீழே கொடுக்கப்பட்ட வினாக்களில் கூற்று மற்றும் காரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கு கீழும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை தேர்ந்தெடு.

i) (A) மற்றும் (R) இரண்டும்சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியானவிளக்கம் ஆகும்

ii) (A) மற்றும் (R) இரண்டும்சரி. மேலும்(R) ஆனது (A) க்கான சரியானவிளக்கம் அல்ல

iii) (A) மற்றும் (R) இரண்டும்தவறு 

iv) (A) சரிஆனால்( R) தவறு 

[விடை : ii) (A) மற்றும் (R) இரண்டும்சரி. மேலும்(R) ஆனது (A) க்கான சரியானவிளக்கம் அல்ல.]


15. கூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.

காரணம் (R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.

) i

) ii

) iii

) iv

[விடை : ) iv]


16. கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.

காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.

) i

) ii

) iii

) iv

[விடை : ) i]


17. கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது

காரணம் (R): அடிவெளிமண்டலமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை

) i

) ii

) iii 

) iv

[விடை : ) iv]


II. குறுவினாக்கள்


18. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் நீர்சூழ் வாழ்க்கைக்கு பொறுப்பாகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு எந்தெந்த செயல்பாடுகள் பொறுப்பாகின்றன?

விடை :

1. காகித மற்றும் கூழ் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகள், தாவர இலைகள், புற்கள், குப்பை ஆகியவை நீரினுள் மிதவைத் தாவரங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.

2. இந்த நுண்ணுயிர்கள் கரிமப் பொருட்களை சிதைப்பதால் ஆக்ஸிஜனை கிரகித்துக் கொள்கின்றன.

3. பாசி படர்தல்


19. பூமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?

விடை :

பூமியின் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால், பசுமைக்குடில் விளைவினால் உருவாக்கப்படும் வெப்பமாதல் நிகழாது.

எனில் பூமியின் சராசரி வெப்பநிலை - 18° C(0°F) ஆகத்தான் இருக்கும்.

இந்த வெப்பநிலையில் தாவரங்கள் வளராது. பசுமை குடில் விளைவிற்கான CO2 இல்லையெனில் ஒளிச்சேர்க்கை நிகழாது.

எனவே பூமியில் உயிர் வாழ முடியாது.


20. பனிப்புகை வரையறு.

விடை :

பனிப்புகை = புகை + மூடுபனி

இது காற்றில் விரவியுள்ள திரவ துளிகளை உருவாக்குகிறது.

பனிப்புகை என்பது நகர்ப்புறப் பகுதியில் பழுப்பு மஞ்சள் நிற புகைமூட்டத்தை உருவாக்கும் வாயுக்களின் வேதிக் கலவையாகும்.

ஓசோன், NO, கரிமச் சேர்மம், SO2, அமிலத்தன்மை கொண்ட நீர்ம காற்று கரைசல்கள், வாயுக்கள் மற்றும் துகள்களைக் கொண்டுள்ளன.


21. எது பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது? ஏன்?

விடை :

பூமியின் பாதுகாப்புக் குடை - ஓசோன்

அதிக உயரத்தில், நமது வளிமண்டலமானது ஓசோன் படலத்தை கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் UV கதிர்வீச்சிலிருந்து பூமியைக் காக்கும் குடையாக () கேடயமாக செயல்படுகிறது.

இந்த ஓசோன் போர்வையானது, தோல் புற்றுநோய் உருவாதலில் இருந்து பாதுகாக்கிறது.

● UV கதிர்வீச்சால் மூலக்கூறு ஆக்ஸிஜனை ஓசோனாக மாற்ற முடியும்.


ஓசோன் வாயு வெப்ப இயக்கவியல் அடிப்படையில் நிலைப்புத் தன்மையற்றது. இது மிக எளிதாக மூலக்கூறு ஆக்ஸிஜனாக சிதைவடைகிறது.


22. மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?

விடை :

i) மக்கும் மாசுபடுத்திகள்:

இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையக்கூடிய மாசுபடுத்திகள் மக்கும் மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன

எடுத்துக்காட்டுகள் : தாவரக்கழிவுகள், விலங்குக் கழிவுகள் போன்றவை.

ii) மக்கா மாசுபடுத்திகள்:

இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள் மக்காத மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன

எடுத்துக்காட்டுகள் : உலோகக் கழிவுகள் (முக்கியமாக Hg மற்றும் Pb), DDT, நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள் போன்றவை. இத்தகைய மாசுபடுத்திகள் சிறிய அளவில் இருப்பினும், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அவை இயற்கையாக சிதைவடையாதலால் அவற்றை நம் சுற்றுச் சூழலிலிருந்து நீக்குவது கடினம்.


23. ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?

விடை :

இது சூடான, உலர்ந்த மற்றும் சூரிய ஒளி நிறைந்த காலநிலையில் உருவாகிறது. இவ்வகை பனிப்புகையானது புகை, தூசி மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், ஹைட்ரோகார்பன்கள் போன்ற காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையால் சூரிய ஒளி முன்னிலையில் உண்டாகிறது.

இது உச்சி வேளையில் உருவாகி பிற்பகலில் மிகவும் மோசமடைகிறது. NO2 மற்றும் O3 போன்ற ஆக்சிஜனேற்றிகள் அதிக செறிவில் காணப்படுவதால் இவை ஆக்சிஜனேற்றும் தன்மையுடையவை. எனவே இது ஆக்சிஜனேற்ற பனிப்புகை எனவும் அழைக்கப்படுகிறது.

ஒளிவேதிப் பனிப்புகையானது பின்வரும் தொடர் வினைகளின் மூலமாக உருவாகிறது.

N2 + O2 → 2NO

2NO + O2 → 2NO2


(O) + O2 → O3


24. ஒருவர் தான் பயன்படுத்திய நீரினால் மலமிளக்குதல் விளைவால் பாதிக்கப்பட்டார் எனில் அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?

விடை :

இயல்பான அளவு சல்பேட் தீங்கு விளைவிப்பதில்லை. குடிநீரில் சல்பேட்டுகள் அதிக செறிவில் (>500ppm) இருப்பின் மலமிளக்குதல் விளைவை உண்டாக்குகிறது.


25. பசுமை வேதியியல் என்றால் என்ன?

விடை :

சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், சுற்றுச் சூழலுக்கு உகந்த வேதிப்பொருட்களை தொகுப்பதற்காக, அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தும் முயற்சியே 'பசுமை வேதியியல்' என்றழைக்கப்படுகிறது.

பசுமை வேதியியல் என்பது சூழலுக்குகந்த வேதிப்பொருட்களை தொகுக்கும் அறிவியல் ஆகும்.



Tags : Multiple choice questions பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள்.
11th Chemistry : UNIT 15 : Environmental Chemistry : Choose the best answer: Environmental Chemistry Multiple choice questions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல் : சரியான விடையினைத் தேர்வு செய்க - பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல்