Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நுண்ணுயிரிகளைக் கண்டறிதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - நுண்ணுயிரிகளைக் கண்டறிதல் | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 06:57 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை

நுண்ணுயிரிகளைக் கண்டறிதல்

நோக்கம் : பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைக் (பாக்டீரியா மற்றும் வைரஸ்) கண்டறிதல்.

8. நுண்ணுயிரிகளைக் கண்டறிதல்

 

நோக்கம் :

பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைக் (பாக்டீரியா மற்றும் வைரஸ்) கண்டறிதல்.

 

உற்றுநோக்கல் :

படம் / நிழற்படம் / நிலையான நழுவங்கள் ஆகியவற்றின் மாதிரிகள், கூட்டு நுண்ணோக்கி, காட்சிப்படங்கள் உதவியுடன் கீழ்கண்டவற்றை உற்றுநோக்கு.

 

தேவைப்படும் நுண்ணுயிரிகளின் மாதிரிகள் :

) எஸ்செரிசியா கோலி

) விப்ரியோ காலரே

) லாக்டோ பேசில்லஸ்

) ரெட்ரோ வைரஸ் (எச்..வி)

 

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி


) தெளிவான படம் வரைந்து பாகங்களைக் குறி.

விடை:

ஈகோலை அமைப்பு:


ஈகோலை - ஒரு கிராம் - நெகட்டில் - பாக்டீரியா.

இது குச்சி வடிவமுடையது.

செல்சுவர்

வெளி உறை

நடுவிலுள்ள பெப்டிடோகிளைக்களான உறை

உள்ளே உள்ள சைட்டோபிளாச சவ்வு என மூன்று அடுக்குகளையுடையது

உட்கரு :

உட்கரு கிடையாது ஆனால் நியூக்ளியாய்டு () இன்சிபியன்ட் உட்கரு காணப்படுகிறது.

பிளாஸ்மிடு :

பிளாஸ்மிடு () குரோமோசோம் அல்லாத DNA காணப்படுகிறது. (மறுசேர்க்கை DNA செயல்நுட்பத்தில் அயல்ஜீனை எடுத்துச் செல்லும் கடத்தியாகச் செயல்படுகிறது.

காணப்படும் இடம் :

இவை பொதுவாக மனித விலங்குகளின் சிறுகுடலில் காணப்படுகிறது

முக்கியத்துவம் :

பொதுவாக ஈகோலை பாக்டீரியம் எந்த நோயையும் உருவாக்குவதில்லை. ஆனால் வீரியமுடைய வகைகள் கேஸ்ட்ரோ என்டெரெட்டிஸ், சிறுநீர் வழித்தொற்று, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களை உண்டாக்குகிறது.

இந்த நோயுற்றவரின் கழிவு கலந்த நீர், உணவு மூலம் இந்த நோய் கிருமி பரவுகிறது.

 

 

) உற்றுநோக்கிய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வடிவங்களை எழுதுக.

விடை:

விப்ரியோ காலரா ஒரு கமா வடிவ கிராம் நெகட்டில் வகை பாக்டீரியாவாகும்.

இவை கலங்கலான உப்புப்பாங்கான நீரில் வாழும். சில வகை காலரா பரவி நீரில் ஒரு வித வயிற்றுப் போக்கை உண்டாக்குகிறது.


 

) பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் அமைப்பை விளக்கமாகக் குறிப்பிடுக.

விடை:

லாக்டோ பேசில்லஸ் அமைப்பு


இவை ரோட்டா வைரஸ்கள் உருவாக்கும் வயிற்றுப் போக்கையும், அதிக எதிர் உயிரி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வயிற்றுப் போக்கையும் குணப்படுத்தக் கூடியது.

லாக்டோ பேசில்லஸ் () LAB - இது அதிகமாக உணவு மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது.

இவை கார்போ ஹைடிரேட்டுக்களை நொதிக்கச் செய்யும் ஆற்றலுடையது.

இவை பால் பொருட்களான யோகர்ட், பாலாடைக் கட்டி, தயிர் போன்றவற்றையும் ஊறுகாய், பீர் ஆகியவற்றையும் உருவாக்கக் கூடியது.

 

) நுண்ணுயிரியின் முக்கியத்துவம் / அவை உண்டாக்கும் நோய்கள் பற்றிய குறிப்பு வரைக.

விடை:



• AIDS (பெறப்பட்ட நோய் எதிர்ப்புத்திறன் பற்றாக்குறை நோய்)

இந்நோய் ரெட்ரோவைரஸ் எனப்படும் RNA வைரஸால் உருவாக்கப்படுகிறது.

இதனை மனித நோய் எதிர்ப்பு திறன் பற்றாக்குறை வைரஸால் உருவாகிறது (HIV)

வடிவம் மற்றும் அமைப்பு :

இது கோளவடிவ அமைப்புடையது 

இது உறையுடைய வைரஸாகும்.

தன்மை :

இந்நோய் உடலின் T-லிம்போசைட்டுகள் எனும் வெள்ளையணுக்களைத் தாக்கி அழித்து உடலின் நோய் எதிர்ப்புத் திறனை (சுய பாதுகாப்பு முறை) குறைக்கிறது.

பரவும் முறை :

இது பால்சார்ந்த பரவும் நோய். இது ஓரிசை சேர்க்கையாளர்களிடம் பெருவாரியாகக் காணப்படுகிறது.

மேலும் நோய் தொற்றுள்ள வழங்குயிடமிருந்து, இரத்த தானம் மூலமோ அல்லது நோய் தொற்றுள்ள ஊசி, () சிரிஞ்சுகள் மூலமும் பரவக்கூடியது.

மேலும் நோயுற்ற தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தையை HIV பாதிப்பதையும் தவிர்க்க இயலாது.

இதுவரை AIDS கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Economic Biology Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை : நுண்ணுயிரிகளைக் கண்டறிதல் - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை