அறிவியல் ஆய்வக சோதனைகள் - திரவங்களின் கன அளவை அளவிடல் | 9th Science : Practical experiments
வேதியியல்
4. திரவங்களின் கன அளவை
அளவிடல்
நோக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள நிறமற்ற மற்றும் நிறமுள்ள திரவங்களின் கனஅளவை அளவிடல்
தேவையான பொருட்கள்:
பிப்பெட்(20 மி.லி), மாதிரித் திரவங்கள், மற்றும் பீக்கர்
செய்முறை:
•
ஒரு 20 மி.லி கனஅளவுள்ள பிப்பெட்டை எடுத்து முதலில் நீரினால் நன்றாக கழுவிய பின்பு, அளக்க வேண்டிய மாதிரித் திரவத்தைக் கொண்டு அலசியபின், பிப்பெட்டின் கீழ்ப்பகுதி மாதிரித்திரவத்தின் உள்ளே நன்றாக மூழ்கி இருக்கும்படி வைத்து, அலசவும்.
•
பிப்பெட்டின் அளவுக் குறியீட்டுக்கு மேல் திரவம் வரும்வரை உறிஞ்சி, ஆள்காட்டி விரலினால் மேல் பகுதியை அழுத்தி மூடவும், பிப்பெட்டை திரவத்தில் இருந்து வெளியே எடுத்து,
•
அதன் அளவுக்கோடு கண்பார்வை மட்டத்துக்கு நேராக இருக்கும்படி பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலின் அழுத்தத்தைக் குறைத்து, திரவத்தின் கீழ் பிறை தளம் பிப்பெட்டின் அளவுக்கோட்டைத் தொடும்வரை திரவத்தை வெளியேற்றவும்.
•
இப்பொழுது பிப்பெட்டில் இருக்கும் திரவம் மிகச் சரியாக 20 மி.லி ஆகும். பிப்பெட்டை, பீக்கர் உள்ளே வைத்து ஆள்காட்டி விரலின் அழுத்தத்தை நீக்குவதன் மூலம் திரவம் முழுவதையும் சேகரிக்கலாம்.
அட்டவணை :
முடிவு:
மிகச் சரியாக 20 மி.லி கனஅளவு கொண்ட கொடுக்கப்பட்ட வெவ்வேறு திரவங்கள் 20 மி.லி படித்தர பிப்பெட் மூலம் அளவிடப்பட்டன.
குறிப்பு:
1.
பிப்பெட்டின் அளவுக்கோடு கண்பார்வைக்கு மேலாகவோ, கீழாகவோ இருந்தால் கனஅளவு மாறுபடும்.
2.
நிறமுள்ள திரவங்களை அளக்கும்போது மேல் பிறைதளம் பிப்பெட்டின் அளவுகோட்டைத் தொடுமாறு அளக்க வேண்டும்.
3. வலிமை மிக்க அமிலம் மற்றும் காரங்களை ஒருபோதும் பிப்பெட்டில் உறிஞ்சக் கூடாது.