பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Economics : Term 2 Unit 1 : Economics - An Introduction

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

1) கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் முதல்நிலைத் தொழில் புரிவோர்

2. 'தேன் சேகரித்தல்,' என்பது முதல்நிலைத் தொழில்

3. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது இரண்டாம் நிலை தொழில்கள்

4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு எனப்படும்.

5. தமிழ்நாட்டில் 47 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

 

II) பொருத்துக.


1. கால்நடைகள் வளர்ப்பு - இரண்டாம்நிலைத் தொழில்

2. உணவு பதப்படுத்துதல் - சேவை

3. இரும்பு எஃகுத் தொழிற்சாலை - முதல்நிலைத் தொழில்

4. தொலைபேசி - வேளாண்சார் தொழிற்சாலை

5. பருத்தியாலை - மூன்றாம்நிலைத் தொழில்

 

விடைகள்

1. கால்நடைகள் வளர்ப்பு - முதல்நிலைத் தொழில்

2. உணவு பதப்படுத்துதல் - வேளாண்சார் தொழிற்சாலை

3. இரும்பு எஃகுத் தொழிற்சாலை - இரண்டாம்நிலைத் தொழில்

4. தொலைபேசி – சேவை மூன்றாம்நிலைத் தொழில்

5. பருத்தியாலை -  வேளாண்சார் தொழிற்சாலை

 

III) பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக.


1. சிறிய அளவிலான தொழிற்சாலை - பண பரிவர்த்தனை

2. காடுசார்ந்த தொழிற்சாலைகள் - தகவல் தொழில்நுட்பம்

3.சேவைகள் - காகிதத் தொழிற்சாலைகள்

4. வங்கி - கால்நடைகள் வளர்ப்பு


விடைகள்

1. சிறிய அளவிலான தொழிற்சாலை - கால்நடைகள் வளர்ப்பு

2. காடுசார்ந்த தொழிற்சாலைகள் - காகிதத் தொழிற்சாலைகள்

3.சேவைகள் - தகவல் தொழில்நுட்பம்

4. வங்கி - பண பரிவர்த்தனை

பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை - கால்நடை வளர்ப்பு

 

IV) சரியான விடையைக் கண்டறிக


1. வேளாண்மை என்பது (முதன்மை / இரண்டாம் )நிலைத் தொழிலாகும். விடை : முதன்மை

2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. விடை : பயன்பாடு

3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும். விடை : இரண்டாம்

4. வேளாண்மைசார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்). விடை : பருத்தியாலை

5. பால்பண்ணை ஒரு (பொது நிறுவனம் / கூட்டுறவு துறை). விடை : கூட்டுறவு துறை

 

V) கீழ்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

 

1. சந்தை - வரையறு.

கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பொதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.

 

2. பண்டமாற்று முறை என்றால் என்ன?

• பண்டமாற்று முறை என்றால் ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது.

• எ.கா. ஒரு மூட்டை அரிசிக்கு பதிலாக தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்.

 

3. வணிகம் என்றால் என்ன?

• வணிகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

 

4. சேமிப்பு என்றால் என்ன?

சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்தது போக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

 

5. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?

• பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன.

• இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.

 

6. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?

• நீர்நிலைகள் வேளாண்மை செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கின.

• எனவே பழங்கால மக்கள் நீர்நிலைகள் அருகே நிரந்தரமாகக் குடியேறினர்.


7. இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?

முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.

 

8. நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?

மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம், இரசாயனம், தானியுதிரிப் பாகங்கள், இருப்புப்பாதை, தோல், உரங்கள்.

 

VI) கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.

 

1. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக.

• வேளாண்மை

• கால்நடை வளர்த்தல்

• கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள் போன்றவை சேகரித்தல்.


2. உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை குறிப்பிடுக.

• பருத்தி தொழில்

• நெய்யுந்தொழில்

• உணவு பதப்படுத்துதல்

• பீடி தயாரிப்பு

• காற்றாலை உற்பத்தி

 

3. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப் படுகின்றன?

மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.  

வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள்

பருத்தி, சர்க்கரை, உணவு பதப்படுத்துதல்.  

காடு சார்ந்த தொழிற்சாலைகள்

காகிதத் தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள்.

கனிமத் தொழிற்சாலைகள்

சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்

கடல்சார் தொழிற்சாலைகள்

கடல் உணவு பதப்படுத்துதல்


4. சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.

• போக்குவரத்து

- சாலை, ரயில், கடல், ஆகாய போக்குவரத்துகள்

• தொலைத்தொடர்பு

- தபால், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்.

• வர்த்தகம்

- பொருள்களை கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.

• வங்கி

- பணப்பரிமாற்றம், வங்கி சேவைகள்.

 

5. நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?

• கிராமங்களை விட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.

• சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

• நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றமதி, இறக்குமதி சிறப்பாக நடக்க துணை புரிகின்றன.

• வங்கி கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்கு பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கம் துணையாக நிற்கிறது.

• நவீன மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப்பெறும்.

 

VII) கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.


 

செயல்பாடு


"சிந்துநதியின் மிசை நிலவினிலே" என்ற பாரதியாரின் பாடலிலுள்ள வரிகளை எழுதவும். இப்பாடலில் பண்டமாற்று முறையின் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்ட பொருட்கள் எவையெவை என ஆசிரியர் உதவியுடன் அறிந்து கொள்ளவும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்

நாட்டியம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில்

பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி

வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்கமராட்டியர்

தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில்

ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்

பயிர் செய்குவோம்.

1. கோதுமை  2. வெற்றிலை  3. தந்தம்

 

VIII) படங்களை ஒட்டவும்.

முதல்நிலைத் தொழில்கள் இரண்டாம்நிலைத் தொழில்கள்


Tags : Term 2 Unit 1 | Economics | 6th Social Science பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Economics : Term 2 Unit 1 : Economics - An Introduction : Exercises Questions with Answers Term 2 Unit 1 | Economics | 6th Social Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம் : வினா விடை - பருவம் 2 அலகு 1 | பொருளியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பருவம் 2 அலகு 1: பொருளியல் - ஓர் அறிமுகம்