பருவம் 3 அலகு 3 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Geography : Term 3 Unit 3 : Understanding Disaster

   Posted On :  31.08.2023 01:59 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 3 : பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 3 : பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. பேரிடர் - விளக்குக.

ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உைடமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

 

2. பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

இயற்கை பேரிடர்

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.

 

இயற்கை பேரிடர்

நிலநடுக்கம்

எரிமலை

சுனாமி

சூறாவளி

வெள்ளம்

நிலச்சரிவு

பனிச்சரிவு

இடி மற்றும் மின்னல்


மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

நெருப்பு

கட்டடங்கள் இடிந்து போதல்

தொழிற்சாலை விபத்துக்கள்

போக்குவரத்து விபத்துகள்

தீவிரவாதம்

கூட்ட நெரிசல

 

3. இடி, மின்னல் - குறிப்பு வரைக.

வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.

இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

 

4. கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு

 

5. நிலச்சரிவு, பனிச்சரிவு - வேறுபடுத்துக.

நிலச்சரிவு

பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.

பனிச்சரிவு

பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

 

 

II. ஒரு பத்தியில் விடையளி


1. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை?

வெள்ளப் பெருக்கு

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின்  கரைகளைத் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.

வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை

மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.

கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.

குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.

பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுகுவர்தியைப் பயன்படுத்த வேண்டும்.

வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.

நீரில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க முயற்சிக்கக்கூடாது

வெள்ளப் பெருக்கின் போது செய்யக் கூடாதவை

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல் கூடாது.

வண்டிகளை இயக்குதல் கூடாது.

வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.

வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

 

வெள்ளப் பெருக்கின் போது செய்யக் கூடாதவை

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல் கூடாது.

வண்டிகளை இயக்குதல் கூடாது.

வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.

வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.


III. செயல்பாடுகள்


ஒரு காகிதத்தில் உனது கிராமம்/ நகரம் படம் வரைந்து அதில் உனது பள்ளி, வீடு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றைக் குறி பிறகு ஆறுகள்/ஓடைக போன்றவற்றைக் குறி இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

1. எந்த இடம் மற்றும் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது?

2. உன்னால் மீட்பு வழியைக் காணமுடியுமா?

3. நீங்கள் வெள்ளப்பாதிப்பு பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

4. நெருக்கடியான காலங்களில் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பைகளில் உன்னிடம் ஒரு பை உள்ளது என்றால் அதில் என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்வாய்?

5. முக்கியமான அவசரக்காலத் தொடர்பு எண்களைப் பட்டியலிடுக.

Tags : Understanding Disaster | Term 3 Unit 3 | Geography | 6th Social Science பருவம் 3 அலகு 3 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 3 Unit 3 : Understanding Disaster : Exercises Questions with Answers Understanding Disaster | Term 3 Unit 3 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 3 : பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் : வினா விடை - பருவம் 3 அலகு 3 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 3 : பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்