செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 5 : Digestion and Absorption

   Posted On :  07.01.2024 02:12 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : முக்கிய கலைச்சொற்கள்

முக்கிய கலைச்சொற்கள்


கலைச் சொற்கள்  :    விளக்கம்

1. வேட்டரின் புனல்(Ampulla of Vater) - கல்லீரல் கணையப் பொதுநாளம்

2.  பர்த்தோலினின் நாளம் (அ) ரிவினிஸ் நாளம் (Bartholins duct or duct of rivinis) - நாவடிச் சுரப்பி நாளம்

3. லீபர்கன் மடிப்புகள் (Crypts of leiberkuhn) - சிறுகுடலின் உட்சுவரிலுள்ள குடல் நீட்சிகளின் அடிப்பகுதியில், அவற்றிடையே காணப்படும் மடிப்புகள்

4. ஃபால்சி ஃபார்ம் தசை நாண்கள் (Falciform ligament) - கல்லீரல் கதுப்புகளைப் பிரிக்கிறது. உதரவிதானத்தோடு கல்லீரலை இணைக்கிறது.

5. இரைப்பை மடிப்புகள் (Gastric rugae) - இரைப்பை உட்சுவரில் காணப்படும் கதுப்பு போன்ற மடிப்புகள்

6. கிளிசனின் பெட்டகம் (Glisson's capasule) - கல்லீரல் கதுப்புகளை மூடியுள்ள மெல்லிய இணைப்புத்திசு உறை

7. கோப்பை செல்கள் (Goblet Cells) - கோழைச் சுரப்பிகள்

8. பெருங்குடல் பைகள் (Haustra) - பெருங்குடலில் உள்ள பை போன்ற புடைப்புகள்

9. பாய்டன் சுருக்கு தசை (Sphincter of boydon) - கணைய நாளத்துடன் இணையும் முன்பு உள்ள பித்த நாளப்பகுதியில் காணப்படும் சுருக்குத் தசை

10. ஒட்டியின் சுருக்குத்தசை (Sphincter of oddi) - சிறுகுடலினுள் வேட்டரின் புனல் திறக்கும் இடத்தில் உள்ள சுருக்கத்தசை

11. ஸ்டென்சனின் நாளம் (Stenson's duct) - பரோடிட் (மேலண்ண) சுரப்பியின் நாளம்

12. சக்கஸ் என்டரிகஸ் (Succus entericus) - சிறுகுடல் நீர்

13. டீனியே கோலை (Taenia Coli) - பெருங்குடலில் உள்ள நீளவாட்டுத் தசை இழைகள்

14. கெர்க்ரிங் வால்வுகள் (Valves of kerkring or plical circularis) - பின் சிறுகுடலில் உள் பகுதியில் உள்ள வளைய வடிவ மடிப்புகள்

15. வார்டனின் நாளம் (Wharton's duct) - கீழ்த்தாடைச் சுரப்பி நாளம்


Tags : Digestion and Absorption | Zoology செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல்.
11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Glossary Digestion and Absorption | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : கலைச்சொற்கள் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்