விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals
14. மண்புழுவை அடையாளம் காணப் பயன்படும் பண்புகள் யாவை?
1. வெளிறிய பழுப்பு நிறம்
2. முன் முனையில் உள்ள ஊதா நிறப் பூச்சு
3. உடலில் உள்ள வரிப்பள்ளங்கள்
4. 14 - 17 வரை உள்ள கண்டங்கள் சேர்ந்து பருத்து காணப்படுதல்
15. "நாங்கூழ் கட்டிகள்' என்பது என்ன?
• மண்புழு சீரணத்தில் செரிக்காத மண்துகள்கள் மலப்புழை வழியே வெளியேறுகிறது. இதற்கு நாங்கூழ் கட்டிகள் என்று பெயர்.
16. மண்புழுக்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
• மண்புழுவிற்கு சுவாச உறுப்புகளான செவுள்கள் மற்றும் நுரையீரல் கிடையாது.
• உடற்சுவரின் வழியே சுவாசிக்கிறது.
• தோலின் புறப்பரப்பில் உள்ள இரத்த நாளங்கள் உதவியால் காற்றுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
17. கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?
• கரப்பான் பூச்சிகள், காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய் மற்றும் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகளை எடுத்து செல்வதால் இது நோய் கடத்திகள் என அழைக்கப்படுகிறது.
18. அலரி தசையின் வேலைகளை விளக்கவும்.
• கரப்பான் பூச்சியில் உள்ள ஒவ்வொரு கண்டத்தின் இதயத்தின் இரண்டு பக்கத்திலும் ஒரு ஜோடி முக்கோண வடிவ தசைகள் உள்ளது. இதற்கு அலரி தசைகள் என்று பெயர்.
19. கரப்பான் பூச்சியின் கூட்டுக் கண்களில் உள்ள பார்வை அலகுகளின் பெயர்களை எழுதுக.
• கரப்பான் பூச்சியின் தலையில் முதுகுப்பக்கத்தில் ஒரு இணை கூட்டுக் கண்கள் உள்ளன.
• ஒவ்வொரு கண்ணிலும் 2000 எளிய கண்கள் காணப்படுகிறது. இதற்கு ஓமட்டிடியா என்று பெயர்.
20. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
• ஆண் தவளையில், ஓரிணை குரல்பையும், மற்றும் முன்னங்கால் முதல் விரலின் கீழ் கலவித்திண்டும் உள்ளது.
• ஆண் தவளை புணர்ச்சிக்காக, கரகர ஒலியை எழுப்பி, பெண் தவளையை கவர்கிறது.
21. தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக.
• தவளை நீரிலும் நிலத்திலும் சுவாசிக்கிறது.
• நீரில் இருக்கும் போது தோல் வழியாக விரவல் முறையில் சுவாசிக்கிறது.
• நிலத்தில் இருக்கும் போது வாய்குழி, தோல், மற்றும் நுரையீரல்மூலம் சுவாசிக்கிறது.
22. மண்புழுவின் பெரிஸ்டோமியம் மற்றும் புரோஸ்டோமியத்தை வேறுபடுத்துக.
பெரிஸ்டோமியம்
மண்புழுவின் முதற்கண்டம் இதன் நடுவில் வாய் உள்ளது.
புரோஸ்டோமியம்
வாயின் முன் பகுதியில் உள்ள சிறு தசை தொங்கல்
23. லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லம் மற்றும் விந்துக்கொள்பை துளை ஆகியவற்றின் இருப்பிடம் யாது?
• கிளை டெல்லம் : 14 வது முதல் 17 வரை உள்ள கண்டங்கள்
• விந்துக் கொள்பை : மூன்று இணை கொள்பைகள் உள்ளன அவை 6/7, 7/8, 8/9 ஆகிய கண்டங்களுக்கிடையில் உள்ளது.
24. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.
டெர்கம்
கரப்பான் பூச்சியில் வயிற்றுக் கண்டங்களில் உள்ள மேல்புற தகடு
ஸ்டெர்னம்
வயிற்றுக் கண்டங்களில் உள்ள கீழ் புறத்தகடு
25. கரப்பான் பூச்சியின் தலை ஹைபோநேத்தஸ் வகையாகும் ஏன்?
• கரப்பான் பூச்சியின் தலை சிறிய முக்கோண வடிவமானது.
• இது உடலின் நீள் வசத்திற்கு செங்குத்தாக உள்ளது.
• வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ் நோக்கியே அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பிற்கு ஹைப்போநேத்தஸ் என்று பெயர்.
26. தவளை இரத்தத்தின் பகுதிப் பொருள்கள் யாவை?
1. பிளாஸ்மா 60%
2. இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்தத்தட்டுகள் - 40%
27. தவளையின் செரிமான மண்டலத்தை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
• உணவுப்பாதை வாய்முதல் மலவாய் வரை நீண்டுள்ளது.
'உணவுப்பாதை உறுப்புகள்:
• வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை முன் மற்றும் பின் சிறுகுடல், மலக்குடல் பொது கழிவுத்துளை
• உணவுப்பாதை பொதுப்புழை வழியே வெளியே திறக்கிறது.
• வாய், வாய்குழியில் திறக்கின்றது.
நாக்கு:
• வாய்குழியின் தரைப்பகுதியில் ஒட்டும் தன்மை கொண்ட நாக்கு அமைந்துள்ளது.
• நாக்கு முன் பகுதியில் இணைந்தும், பின் பகுதியில் இணையாமலும் உள்ளது.
• நாக்கின் நுனி பிளவுப்பட்ட முனையை கொண்டுள்ளது.
பற்கள்:
• மேல் தாடையின் உட்பகுதியில், கூர்மையான சிறிய மேல்தாடை பற்கள் ஒற்றை வரிசையில் அமைந்துள்ளன.
• உள்நாசித்துவாரங்களின் அருகில் இரண்டு தொகுதி வோமரைன் பற்கள் உள்ளன.
• கீழ்த்தாடை பற்களற்று காணப்படுகிறது.
சுரப்பிகள்:
• கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. கணையம், கணைய நீரை உற்பத்தி செய்கிறது. இதில் செரிமான நொதிகள் உள்ளன.
செரிமான செயல்பாடுகள்:
இரைப்பை :
• உணவு ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் இரைப்பை நீரினால் செரிக்கப்படுகிறது. இது இரைப்பை பாகு என்று அழைக்கப்படுகிறது.
• இரைப்பை பாகு முன் சிறு குடலுக்குள் செலுத்தப்படுகிறது.
• பித்த நீரும், கணையநீரும், பொதுநாளம் வழியாக சிறுகுடலுக்கு வருகின்றன.
• பித்த நீர் கொழுப்பை பால்மமடைய செய்கிறது.
• கணைய நீர் - கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பை செரிக்க உதவுகிறது.
• செரித்த உணவு குடல் உறிஞ்சிகள், குடல் நுண் உறிஞ்சிகள் மூலம் உட்கிரகிக்கின்றன.
• செரிக்காத உணவு மலக்குடல் வழியாக பொது கழிவறைக்கு சென்று வெளியேற்றப்படுகின்றன.
28. தவளையின் ஆண் இணப்பெருக்க மண்டலத்தை விளக்குக.
ஆண் இனப்பெருக்க உறுப்பு :
• ஓரிணை விந்தகங்கள் உள்ளது. ஒவ்வொரு விந்தகமும் மீசார்க்கியம் என்னும் பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் மூலம் சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைக்கப்பட்டுள்ளது.
• விந்தகங்களிலிருந்து தோன்றும் விந்து நுண்குழல்கள் இறுதியில் அந்தந்தப் பக்கத்துச் சிறுநீரக நாளங்களில் திறக்கின்றன.
• சிறுநீரக நாளம் கழிவுநீக்க - இனப்பெருக்க பாதையாகிப் பொதுக்கழிவறையில் திறக்கிறது.
பெண் இனப்பெருக்க உறுப்பு :
• ஓரிணை அண்டகங்கள் உள்ளன. மீசோவேரியம் (mesovarium) என்னும் பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள், அண்டகங்களை சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைந்துள்ளன.
• சிறுநீரகங்களின் பக்கவாட்டில் ஓரிணை சுருண்ட அண்ட நாளங்கள் அமைந்திருக்கின்றன.
• அண்டநாளம் ஒவ்வொன்றும் முன்புறத்தில் உடற்குழியில் திறக்கக்கூடிய புனல் வடிவத் திறப்பையும், பொதுக்கழிவுப் பையில் திறக்கும் பின் பகுதியையும் கொண்டுள்ளன.
• பெண் தவளைகளில் அண்ட நாளங்கள் சிறுநீரக நாளங்களிலிருந்து தனித்துக் காணப்படுகின்றன.
• தவளையில் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுறுதலுக்கு பின் தலைப்பிரட்டை என்னும் சிறிய வளர் இளம் உயிரிகள் வெளிவருகிறது.
• இவை மூன்று இணை செவுள்களைப் பெற்றுள்ளது. தலைப்பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும் ஊனுண்ணும் முதிர் தவளையாக மாறுகிறது. இந்நிகழ்வுகள் வளர் உறுமாற்றம் என்று பெயர்.
29. தவளையின் பெண் இனப்பெருக்க மண்டலத்ததை விளக்குக.
30. ஆண் மற்றும் பெண் கரப்பான்பூச்சியை வேறுபடுத்துக.