Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பொருளாதார உயிரியல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - பொருளாதார உயிரியல் | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 07:01 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை

பொருளாதார உயிரியல்

நோக்கம் : பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கண்டறிதல்.

9. பொருளாதார உயிரியல்


நோக்கம் :

 

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கண்டறிதல்.

 

உற்றுநோக்கல் :

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் / நிழற்படங்கள் / படங்கள் / உண்மை மாதிரிகள் ஆகியவற்றை உற்றுநோக்குக

. உயிர் உரம் - ரைசோபியம்

. மருத்துவத் தாவரங்கள் - நிலவேம்பு, கற்றாழை (ஆலோ வேரா )

. காளான் - அகாரிகஸ் பைஸ்போரஸ்

. உள்நாட்டு கால்நடை இனங்கள் - உம்பளச்சேரி

. முக்கிய இந்திய மீன் இனங்கள் - கட்லா கட்லா

. தேனீக்களின் வகைகள் - ராணித்தேனீ. வேலைக்காரத் தேனீ

 

கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி


) தெளிவான படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

விடை:


ரைசோபியம் மண்ணில் வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா

ரைசோபியம் லெகூம் தாவரங்களின் வேர்களின் செல்களை ஊடுருவி அங்கே பெருக்கமடைந்து வேர்முண்டுகளை உருவாக்குகிறது.

வேர்முண்டுகளில் காணப்படும் இவ்வகை பாக்டீரியம் வாயுமண்டல நைட்ரஜனை நீரில் கரையக்கூடிய நைட்ரேட் உப்புக்களாக மாற்றுகிறது.

 

) அவற்றின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.

விடை:

'ஆன்ட்ரோகிராபிஸ் பானிக்குலேட்டா' என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் எல்லாவித வைரஸ் தொற்று மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகவும் காய்ச்சல் தவிர்க்கும் சிகிச்சை முறையாகவும் பயன்படுகிறது.

இந்த மூலிகை கசாயமானது பல்வேறு மருத்துவ குணமுடையது. குறிப்பாக உயிர் வெளியேற்ற எதிர்ப்பொருள் (antio×idant) வைரஸ் எதிர்ப்புப்பொருள், பாக்டீரியா எதிர்ப்புப் பொருள், உடல் வெப்பம் தணிப்பானாக (antipathetic) மற்றும் வலி நிவாரணியாகவும் (analgesic) செயல்படுகிறது.


• A - என்ற பகுதி இலையின் மையத்தில் காணப்படும் சதைப்பற்றான தெளிவான பகுதி - இது உட்கொள்வதற்கும், உடலின் வெளியே பூசுவதற்கும் ஏற்றது - அதில் ஊட்டச்சத்து காணப்படுகிறது.

• B - என்ற பகுதி கசப்பான மஞ்சள் நிற திரவம் முனைக்கும் உள்ளே உள்ள உண்ணக்கூடிய பகுதிக்கும் இடையே காணப்படும் இந்தப்பகுதி உண்ணக் கூடாத நச்சுத்தன்மையுடையது.

Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Identification of Microbes Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை : பொருளாதார உயிரியல் - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை