Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | மெழுகின் உருகுநிலை

அறிவியல் ஆய்வக சோதனைகள் - மெழுகின் உருகுநிலை | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 04:10 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை

மெழுகின் உருகுநிலை

நோக்கம் : குளிர்ச்சி வளைவு வரைபடத்தைப் பயன்படுத்தி மெழுகின் உருகுநிலையைக் கண்டறிதல்

3. மெழுகின் உருகுநிலை

 

நோக்கம் :

குளிர்ச்சி வளைவு வரைபடத்தைப் பயன்படுத்தி மெழுகின் உருகுநிலையைக் கண்டறிதல்

 

தத்துவம் :

உருகுநிலையானது தன் உள்ளுறை வெப்பத்தின் அடிப்படையில் அமைகிறது என்பதனைக் கண்டறிதல். தன் உள்ளுறை வெப்பம் என்பது ஓரலகு நிறையை (1 கிராம்) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அதன் வெப்பநிலை மாறாத வண்ணம் மாற்ற தேவைப்படும் வெப்பத்தின் அளவாகும்.


தேவையான பொருட்கள் :

முகவை, பர்னர், வெப்பநிலைமானி, கொதிநிலை குழாய், பற்றியுடன் கூடிய தாங்கி, முக்காலித் தாங்கி, மெழுகு, நிறுத்தற்கடிகாரம், கம்பி வலை மற்றும் மணல் அடங்கிய பாத்திரம்.


செய்முறை :

ஒரு கொதிநீர் கலனில் வைத்து மெழுகினை உருக்கவும்.

மெழுகு முற்றிலும் உருகும்போது, கலனில் இருந்து அதை அகற்றி, உலர்த்தி பின்னர் மணலில் புதைக்கவும்.

திரவம் திடமாக மாறும் போது ஒவ்வொரு 30 விநாடிக்கும் வெப்பநிலையைப் பதிவு செய்யவும்.

அதே நேரத்தில் எந்த நிலையான வெப்பநிலையில் திரவ மற்றும் திட நிலையில் மெழுகு உள்ளது எனப் பார்க்கவும்.

மெழுகின் வெப்பநிலை = ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேலுள்ள மாறாத வெப்பநிலை



கூர்நோக்கல் மற்றும் பட்டியலிடுதல் :


புள்ளி M இல் வெப்பநிலை மெழுகின் உருகு நிலையைக் குறிக்கிறது.


முடிவு : மெழுகின் உருகுநிலை = 56.7 °C


பரிந்துரை : ICT பக்கத்தின் உதவியுடன் மெழுகின் உருகிநிலைக்கான இந்த சோதனையின் காணொலியை www.kau.edu.sa என்ற இணைய தளத்தின் மூலம் காண்பிக்கலாம்.

Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Mapping of magnetic field Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை : மெழுகின் உருகுநிலை - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை