அறிவியல் ஆய்வக சோதனைகள் - வெர்னியர் அளவி-ஒரு கோள வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல் | 9th Science : Practical experiments
செய்முறை
இயற்பியல்
1. வெர்னியர் அளவி-ஒரு
கோள
வடிவப்
பொருளின்
விட்டத்தைக்
கணக்கிடுதல்
நோக்கம்:
வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி கோள வடிவப் பொருளின் விட்டம் காணல்.
தேவையான பொருள்கள்:
வெர்னியர் அளவி, கோள வடிவப் பொருள் (கிரிக்கெட் பந்து)
சூத்திரம்:
i)
மீச்சிற்றளவு (LC) = 1 முதன்மைக்கோல் பிரிவு - 1 வெர்னியர் கோல் பிரிவு
=
1 மிமீ -
0.9 மி.மீ
LC
= 0.1 மி.மீ (அ) 0.01 செ.மீ
ii)
கோள வடிவப் பொருளின் விட்டம் (d) = M.S.R+ (V.C ×
LC) ± ZC. செ.மீ
MSR
- முதன்மைக்
கோல் அளவு
VC
- வெர்னியர்
கோல் ஒன்றிப்பு
LC
- மீச்சிற்றளவு
(0.01 செ.மீ)
ZC
- சுழித்
திருத்தம்.
செய்முறை:
•
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவைக் கண்டறிதல்.
•
வெர்னியர் அளவியின் சுழித்திருத்தம் கண்டறிதல்.
•
கொடுக்கப்பட்டப் பொருளினை இரு கீழ்த்தாடைகளுக்கு இடையே உறுதியாகப் பற்றியிருக்கும்படி வைக்கவும்.
•
முதன்மைக்கோல் அளவினையும், வெர்னியர் ஒன்றிப்பு அளவினையும் குறிக்கவும்.
•
பொருளினை வெவ்வேறு பகுதிகளில் வைத்து சோதனையை மீண்டும் செய்து அளவினைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்துக.
•
சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கீடு செய்து கோளவடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடவும்.
d
= M.S.R + (V.C × LC) ± ZC. செ.மீ
மீச்சிற்றளவு (LC) = 0.01 செ.மீ
சுழித்திருத்தம் (ZC): -----------
முடிவு:
கொடுக்கப்பட்ட கோள வடிவப் பொருளின் விட்டம் 7.26 செ.மீ (கிரிக்கெட் பந்து)