Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

ஒளி | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Light

   Posted On :  17.09.2023 10:37 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு 6

ஒளி


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

) 0°

) 45°

) 90°

விடை:

) 90°


2. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது

) குழியாடி

) குவியாடி

) சமதள ஆடி

விடை:

) குழியாடி


3. பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது

) குழியாடி

) குவியாடி

) சமதள ஆடி

விடை:

) குழியாடி


4. எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது

) குழியாடி

) குவியாடி

) சமதள ஆடி

விடை:

) குவியாடி


5. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,

) எதிரொளிக்கப்படுகிறது

) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.

) விலகல் மட்டும் அடைகிறது

விடை:

) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது


6. ஒளியின் திசைவேகம் ல் பெருமமாக உள்ளது.

) வெற்றிடத்தில்

) கண்ணாடியில்

) வைரத்தில்

விடை:

) வெற்றிடத்தில்

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது ……………… செல்கிறது.

விடை:

குத்துக்கோட்டை நோக்கி விலகிச்

2. தெரு விளக்குகளில் (street light) பயன்படும் ஆடி ……………………. .

விடை:

குழியாடி

3. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் ………………. கோணத்தைப் பொறுத்தது.

விடை:

படு

4. 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = …………………

விடை:

10 செ.மீ

5. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள் ……………… .

விடை:

குழி ஆடிகள்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்தியமைக்க

1. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.

விடை:

தவறு,

ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது

 

2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை .

விடை:

தவறு.

ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும்.

 

3. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.

விடை:

சரி


4. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.

விடை:

தவறு

குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய்பிம்பம் உருவாகும்.

 

5. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே. 

விடை:

சரி

 

IV. பொருத்துக.

1. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு. - குழியாடி

2. மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது - முழு அக எதிரொளிப்பு

3. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது - உருப்பெருக்கம்

4. கானல் நீர் - குவியாடி

5. பல் மருத்துவர் பயன்படுத்துவதுஒளிவிலகல்

விடை:

1. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு. - உருப்பெருக்கம்

2. மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது -குவியாடி

3. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது - ஒளிவிலகல்

4. கானல் நீர் - முழு அக எதிரொளிப்பு

5. பல் மருத்துவர் பயன்படுத்துவதுகுழியாடி


V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்

சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

1. கூற்று: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.

காரணம்: ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.

விடை:

() கூற்று தவறு ஆனால் காரணம் சரி

 

2. கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.

காரணம்: படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°

விடை:

() கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.


Tags : Light | Physics | Science ஒளி | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Light : One Mark Questions Answers Light | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - ஒளி | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒளி