ஒளி | இயற்பியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Physics : Light
VI. மிகக் சுருக்கமாக
விடையளி
1.
குறியீட்டு
மரபுகளின்
அடிப்படையில்,
எந்த
ஆடி
மற்றும்
எந்த
லென்ஸ்
எதிர்க்குறி
குவிய
தொலைவு
கொண்டது?
விடை:
(i) குழி ஆடி
(ii) குழி லென்ஸ்
2.
நேரான,
பெரிதாக்கப்பட்ட
பிம்பம்
மற்றும்
அதே
அளவுள்ள
தலைகீழான
பிம்பம்,
இவற்றைத்
தரக்கூடிய
ஆடி
(கள்)
எது/எவை?
விடை:
குழி ஆடி
3.
குழியாடி
ஒன்றின்
குவியத்தில்
பொருள்
வைக்கப்படும்போது,
பிம்பம்
எங்கே
உருவாகும்?
விடை:
பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.
4.
ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?
விடை:
(i) மாறுபட்ட அடர்த்தி உள்ள ஊடகம்.
(ii) ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்.
5.
வெற்றிடத்தில்
ஒளியின்
வேகம்
என்ன?
விடை:
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 × 10° மீவி-1 6.
6.
பல்லை
ஆராய
பல்
மருத்துவர்கள்
குழியாடியையே
பயன்படுத்துகின்றனர்.
ஏன்?
விடை:
நேரான, பெரிதாகக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைக்கிறது.
VII. சுருக்கமாக விடையளி
1.
அ)
படத்தில்
கொடுக்கப்பட்டுள்ள
குழியாடியில்
பொருளின்
பிம்பம்
எவ்வாறு
கிடைக்கப்
பெறுகிறது'
என
வரைந்து
காட்டுக.
ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்?
விடை:
அ. பொருளைவிடப் பெரிய, தலைகீழான மெய் பிம்பம்.
ஆ.
2.
பின்வருவனவற்றுள்
குவியாடி
எது?
குழியாடி
எது?
எனத்
தெரிவு
செய்து
அதனை
அட்டவணைப்படுத்துக.
பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.
விடை:
1. பின்னோக்கு ஆடி - குவி ஆடி
2. பல் மருத்துவர் ஆடி - குழி ஆடி
3. கை மின்விளக்கு ஆடி - குழி ஆடி
4. பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி - குவி ஆடி
5. ஒப்பனை ஆடி - குழி ஆடி
3.
கோளக
ஆடியின்
மீது
பட்டு
அதே
திசையில்
எதிரொளிக்கப்படும்
படுகதிரின்
திசை
எது?
ஏன்
என்று
காரணம்
கூறுக.
விடை:
ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர் ,எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும்.
விதி : ∠i = 0,ஃ ∠r = 0
4.
உருப்பெருக்கம்
என்றால்
என்ன?
அதன்
சமன்பாட்டை
எழுதுக.
மெய் பிம்பம், மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கான
குறியீடு
என்ன?
விடை:
வரையறை :
பிம்பத்தின் அளவிற்கும் h1 பொருளின் அளவிற்கும் h0 இடையேயான தகவு ஆகும்.
சமன்பாடு m = h1 / h0 = v / u
அ) மெய்பிம்பத்தின் குறியீடு = (-) எதிர்குறி
ஆ) மாய பிம்பத்தின் குறியீடு = (+) நேர்குறி
5.
கோளக
ஆடிச்
சமன்பாட்டை
எழுதுக.
அதில்
பயன்படுத்தப்படும்
குறியீடுகள்
ஒவ்வொன்றையும்
விளக்குக.
விடை:
கோளக ஆடிச் சமன்பாடு 1 / f = 1 / u + 1 / v
f - கோளக ஆடியின் குவியத் தொலைவு
u - பொருளின் தொலைவு
v - பிம்பத்தின் தொலைவு.
VIII. விரிவாக விடையளி
1.
அ)
கதிர்ப்படங்கள்
மூலம்
ஒரு
குழியாடி
பின்வரும்
நிலைகளில்
எவ்வாறு
பிம்பத்தை
உருவாக்குகிறது
என
வரைந்து
காட்டுக.
i)
c -இல்
ii)
c-க்கும்
F-க்கும்
இடையில்
iii)
F-க்கும்
P-க்கும்
இடையில்
ஆ) மேற்கண்ட ஒவ்வொரு நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக.
விடை:
2.
பின்வரும் நிகழ்வுகளில் ஒளியானது விலகல் அடையும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக
விடை:
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது குத்துக் கோட்டை நோக்கி விலகல் அடைகிறது
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒளிக்கதிர் செல்லும்போது பரப்பிற்குக் குத்தாகப்படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை .
IX. கணக்குகள்
1.
குழியாடியின்
முன்
7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது
அதன்
ஒன்றின்
மும்மடங்கு
உருப்பெருக்கப்பட்ட
பிம்பம்
கிடைக்கிறது
எனில்,
பிம்பம்
எவ்விடத்தில்
கிடைக்கும்?
தீர்வு :
பொருளின் தொலைவு u = 7 செ.மீ
உருப்பெருக்கம் m = - v / u தொலைவில்
பிம்பத்தின் தொலைவு (v) = ?
-3 = - v / u
3u = v
v = 3u = 3 × 7 = 21 செ.மீ.
விடை:
21 செ.மீ. தொலைவில்
2.
காற்றிலிருந்து
1.5 ஒளிவிலகல்
எண்
கொண்ட
கண்ணாடிப்
பாளத்திற்கு
ஒளி
செல்கிறது.
கண்ணாடியில்
ஒளியின்
வேகம்
என்ன?
(வெற்றிடத்தில்
ஒளியின்
வேகம்
3 × 108 மீ/வி)
தீர்வு :
காற்றில் ஒளியின் வேகம் c = 3 × 108 மீ/வி
ஒளிவிலகல் எண் µ = 1.5
கண்ணாடியில் ஒளியின் திசை வேகம் V = ?
µ = -- காற்று (அல்லது) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்
µ = c / v
1.5 = 3 × 108 / v
v = 3 × 108 / 1.5
விடை:
கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் v = 2 × 108 மீ/வி
3.
நீரில்
ஒளியின்
வேகம்
2.25 × 108 மீ/வி, வெற்றிடத்தில்
ஒளியின்
வேகம்
3 × 108 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக.
தீர்வு :
நீரில் ஒளியின் வேகம் v = 2.25 × 108 மீ/வி
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c = 3 × 108 மீ/வி
நீரின் ஒளிவிலகல் எண் µ = வெற்றிடத்தில் ஒளியின் வேகம் / நீரில் ஒளியின்வேகம்
µ = c / v = 3 × 108 / 2.25 × 108 = 3 /
2.25
µ = 1.33(அலகு இல்லை)
விடை:
µ = 1.33(அலகு இல்லை)
X. உயர்சிந்தனை வினாக்கள்
1.
ஒளிக்கதிரானது
தண்ணீரிலிருந்து
காற்றை
நோக்கிச்
செல்கிறது.
அதன்
பாதையில்
ஏற்படும்
மாறுபாட்டைக்
குறிக்கும்
கதிர்ப்படம்
வரைக.
விடை:
2.
ஓர்
ஒளிக்கதிர்
காற்றிலிருந்து
கண்ணாடிக்குள்
நுழையும்
போது
ஏற்படும்
விலகு
கோணத்தின்
மதிப்பானது,
படுகோணத்தின்
மதிப்பை
விட
அதிகமாக
இருக்குமா?
அல்லது
குறைவாக
இருக்குமா?
விடை:
ஒளிக்கதிர் காற்றிலிருந்து கண்ணாடிக்குள் நுழையும் போது ஏற்படும் விலகு கோணத்தின் மதிப்பு படுகோணத்தின் மதிப்பை விட குறைவாக இருக்கும்.
காரணம்: விலகு கதிர் அடர் மிகு ஊடகத்தில் குத்துக்கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.
3.
வைரத்தின்
ஒளிவிலகல்
எண்ணின்
மதிப்பு
2.41 எனில்,
அந்த
வைரத்தின்
வழியாக
ஒளி
செல்லும்
போது
அதன்
வேகம்
என்னவாக
இருக்கும்?
தீர்வு :
வைரத்தின் ஒளிவிலகல் எண் µ = 2.41
காற்றில் ஒளியின் திசைவேகம் c = 3 × 108 மீ/வி
வைரத்தில் ஒளியின் வேகம் V = ?
µ = C / V
V = C / µ = 3 × 108 / 2.41
V = 1.245 × 108 மீட்டர்/ விநாடி.
விடை:
V = 1.245 × 108 மீட்டர்/ விநாடி.
பிற நூல்கள்
1.
Optics - Brijlal and Subramaniam (1999) Sultan chand Publishers.
2.
Optics - Ajay Ghotak Dharyaganj Publishing circle, New Delhi.
3.
Physics for entertainment - Book 2 Yakov Perelman, Mir Publishers
இணைய வளங்கள்
https://www.geogebra.org/m/aJuUDA9Z
http://www.animations.physics.unsw.edu.au/
light/geometrical-optics/
http://www.splung.com/content/sid/4/page/
snellslaw
கருத்து வரைபடம்
இணையச்செயல்பாடு
ஒளியியல் - ஒளி விலகல்
படி 1.
ஒளி விலகல் குறித்து மாணவன் மேலும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள GOOGLE
தேடு பொறி அல்லது உலாவிக்குச் சென்று
"LIGHT
- PhET" என்று தட்டச்சு செய்யவும். "BENDING LIGHT" என்று மூன்று விருப்பத் தேர்வுகளுடன் தோன்றும்.
படி 2.
INTRO வைச் சொடுக்கினால் ஒரு டார்ச் விளக்கு மற்றும் நான்கு
மூலைகளிலும் விருப்பத் தேர்வுகள் தோன்றும். அவற்றைத் தேர்வு செய்து டார்ச் விளக்கின் பொத்தானை அழுத்தினால் ஒளி விலகல் நடைபெறும். கோணங்களை இடது கீழ் மூலையில் உள்ள கோணமானி கொண்டு அளந்து கொள்ளலாம்.
படி 3.
அதன் பிறகு PRISM மற்றும் MORE
TOOLS தேர்வு செய்து ஊடகங்கள்,
ஒளிக் கதிர்களின் நிறங்கள், ஒளிக் கற்றைகள் இவற்றை மாற்றி மாற்றி அமைத்து ஒளி விலகலைக் குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும்.
தரவிறக்கம் செய்ய -
திறன் பேசியின் மூலம் நேரடியாகச் செல்ல கொடுக்கப் பட்டுள்ள QR
CODE அல்லது உரலி மூலம் உள்ளே சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரலி: https://phet.colorado.edu/sims/html/bending-light/latest/bending-light_en.html