Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Periodic Classification of Elements

   Posted On :  18.09.2023 12:09 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு 12

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?

) நவீன தனிம அட்டவணை

) ஹுண்ட்ஸ் விதி

) எண்ம விதி

) பௌலீயின் விலக்கல் கோட்பாடு

விடை :

) எண்ம விதி


2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ……………… இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.

) அணு எண்

) அணு நிறை

) ஒத்த தன்மை

) முரண்பாடு

விடை :

) அணு எண்


3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் …………………….. தொகுதி ………………….. தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.

) 7,18

) 18,7

) 17,8

) 8, 17

விடை :

) 18,7

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. டாப்ரீனீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ………………… ஆகும்.

விடை :

சராசரி

2. அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ……………….

தொகுதியில் காணப்படும்.

விடை :

18வது

3. தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாப்ரீனீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ………………… ஆகும்.

விடை :

அணு நிறை

4. திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ……………………… .

விடை :

பாதரசம்

 

III. பொருத்துக

1. மும்மை விதி - நியூலாந்து

2. கார உலோகம் - கால்சியம்|

3. எண்ம விதி - ஹென்றி மோஸ்லே

4. கார மண் உலோகம் - சோடியம்

5. நவீன ஆவர்த்தன விதிடாபர்னீர்

விடை :

1. மும்மை விதி - டாபர்னீர்

2. கார உலோகம் - சோடியம் 

3. எண்ம விதி - நியூலாந்து

4. கார மண் உலோகம் - கால்சியம்

5. நவீன ஆவர்த்தன விதி –  ஹென்றி மோஸ்லே

 

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

விடை :

சரி


2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.

விடை :

தவறு

உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும்.


3. உலோகப் போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.

விடை :

சரி


4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

விடை :

சரி


5. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

விடை :

சரி

 

V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்

1. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது

) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.

விடை :

) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

Tags : Periodic Classification of Elements | Chemistry | Science தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Periodic Classification of Elements : One Mark Questions Answers Periodic Classification of Elements | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை