விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 5 : Living World of Animals

   Posted On :  16.09.2023 03:45 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

அ. உளவியல்

ஆ. உயிரியல்

இ விலங்கியல்

ஈ. தாவரவியல்

விடை: ஆ) உயிரியல்

 

2 கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?

i. சுவாசம்

ii. இனப்பெருக்கம்

iv. கழிவு நீக்கம்

ii. தகவமைப்பு

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ. i, ii மற்றும் iv மட்டும்

ஆ. i, ii மட்டும்

இ ii மற்றும் iv மட்டும்

ஈ. i, iv, ii மற்றும் iii

விடை : ஈ) i,  iv,  ii  மற்றும்  iii

 

3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?

அ. தோல்

ஆ. செவுள்கள்

இ நுரையீரல்கள்

ஈ.சுவாச நுண்குழல்

விடை: இ) நுரையீரல்கள்

 

4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

அ. உணவு மற்றும் நீர்

ஆ. நீர் மட்டும்

இ காற்று, உணவு மற்றும் நீர்

ஈ. உணவு மட்டும்

விடை: இ) காற்று, உணவு மற்றும் நீர்

 

5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?

அ. மண்புழு

ஆ. குள்ளநரி

இ மீன்

ஈ.தவளை

விடை: இ) மீன்

 

6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

அ. புலி, மான், புல், மண்

ஆ. பாறைகள், மண், தாவரங்கள், காற்று

இ. மண், ஆமை, நண்டு, பாறைகள்

ஈ நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

விடை: ஈ) நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

 

7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

அ. ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

ஆ. மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

இ மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

ஈ. காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

விடை: இ) மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

 

8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

அ. கனமான மற்றும் எலும்புகள் வலிமையான

ஆ. மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்

 

இ உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்

ஈ. தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

விடை: இ) உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்

 

9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

அ. போலிக்கால்கள்

ஆ. கசையிழை

இ பாதம்

ஈ. குறு இழை

விடை: ஈ) குறு இழை

 

10. கங்காரு எலி வசிப்பது

அ. நீர் வாழிடம்

ஆ. பாலைவன வாழிடம்

இ. புல்வெளி வாழிடம்

ஈ மலைப்பிரதேச வாழிடம்

விடை: ஆ) பாலைவன வாழிடம்

 

II கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. நீர்நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை வாழிடம் என்று அழைக்கலாம்.

2 செல் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ஒரு செல் மற்றும் பல செல் உயிரினம் என வகைப்படுத்தலாம்

3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு பறக்கும் திசையை கட்டுப்படுத்த க்கு உதவுகிறது.

4. அமீபா பொய்க்கால்கள் உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

 

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

 

1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.  விடை: சரி

2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

விடை: தவறு.  புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

3. ஒருசெல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

விடை: சரி

4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

விடை: தவறு பறவைகளால் ஒரு நேரத்தில் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்க முடியும்.

5. பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.

விடை: தவறு.  பாரமீசியம் ஒரு ஒருசெல் உயிரி.

 

 

IV. பின்வருவனவற்றை நிறைவு செய்க.

1. மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை என்று வாழிடம் அழைக்கிறோம்

2. ஒருசெல்லால் ஆன உயிரினங்கள் ஒரு செல் உயிரினம் என்று அழைக்கப்படுகின்றன.

3. மீனின் சுவாச உறுப்பு. செவுள்கள் ஆகும்

4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் நடக்கின்றன

5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில்  கொழுப்பு சேமிக்கின்றன.

 

V. மிகச் சுருக்கமாக விடையளி.

 

1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

• நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.

• வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.

 •  வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

 

2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்

ஒட்டகம் வாழும் இடங்கள்

• ஜோத்பூர்

• பஸ்கர்

• பிக்கானர்

• ஜாஸ்சால்மர்

 

3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

அமீபா  இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது.  இக்கால்கள்  மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது,

 

4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?

பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால் , தலையில் உள்ள உறுப்புகள் - இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்,

 

5. பறவைகள் காற்றில் பறக்கும்பொழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன?

பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது

 

VI. சுருக்கமாக விடையளி.

 

1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.

ஒரு செல் உயிரிகள்

1 ஒரு செல்லால் ஆனவை

2 உயிரியில் உள்ள ஒரு செல்லே வாழ்க்கைச் செயல்களை மேற்கொள்கிறது

3 பொதுவாக இவை அளவில் மிகச்சிறியவை

4   நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும்.

5 இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது

6 செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது

எ.கா,  அமீபா, பாரமீசியம் மற்றும் யூக்ளினா

பல செல் உயிரிகள்

பல செல்லால் ஆனவை

செல்களுக்கிடையே வாழ்க்கைச் செயல்கள் செய்வதற்கென்று சிறப்பு அம்சங்கள்  உள்ளன.

பொதுவாக இவை அளவில் பெரியவை

கண்களால் பார்க்க இயலும்

இவற்றில் திசுக்கள் , உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன.

செல் பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது.  எ.கா- மண்புழு, மீன், தவளை, பல்லி மற்றும்  மனிதன்.

 

2. துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.

துருவக்கரடிகள்:

1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது,

2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது

3. தடித்த தோலைப் பெற்றுள்ளது,

 4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.  

5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது,

6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது. பென்குயின்:

1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது,

2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.

3. கடினமான தோலை பெற்றுள்ளது.

4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது,

5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது,

 

3. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?

1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு,

2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்,

3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்,

4, பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்,

 

4. முதுகெலும்புள்ள விலங்குகளின் பல்வேறு தகவமைப்புகளைக் கூறுக.

1, இவைகள் அனைத்தும் பல செல் உயிரிகள்,

2. அனைத்து முதுகெலும்பிகளும் தனித்து வாழ்பவை.

3. பாலினப்பெருக்க முறையில் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன.

4. கடினமான மற்றும் வளையும் தன்மை கொண்ட, முதுகெலும்பை பெற்றுள்ளது.

5. மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை பெற்றுள்ளது.

6. நன்கு வளர்ந்த உள் எலும்பு சட்டகத்தைக் கொண்டது.

7. மிகவும் மேம்பாடு அடைந்த மூளையைக் கொண்டது.

 

VII. விரிவாக விடையளி

 

1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.

2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.

3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை,

4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.

5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.

6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது,

7.  நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

Tags : Living World of Animals | Term 1 Unit 5 | 6th Science விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 5 : Living World of Animals : Questions Answers Living World of Animals | Term 1 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம் : வினா விடை - விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்