Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | உடல் நலமும், சுகாதாரமும்

பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உடல் நலமும், சுகாதாரமும் | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  16.09.2023 05:37 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

உடல் நலமும், சுகாதாரமும்

நலம் எனும் வார்த்தையானது முழுமையான மன மற்றும் உடல் நலத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் தங்கள் நலத்தை குறைந்தபட்ச அளவிலாவது பேணுவதற்கு சுகாதாரத்தைப் பேணுவது அவசியமாக உள்ளது.

அலகு 6

உடல் நலமும், சுகாதாரமும்



 

கற்றல் நோக்கங்கள்

உணவின் பல்வேறு உட்கூறுகளை வகைப்படுத்துதல்

உணவில் உள்ள சத்துக்களின் முக்கியத்துவத்தைக் கண்டறிதல்

சரிவிகித உணவு பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ளல்

சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைப் பட்டியலிடுதல்

தன் சுத்தம் பற்றி விளக்குதல்

பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய்களை வேறுபடுத்துதல்

 

அறிமுகம்

நலம் எனும் வார்த்தையானது முழுமையான மன மற்றும் உடல் நலத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் தங்கள் நலத்தை குறைந்தபட்ச அளவிலாவது பேணுவதற்கு சுகாதாரத்தைப் பேணுவது அவசியமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO), "நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூக நலனைக் குறிப்பதாகும்: நோயின்றி இருப்பதை மட்டும் குறிப்பதல்ல". என்று வரையறுத்துள்ளது. உடல் நலம் என்பது நமது சுற்றுச்சூழலில் ஏற்படும். அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும். இந்நிலை ஹோமியோஸ்டேசிஸ் எனப்படுகிறது.

சுகாதாரம் என்பது உடல் நலனிற்கு ஏற்ற நடைமுறைகளை நிறுவக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய அறிவியல் ஆகும். தினமும் பற்களைத் துவக்குதல் என்பது வாயின் சுகாதரத்தைப் பேணும் முக்கிய வழியாகும். நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், நோய் பரவாமல் இருப்பதற்காகவும் நம்மையும், நமது சுற்றுப் புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்கும் செயல்முறையே சுகாதாரம் என்று வரையறுக்கப்படுகிறது.



தீபாவின் குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருள்களின் பட்டியலை தயார் செய்தனர்.


தீபா அப்பட்டியலைப் பார்த்தவுடன் தன் பற்றோரிடம், "ஏன், அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக உட்கொள்கிறோம். ஆனால் நெய் மற்றும் எண்ணெயை குறைவாக உட்கொள்கிறோம்", என்று வினவினாள். கொடுக்கப்பட்டுள்ள மளிகைப் பொருள்களின் பட்டியலைப் பற்றி உனது ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்.



Tags : Term 1 Unit 6 | 6th Science பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Health and Hygiene Term 1 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : உடல் நலமும், சுகாதாரமும் - பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்