கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 2 Unit 7 : Parts of Computer

   Posted On :  20.09.2023 10:59 pm

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

அ. சுட்டி

ஆ. விசைப்பலகை

இ ஒலிபெருக்கி

ஈ. விரலி

விடை : இ) ஒலிபெருக்கி

 

2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

அ. ஈதர்வலை (Ethernet)

ஆ. வி.ஜி.ஏ. (VGA)

இ. எச்.டி.எம்.ஐ. (HDMI)

ஈ. யு.எஸ்.பி. (USB)

விடை : ஆ) வி.ஜி.ஏ. (VGA)

 

3. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

அ. ஒலிபெருக்கி

ஆ. சுட்டி

இ திரையகம்

ஈ.அச்சுப்பொறி

விடை : ஆ) சுட்டி

 

4. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

அ. ஊடலை

ஆ. மின்னலை

இ. வி.ஜி.ஏ. (VGA)

ஈ. யு.எஸ்.பி. (USB)

விடை : அ) ஊடலை

 

5. விரலி ஒரு ----------------------- ஆக பயன்படுகிறது.

அ. வெளியீட்டுக்கருவி

ஆ. உள்ளீட்டுக்கருவி

இ சேமிப்புக்கருவி

ஈ இணைப்புக்கம்பி

விடை : இ) சேமிப்புக்கருவி

 

II. பொருத்துக

1. காணொளிப் பட வரிசை (VGA) - உள்ளீட்டுக்  கருவி

2. அருகலை - இணைப்புவடம்

3. அச்சுப்பொறி - எல்.இடி. (LED) தொலைக்காட்சி

4. விசைப்பலகை - கம்பி இல்லா இணைப்பு

5. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI) - வெளியீட்டுக்கருவி

 

விடைகள்

1. காணொளிப் பட வரிசை (VGA) - இணைப்புவடம்

2. அருகலை - கம்பி இல்லா இணைப்பு

3. அச்சுப்பொறி - வெளியீட்டுக்கருவி

4. விசைப்பலகை - உள்ளீட்டுக்  கருவி

5. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI) - எல்.இடி. (LED) தொலைக்காட்சி

 

III. குறுகிய விடையளி

 

1. கணினியின் கூறுகள் யாவை ?

1.  உள்ளீட்டகம் (Input Unit)

2.  மையச்செயலகம் (CPU)

3. வெளியீட்டகம் (Output Unit)

 

 

2. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.


உள்ளீட்டகம்

1.  கணினி செயலாக்கத்திற்கு தரவுகளையும், கட்டளைகளையும்  உள்ளீடுசெய்வதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளையே உள்ளீட்டுக்  கருவிகள் என்றழைக்கிறோம்

2. விசைப்பலகை, சுட்டி, வருடி, பட்டை குறியீடு படிப்பான்,  ஒலிப்பெருக்கி, இணையப்படக் கருவி ஒலிபேனா போன்றவை  உள்ளீட்டுக்கருவிகள் ஆகும்.

வெளியீட்டகம்

மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகள் பெறப் படுகின்றன.  இக்குறிப்புகளைக் கணினியானது பயனருக்குக் கொண்டு செல்ல வெளியீட்டகம் பயன்படுகிறது

கணினித்திரை, அச்சப்பொறி ஒலிபெருக்கி, வரைவி போன்றவை  வெளியீட்டுக் கருவிகள் ஆகும்.


 

3. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.

இணைப்புவடங்களின் வகைகள்:

1. விஜிஏ (VGA - Video Graphics Array)

2. எச்டிஎம்ஐ (HDMI - High Definition Multimedia Interface)

3.  யுஎஸ்பி (USB - Universal Serial Bus)

4.  தரவுக்கம்பி (Data Cable)

5.  ஒலி வடம் (Audio Cable)

6.  மின் இணைப்புக்கம்பி (Power cord)

7.  ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic Cable)

8.  ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet Cable)


1.  யுஎஸ்பி (USB) இணைப்பு வடம்:

அச்சுப்பொறி (Printer),  வருடி (Scanner),  விரலி (Pen drive),  சுட்டி (Mouse),

விசைப்பலகை (Key Board),  இணையப்படக்கருவி (Web Camera),

திறன்பேசி (Smart Phone) போன்றவற்றைக் கணினியுடன் இணைக்க

பயன்படுகிறது.


2. தரவுக்கம்பி (Data cable) இணைப்பு வடம்:

கணினியின் மையச்செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி

(Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது.


3. மின் இணைப்பு வடம் (Power card) :

மையச்செயலகம்,  கணினித்திரை,  ஒலிப்பெருக்கி,  வருடி

ஆகியவற்றிற்கு  மின்இணைப்பை  வழங்குகிறது.


செயல்பாடு:

(4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியியை இணைக்கும் செயல்பாடு.)

கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள 4- 3- 2- 1 எனும் சூத்திரத்தை பயன்படுத்தி கணினியின் பாகங்களை இணைக்கவும். அதாவது 4 கருவிகளான: மையச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மையச்செயலகம் கணினித்திரை ஆகிய 2 - ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்..

ஒரு முழுமையான கணினியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பாகங்கள். சுட்டி, விசைப்பலகை, கணினித்திரை, மையச்செயலகம், மற்றும் இவைகளை இணைப்பதற்குத் தேவையான இணைப்பு மற்றும் மின்கம்பிகள்


Tags : Parts of Computer | Term 2 Unit 7 | 6th Science கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 7 : Parts of Computer : Questions Answers Parts of Computer | Term 2 Unit 7 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள் : வினா விடை - கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்