Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | கணினியை இணைத்தல்

கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கணினியை இணைத்தல் | 6th Science : Term 2 Unit 7 : Parts of Computer

   Posted On :  20.09.2023 10:44 pm

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்

கணினியை இணைத்தல்

உங்கள் வீடுகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவை மின்கம்பிகள் அதைப்போலவே, மூலம் இணைக்கப்பட்டு இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அன்றி, கணினியின் பல்வேறு பாகங்கள், இணைப்புவடம் (connecting cable) மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

கணினியை இணைத்தல்

உங்கள் வீடுகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவை மின்கம்பிகள் அதைப்போலவே, மூலம் இணைக்கப்பட்டு இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அன்றி, கணினியின் பல்வேறு பாகங்கள், இணைப்புவடம் (connecting cable) மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதர மின்சாதன பொருள்கள் போல் கணினியானது பல பாகங்களாக இருப்பதனால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது ஒரு முழுமையான இயங்கு நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதாலேயே, கணினியை ஆங்கிலத்தில் சிஸ்டம் (System) என்று அழைக்கிறோம்.

இணைப்புவடம் பல்வேறு அளவுகளில் காணப்படுவதோடு, ஒவ்வோர் இணைப்புவடமும் தனிப்பட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளன. அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் இனிக் காண்போம்.

 

இணைப்புவடங்களின் வகைகள்

• காணொளிப் பட வரிசை (VGA)

• மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)

• பொதுவரிசை இணைப்பு (USB)

• தரவுக்கம்பி (Data cable)

• ஒலி வடம் (Audio Cable)

• மின் இணைப்புக் கம்பி (Power cord)

• ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic cable)

• ஈதர் வலை இணைப்புக்கம்பி (Ethernet cable)


1. காணொளிப் பட வரிசை (VGA)


கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணைக்க பயன்படுகிறது.

அச்சுப்பொறி (printer),

வருடி (scanner),

விரலி (pen drive),

சுட்டி (mouse),


2. பொதுவரிசை இணைப்பு (USB) 


விசைப்பலகை (keyboard),

இணையப்படக்கருவி (web camera),

திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.


3. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)


உயர் வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே கேபிள் வழியாக எல்.இ.டி தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க HDMI பயன்படுகிறது.


4. தரவுக்கம்பி (Data cable)


கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினியை ஆகியவற்றை இணைக்க, தரவுக் கம்பி பயன்படுகிறது.


5. ஒலி வடம் (Audio cable)


கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்க ஒலி வடம் பயன்படுகிறது.


6. மின் இணைப்புவடம் (Power Cord)


மையச்செயலகம், கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

 

7. ஒலி வாங்கி (Mic)


ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலி வாங்கி இணைப்புவடம் உதவுகிறது.


8. ஈதர் வலை (Ethernet)


கணினியுடன் இணையவழித் தொடர்பை ஏற்படுத்த ஈதர் வலை (Ethernet) பயன்படுகிறது. 

Tags : Parts of Computer | Term 2 Unit 7 | 6th Science கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 7 : Parts of Computer : Connecting the Computer Parts of Computer | Term 2 Unit 7 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள் : கணினியை இணைத்தல் - கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்