Home | 4 ஆம் வகுப்பு | 4வது அறிவியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Science : Term 1 Unit 3 : Work and Energy

   Posted On :  01.09.2023 09:52 am

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

மதிப்பீடு


. சரியான சொல்லைப் பயன்படுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

(சரிவுப்பாதை, எளிய இயந்திரங்கள், வேலை, ஆற்றல், கப்பி)

1. ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது ---------- ஆகும்.

விடை : வேலை

2. வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது -------------

விடை : ஆற்றல்

3. இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.

விடை : கப்பி

4. வேலையை எளிதாக்க உதவுகிறது.

விடை : எளிய இயந்திரம்

5. சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

விடை : சரிவுப் பாதை

 

. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.


 

. பொருத்துக

1. இரண்டாம் வகை நெம்புகோல் நீர் இறைத்தல்

2. கப்பி மிதிவண்டி

3. முதல் வகை நெம்புகோல் கொட்டை உடைப்பான் .

4. சக்கரம் மற்றும் அச்சு காற்று

5. புதுப்பிக்க இயலும் வளம் சாய்ந்தாடி

விடை:

1. இரண்டாம் வகை நெம்புகோல் கொட்டை உடைப்பான்

2. கப்பி நீர் இறைத்தல்

3. முதல் வகை நெம்புகோல் சாய்ந்தாடி

4. சக்கரம் மற்றும் அச்சு மிதிவண்டி

5. புதுப்பிக்க இயலும் வளம் காற்று

 

. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.


 

. வினாக்களுக்கு விடையளி.

1. ஆற்றலின் அலகு யாது?

விடை

ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.

 

2. எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.

விடை:

கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.

 

3. முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?

விடை:

ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.

 

4. எலுமிச்சை சாறுபிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தது? ஏன்?

விடை:

எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.

 

5. வேலை வரையறு.

விடை:

ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.

 

6. எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.

விடை:

மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்

Tags : Work and Energy | Term 1 Chapter 3 | 4th Science பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு அறிவியல் .
4th Science : Term 1 Unit 3 : Work and Energy : Questions with Answers Work and Energy | Term 1 Chapter 3 | 4th Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல் : கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல்