பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms

   Posted On :  04.09.2023 12:56 am

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 2 : ஐவகை நில அமைப்பு

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 2 : ஐவகை நில அமைப்பு : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு


அ. பட்டியலிடு


1.உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள ஊர்களையும் எழுதுக.


2. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள மரங்க பெயர்களை எழுதுக.


 

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. பரந்த சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது.

2. உலகின் மிகப்பழைமையான நான்காவது பெரிய நீர்ப்பாசனவசதி கொண்ட நீர்த்தேக்கம் கல்லணை

3. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடுகள் கீரிப்பாறை காப்புக்காடு

4.வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்.

5. பிச்சாவரம் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.

6. மெரினா கடற்கரை கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

 

இ பொருத்துக.


i) 1. முருகன் – முல்லை

2. திருமால் - பாலை

3. இந்திரன் - குறிஞ்சி

4. வருணன் - மருதம்

5. கொற்றவை - நெய்தல்

 

விடை :

1. முருகன் – குறிஞ்சி

2. திருமால் - முல்லை

3. இந்திரன் - மருதம்

4. வருணன் - நெய்தல்

5. கொற்றவை - பாலை

 

i) 1.கடவுள் - கிழங்கு அகழ்தல்

2 மலர்  - குறவர், குறத்தியர்

3.மக்கள் -குறிஞ்சி மலர்

4. தொழில் – முருகன்

 

விடை :

1. கடவுள் - முருகன்

2 மலர்  - குறிஞ்சி மலர்

3. மக்கள் - குறவர், குறத்தியர்

4. தொழில் – கிழங்கு அகழ்தல்

 

 

ஈ குறுகிய விடையளிக்க.

 

1. ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை எழுதுக.

• குறிஞ்சி - குறவர், குறத்தியர்.

• முல்லை - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.

• மருதம் - உழவர்கள்.

• நெய்தல் - பரதவர் (மீனவர்).

• பாலை - மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்.

 

2. முல்லை நிலத்தின் நான்கு கருப்பொருட்களைப் பட்டியலிடுக.

• கடவுள் - திருமால்.

• மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.

• தொழில் - கால்நடை மேய்த்தல், பழங்கள் சேகரித்தல், திருமணப் பயிர் வளர்த்தல்.

• மரம், மலர் - கொய்யா, முல்லை மலர்.

• விலங்கு, பறவை - கரடி, முயல், கிளி.

• இசைக்கருவி - முல்லை யாழ்.

 

3. செம்புலம் பற்றி நீ அறிவது யாது?

தமிழ்நாட்டில் காடுகள் நிறைந்த பகுதி முல்லை நிலம். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் செம்புலம் என அழைக்கப்படுகிறது.

 

4. பாலை நிலம் எவ்வாறு உருவானது?

குறிஞ்சியும், முல்லையும் வறண்டுவிடும் போது பாலை நிலம் உருவாகிறது

 

5. பாலை நிலத்தின் கருப்பொருள் யாது?

 

• கடவுள் - கொற்றவை.

• மக்கள் - மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்.

• தொழில் - கொள்ளையடித்தல்.

• மரம், மலர் - உழிஞை, பாலை, கள்ளி, இழுப்பை.

• விலங்கு, பறவை - புலி, யானை, கழுகு.

• இசைக்கருவி - பாலை யாழ்.

• வேம்பு - உடலில் உள்ள கிருமிகளைக் கொள்ளும்.

• முசுமுசுக்கை - நுரையீரல் சார்ந்த நோய்க்கு மருந்து.

• கரிசலாங்கன்னி உடல் முதுமையைப் போக்கும்.

Tags : Five Landforms | Term 1 Chapter 2 | 4th Social Science பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Social Science : Term 1 Unit 2 : Five Landforms : Questions with Answers Five Landforms | Term 1 Chapter 2 | 4th Social Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 2 : ஐவகை நில அமைப்பு : வினா விடை - பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 2 : ஐவகை நில அமைப்பு