நமது நண்பர்கள் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 1 Unit 2 : Our Friends

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : நமது நண்பர்கள்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 2 :நமது நண்பர்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

நமது நண்பர்கள் (முதல் பருவம் அலகு 1 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்)


மதிப்பீடு

I. அடைப்பு குறியிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.

(சாலை, நீதிபதி, முதலுதவி, ஆசிரியர், மருத்துவர்) 

1. முறையான சிகிச்சைக்கு முன் அளிப்பது __________.

விடை: முதலுதவி 

2. செவிலியர் __________ க்கு உதவி புரிவார்.

விடை: மருத்துவர் 

3. மக்கள் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லுபவர் __________

விடை: நீதிபதி 

4. நமக்கு அறிவை மேம்படுத்துபவர் __________

விடை: ஆசிரியர் 

5. சாலைப்பணியாளர்கள் __________ போடுகின்றனர். 

விடை: சாலை



II. சரியா / தவறா என்று எழுது. 

1. தையல்காரர் என்பவர் துணி தைப்பவர். ()

2. மின்பழுது செய்பவர் குழாய்களை சரிசெய்வார். ( x )

3. போக்குவரத்து காவல்காரர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவார். (✓)

4. மருத்துவர் மக்களையும் உடமைகளையும் காப்பாற்றுவார். ( x )

5. உச்சநீதிமன்றம் நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன். (✓)



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி: 

1. நமக்கு சேவை புரிபவர்கள் சிலரைக் குறிப்பிடு.

ஆசிரியர், மருத்துவர், பொறியாளர், காவல்காரர் போன்றோர் நமக்கு சேவை புரிபவர்கள் 


2. தீயணைப்பு வீரர்கள் என்பவர் யார்? 

மக்களையும், உடைமைகளையும் தீயிலிருந்து பாதுகாக்கின்றனர்.


3. ஒரு பொறியாளரின் பணி யாது?

கட்டிடம், கட்டுவதற்கு சரியான வடிவமைப்பை செய்கின்றனர். 


4. விவசாயிகள் பற்றி எழுது.

விவசாயிகள் நமது உணவு தானியங்களை பயிரிடுகின்றனர். 


5. இராணுவ வீரர்கள் நமது நாட்டை எவ்வாறு பாதுகாப்பார்கள்? 

இராணுவ வீரர்கள் நமது நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர்.



செயல்பாடு நாம் எழுதுவோம்

செவிலியர் என்பவர் மருத்துவருக்கு உதவியாக இருப்பர். நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து கொள்வர்.


ஒருவர் அவசர ஊர்தி வாகனத்தை எவ்வாறு தொடர்பு கொள்வர்? 

விபத்து நடந்த இடத்தைச் சரியான முறையில் 108 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும். 

விபத்தான நபருக்குத் தேவையான முதலுதவி செய்தல் வேண்டும். 

108 வரும் வரை விபத்தானவருடன் உடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.


 

சிந்தனை செய்

அவசரத் தேவைகளுக்கு கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அவசரப் போலீஸ் (காவல்) - 100 

தீயணைப்பு நிலையம் - 101 

அவசர ஊர்தி (நோயாளி) - 108



செயல்பாடு நாம் எழுதுவோம்

விடை காண்: 

1. எனக்கு முன்னே எனது மணியோசை வரும். தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பேன் 

நான் யார்? -  ப்புயணைதீ வாம்கன 

விடை: தீயணைப்பு வாகனம் 


2. நான் மக்களை பாதுகாப்பேன். குற்றங்களிலிருந்து சமூகத்தை பாதுகாப்பேன். மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவேன். 

நான் யார் - ல்காவர்கார

விடை: காவல்காரர்


3. நான் மண்ணில் கடுமையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் அம்மண் நமக்கு உணவு தரும். நான் யார்? – விசாவயி

விடை: விவசாயி



செயல்பாடு

நான் யார்? 

கோடிட்ட இடங்களை நிரப்புக.

நான் துணிகளைத் தைப்பவள்

நான் ஒரு தையல்காரி


நான் சுவற்றிற்கு வண்ணம் தீட்டுபவன்

நான் ஒரு வண்ணம் பூசுபவர்


நான் குழாய்களை பழுது பார்ப்பவன்

நான் ஒரு பொதுப்பணித்துறை வேலையாள்.


நான் வீடுகளையும் மக்களையும் காப்பவன்

நான் ஒரு காவலாளி


நான் மின் சாதனங்களைப் பழுதுபார்ப்பவன்

நான் ஒரு மின் பொறியாளர்.



செயல்பாடு

செயல்திட்டம்

சமூக பணியாளர்களுடன் அவர்களின் உபகரணங்களை பொருத்தி, அவர்களின் பணியை எழுதுக.





Tags : Our Friends | Term 1 Chapter 2 | 3rd Social Science நமது நண்பர்கள் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 1 Unit 2 : Our Friends : Questions with Answers Our Friends | Term 1 Chapter 2 | 3rd Social Science in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : நமது நண்பர்கள் : வினா விடை - நமது நண்பர்கள் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : நமது நண்பர்கள்