தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு கணக்கு - முறையான பட்டியலை முழுமையாக்குதல் | 6th Maths : Term 1 Unit 6 : Information Processing
முறையான பட்டியலை முழுமையாக்குதல்
ஒரு பட்டியலில் விடுபட்ட எண்களை நிரப்பும் பயிற்சியினை 4 இலக்க எண்களைப் பயன்படுத்திப் பயின்றுள்ளீர்கள். எந்தெந்த வழிமுறைகளில் ஒரு பட்டியலில் விடுபட்ட எண்களை வரிசைப்படுத்தினீர்களோ அதே போல மற்றவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும்.
1. சுடோகு
சுடோகு என்பது ஓர் எண் விளையாட்டாகும். இது பல்வேறு விதிகளைப் பின்பற்றிச் சுடோகுவை நிறைவுச் செய்வது என்பது எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டும், சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்படாமலும் இருக்கும். மேலும் இங்கு கிடைமட்டக் கட்டங்களும் (நிரை), செங்குத்தான கட்டங்களும் (நிரல்) இருக்கும். கிடை மட்டத்திலும், செங்குத்து வரிசையிலும் எண்கள் 1 முதல் 9 வரை உள்ள நிரப்பப்பட வேண்டும். ஆனால் இந்த எண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது. இதே வரிசையில் 3 × 3, 4 × 4, .... என 1 லிருந்து 3 வரை, 1 லிருந்து 4 வரை என முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
(i) 3 × 3 சுடோகு
உங்களுக்குத் தெரியுமா?
சுடோகு
சுடோகு என்ற சொல்லானது ஜப்பானிய மொழியிலிருந்து வந்தாகும். இதில் 'சு' என்பதற்கு 'எண்' என்றும் 'டோகு' என்பதற்கு 'ஒற்றை' என்றும் பொருள். அதாவது இதில் உள்ள கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்கள் ஒரு தடவை மட்டுமே வருதல் வேண்டும். நவீன சுடோகுவைக் கண்டறிந்தவர் ஹாவர்டு கார்ன்ஸ்.
படம் 6.8 (அ) இல், 3 × 3 சுடோகுவில் முதல் இரண்டு கிடைமட்ட வரிசையை நிலையாக வைத்துக் கொண்டால், படம் 6.8 (ஆ) இல் காட்டியுள்ளவாறு, மூன்றாவது வரிசையை ஒரே ஒரு வழியில்தான் நிரப்ப இயலும்.
(ii) 3 × 3 சுடோகு
படம் 6.9 இல், 3 × 3 சுடோகுவில் முதல் கிடைமட்ட வரிசையில் உள்ள எண்களை நிலையாக வைத்துக் கொண்டால் இரண்டாவது கிடைமட்ட வரிசையை 2 3 1 அல்லது 3 1 2 என இரண்டு வழிகளில் நிரப்பலாம்.
மூன்றாவது வரிசையில் எந்த எண்ணும் நிரல் மற்றும் நிரையில் ஒரு முறைக்கு மேல் வரக் கூடாது. எனவே, 3 × 3 சுடோகுவில் மூன்றாவது வரிசையில் ஒரு வழியில் மட்டுமே நிரப்ப முடியும் என்பதை நினைவில் கொள்க.
(iii) 3 × 3 சுடோகு
முதல் வரிசையை எத்தனை வழிகளில் நிரப்பலாம்?
முதல் வரிசையைக் கீழ்க்கண்டவாறு 6 வழிகளில் நிரப்பலாம்
(1,2,3), (1,3,2), (2,1,3), (2,3,1), (3,1,2) மற்றும் (3,2,1).
(iv) ஆகையால், 3 × 3 சுடோகுவைப் பின்வருமாறு தீர்க்கலாம்.
நமக்கு 12 வழிகளில் விடைகள் கிடைக்கும்.
(iv) 4 × 4 சுடோகுவில் விடுபட்ட எண்களை நிரப்புக.
ஒரு தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. வேறு வழிகளில் நிரப்ப இயலுமா?
4 × 4 சுடோகுவில் ஒரு விதியைக் குறிப்பாக உற்று நோக்குக.
4 × 4 சுடோகுவில் நான்கு 2 × 2 கட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு 2 × 2 கட்டங்களிலும் 1 இலிருந்து 4 வரை எந்த எண்ணும் திரும்ப வராமல் இருத்தல் வேண்டும்.