நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாற்றங்களின் வகைகள் | 6th Science : Term 2 Unit 3 : Changes Around Us
மாற்றங்களின் வகைகள்
இயற்கையில் பல்வேறு நம்மைச் மாற்றங்கள் சுற்றி நிகழ்கின்றன.
சில மாற்றங்கள் மிக விரைவாக நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நிகழப்பல மணித்துளிகள், நாட்கள்
அல்லது வருடங்கள் தேவைப்படுகின்றன. சில மாற்றங்கள் தற்காலிகமானவை, சில மாற்றங்கள் நிரந்தரமானவை.
சில மாற்றங்கள் புதிய பொருட்களை உருவாக்குகின்றன, சில மாற்றங்கள் புதிய பொருட்களை உருவாக்குவதில்லை.
சில மாற்றங்கள் இயற்கையானவை, சில மாற்றங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. சில மாற்றங்கள்
விரும்பத்தக்க மாற்றங்களை உண்டாக்குகின்றன, சில மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்களை
உண்டாக்குகின்றன.
இதன் அடிப்படையில் நாம் மாற்றங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
❖ மெதுவான மற்றும் வேகமான
மாற்றங்கள்
❖ மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
❖ இயற்பியல் மற்றும் வேதியியல்
மாற்றங்கள்
❖ விரும்பத்தக்க மற்றும்
விரும்பத்தகாத மாற்றங்கள்.
இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்.
மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
செயல்பாடு 2: கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ
ஆகும் நேரம் / கால அளவைக் குழுவில் கலந்துரையாடுக.
மெதுவான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. (மணிகள்/நாட்கள்/
மாதங்கள்/ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
வேகமான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவே நேரத்தை எடுத்துக் கொள்கின்றன
(நொடிகள் / நிமிடங்கள்). இவை வேகமான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா:பலூன் வெடித்தல், கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல், காகிதம்
எரிதல்.
மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
செயல்பாடு 3: ஒரே காகிதத்தை கொண்டு படகு,
மற்றும் ஆகாய விமானம் ஆகியவற்றைச் செய்து பார்க்கவும். இச்செயல்பாட்டில் அதே காகிதத்தை
மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்கள் செய்யப் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து உருவங்கள்
மாறுபட்டிருந்தாலும் இச்செயல்பாட்டில் நிகழ்வது மீள் மாற்றமே என அறிகிறோம்.
செயல்பாடு 4: இவை எவ்வகையான மாற்றங்கள்
எனக் கூறுக.
அ)
எரியும் மெழுகுவர்த்தி
-------------------------------
ஆ)
ஊசியால் குத்தப்படும் பலூன்
---------------------------------
மீள் மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும்
தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள் மாற்றம் என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: தொட்டால் சிணுங்கி தாவரம் (தொடுதலுக்குத் துலங்குதல்),
ரப்பர் வளையம் நீளுதல், பனிக்கட்டி உருகுதல்.
மீளா மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும்
தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை
பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு: பால்
தயிராக மாறுதல், உணவு செரித்தல், மாவிலிருந்து இட்லி தயாரித்தல்.
செயல்பாடு 5: ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து இரு பாகங்களாக வெட்டவும்
ஒரு பாதியை, சிறு துண்டுகளாக வெட்டி உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
ஆப்பிளை
வெட்டியதால் அதன் இயல்பில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? இல்லை அதன் உருவம் மற்றும்
அளவு மட்டுமே மாறியது. இவ்வகை மாற்றம் இயற்பியல் மாற்றம் ஆகும்.
மற்றொரு
பாதி ஆப்பிளை அப்படியே மேசை மேல் சற்று நேரம் வைத்திருக்கவும். சிறிது நேரம் கழித்து
ஆப்பிள் பழத்தின் வெட்டிய பகுதியின் மேற்பரப்பில் பழுப்பு நிற திட்டுகள் தோன்றியிருப்பதை
காணலாம். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே
ஆகும். இவ்வகை மாற்றம் வேதி மாற்றம் ஆகும்.
இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின்
வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல்
மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
எடுத்துக்காட்டு: பனிக்கட்டி
உருகுதல், உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குவது, இரப்பர் வளையத்தினை இழுத்தல்.
நாம் இப்பொழுது நீரில் நிகழும் இயற்பியல் மாற்றங்களைப் பற்றி
புரிந்து கொள்ளலாம்.
நீரானது, திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல்
மூலமோ அல்லது குளிர்வித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். வெப்பப்படுத்தும்
போது ஆற்றல் அளிக்கப்படுவதும், குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுவதும் இம்மாற்றங்களுக்குக்
காரணமாகிறது.
நீரின் நிலைமாற்றங்களும் அவற்றின் பெயர்களும்.
மேலும் அறிந்து கொள்வோம்.
ஒரு
திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல்
எனப்படும். உதாரணம் : கற்பூரம்
மேலும் ஒரு இயற்பியல் மாற்றத்தை பற்றி நாம் புரிந்து கொள்ளலாம்
கரைதல்
திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு,
நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.
❖ கரைப்பான் என்பது கரைபொருளைக்
கரைக்கக்கூடிய பொருளாகும்.
❖ கரைபொருள் என்பது கரைப்பானில்
கரையக்கூடிய பொருளாகும்..
❖ கரைபொருள் கரைப்பானில்
கரையும் போது கரைசல் உண்டாகிறது
கரைபொருள்
+ கரைப்பான் -> கரைசல்
நீர்
ஒரு பொதுக் கரைப்பான். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
ஒரு குவளை நீரும் ஒரு குவளை சர்க்கரை கரைசலும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக / ஒன்று போல் இருப்பதைக் காண்கிறீர்களா?
செயல்பாடு 6:
ஒரு கண்ணாடிக் குவளையில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
நீ என்ன காண்கிறாய்?
---------------------------------------------------------
சேர்க்கப்பட்ட சர்க்கரை என்ன ஆனது?
-------------------------------------------------------
தற்போது சர்க்கரை எங்குள்ளது?
---------------------------------------------------------------
மேற்கண்ட கரைசலில் கரைபொருள் எது?
----------------------------------------------------------
மேற்கண்ட கரைசலில் கரைப்பான் எது?
------------------------------------
வேதியியல் மாற்றங்கள்
பொருள்களின் வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேதியியல்
மாற்றங்கள் எனப்படும். வேதியியல் மாற்றங்கள் புதிய பொருள்களை உண்டாக்குகின்றன.
எடுத்துக்காட்டு: மரம் எரிதல், சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள்
கருமையாதல், மற்றும் இரும்பு துருப்பிடித்தல்.
செயல்பாடு 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள
படங்களைப் பார்த்து, இயற்பியல் வேதியியல் மாற்றங்களை இனங்கண்டு எழுதவும்
விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்
செயல்பாடு
8: கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து, அவை விரும்பத்தக்க/ விரும்பத்தகாத மாற்றங்கள்
எனக் கண்டறியவும்.
விரும்பத்தக்க மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தரும் அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்காத,
நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: காய் கனியாதல், பருவ நிலை மாற்றம்,
தாவரங்கள் வளருதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்.
விரும்பத்தகாத மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்ககூடிய,
நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் விரும்பதகாத மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: காடுகள்
அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்.
இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
இயற்கையான மாற்றங்கள்
இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட
மாற்றங்கள் இயற்கையான மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: புவியின்
சுழற்சி, மழை பெய்தல், அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின்
செயல்பாடு
9:
கீழ்காணும் படங்களைப் பார்த்து அவை எவ்வகையான மாற்றங்கள் எனக் கண்டறியவும்.
வெவ்வேறு நிலைகள்.
மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள்
மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால்
ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள்
தன்னிச்சையாக நிகழாது.
எடுத்துக்காட்டு: சமைத்தல்,
காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடங்கள் கட்டுதல்.