Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | கோட்டுச் சட்டங்களின் வகைகள்

புவியியல் - கோட்டுச் சட்டங்களின் வகைகள் | 12th Geography : Chapter 10 : Map Projection

   Posted On :  27.07.2022 06:17 pm

12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்

கோட்டுச் சட்டங்களின் வகைகள்

கோட்டுச் சட்டங்கள் உருவாக்கும் முறை ,விரிவாக்கப்படும் பரப்பின் அடிப்படையில் சட்டங்களை வகைப்படுத்துதல் ,கோட்டுச்சட்ட பண்புகளின் அடிப்படையில் கோட்டுச் சட்டத்தினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். ,ஒளிவரும் இடத்தின் அடிப்படையில் கோட்டுச்சட்டத்தின் வகைகள்

கோட்டுச் சட்டங்களின் வகைகள்

கோட்டு சட்டங்கள் கீழ்கண்டவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன:

• உருவாக்கும் முறை

• விரிவாக்கப்படும் பரப்பு

• பண்புகள்

• ஒளிவரும் இடம்

 

1. கோட்டுச் சட்டங்கள் உருவாக்கும் முறை

இது இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

அ) இயலுரு தோற்றக் கோட்டுச் சட்டம் (Perspective Projections)

இவ்வகை கோட்டுச் சட்டங்கள் புவியின் வெளிச்சப் பகுதியிலிருந்து விழும் நிழலின் உதவியுடன் விரிவாக்கத் தக்க பரப்பாக உருவாக்கப்படுகின்றன.

ஆ) இயலுரு தோற்றமற்ற கோட்டுச் சட்டம் (Non perspective projections)

விரிவாக்கக் தக்க பரப்பு புவியை உள்ளடக்கியதாக அனுமானிக்கப்படுகிறது. கணித முறையை பயன்படுத்திக் கோட்டுச் சட்டங்கள் வரையப்படுகின்றன.


2. விரிவாக்கப்படும் பரப்பின் அடிப்படையில் சட்டங்களை வகைப்படுத்துதல்

விரிவாக்கப்படும் பரப்பின் அடிப்படையில் கோட்டுச் சட்டத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை,

1 உருளைக் கோட்டுச் சட்டம் (Cylindrical Projection)

ஒரு கோளத்தை ஒரு உருளையினால் மூடப்பட்டிருப்பது (உறைபோல்) போல் காட்சிப்படுத்துவது உருளைக் கோட்டுச் சட்டம்.

இந்த கோட்டுச் சட்டத்தில் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் நேர் கோடுகளாக உள்ளன.

இதில் உருளையின் மீதான புவிடைக் கோட்டின் நீளமானது புவியின் புவியிடைக் கோட்டிற்கு சமமாக உள்ளதால் இவை புவியிடைக் கோட்டுப் பகுதிகளை காட்டுவதற்கு உகந்தாக உள்ளன. இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

i. இயல்பான உருளை கோட்டுச்சட்டம் (Normal Cylindrical Projection)

உருளையின் தொடுகோடானது புவியிடைக் கோட்டிற்கு அருகில் இருந்தால் அது இயல்பான உருளை கோட்டுச் சட்டமாகும். சம் செவ்வக கோட்டுச் சட்டம், மெர்க்கேட்டர் கோட்டுச்சட்டம், லாம்பர்ட் சம்பரப்பு உருளை கோட்டுச் சட்டம், கால்ஸ் உருவ மொத்த உருளை கோட்டுச்சட்டம் மற்றும் மில்லர் உருளை கோட்டுச் சட்டம் போன்றவை இயல்பான உருளை கோட்டுச் சட்டத்தில் அடங்கும்.

ii. குறுக்கு உருளை கோட்டுச் சட்டம் (Transverse cylindrical Projection)

உருளையின் தொடுக்கோடானது தீர்க்கக் கோட்டிற்கு அருகில் இருந்தால் அவை குறுக்கு உருளை கோட்டுச் சட்டமாகும். இவற்றில் கேசினி கோட்டுச் சட்டம் (Cassini Projection), மெர்க்கேட்டர் குறுக்கு கோட்டுச்சட்டம், சம்பரப்பு, குறுக்கு உருளைச் சட்டம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மெர்க்கேட்டர் குறுக்கு கோட்டுச் சட்டம் போன்றவை அடங்கும்.

iii. சாய்ந்த உருளை கோட்டுச்சட்டம் (Oblique Cylindrical Projection)

உருளையின் தொடு கோடானது கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்தால் அது சாய்ந்த உருளை கோட்டுச் சட்டமாகும். இதில் சாய்ந்த மெர்க்கேட்டர் கோட்டுச்சட்டம் அடங்கும்.

2. கூம்புக் கோட்டுச் சட்டம் (ConicalProjection)

• ஒரு கோளத்தின் மீது கூம்பு வைக்கப்பட்டது போல் கூம்புக் கோட்டுச் சட்டம் காட்சியளிக்கும் மற்றும் சில அட்சரேகைகளில் தொடு கோடானது இருக்கும்.

• அட்ச தீர்க்க வலைப்பின்னல் கூம்புக்குள் முனைந்த பின் தீர்க்க கோடுகளில் ஒன்றின் வழியே கூம்பானது வெட்டப்பட்டு விரிவடைகிறது. அட்சக்கோடுகள் துருவத்தில் வளைவுகள் போன்றும் தீர்க்க கோடுகள் ஒரே புள்ளியில் குவியும் நேர்கோடுகளாகவும் தோற்றமளிக்கின்றன.

• வட மற்றும் தென் கோளத்தில் ஏதேனும் ஒரு கோளத்தை மட்டும்தான் குறிக்க முடியும். கூம்புக் கோட்டுச் சட்டங்கள் மத்திய அட்சரேகைப் பகுதிகளை காட்டுவதற்கு பொருத்தமானது.

• கூம்புக்கோட்டுச் சட்டமானது இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை

I. தொடுக்கோடு கூம்புக்கோட்டுச்சட்டம்

II. வெட்டுக்கோடு கூம்புச்கோட்டுச் சட்டம்

I. தொடுகோடு கூம்புக்கோட்டுச்சட்டம்

கூம்பானது ஏதேனும் ஒரு அட்சரேகையின் மீது தொடுக்கோடாக இருந்தால் அது தொடுக்கோட்டு கூம்புக் கோட்டுச்சட்டமாகும்.

II. வெட்டுகோடு கூம்புக் கோட்டுச்சட்டம்

கூம்பானது புவியின் வளைவை மூடும் அளவுக்கு பெரிய அளவில் இல்லையென்றால் இது புவியை இரண்டு அட்சங்களில் குறுக்காக வெட்டுகிறது.

3. உச்சிக் கோட்டுச் சட்டங்கள் (Zenithal Projection)

• கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் காணப்படும் சமதள தாள் தொடுகோடாக காட்டப்படுகிறது.

• இந்த தாள் தொடுகோட்டுப் புள்ளியை வட்ட நிலவரைபடத்தின் மையமாக கொண்டிருக்கும். அங்கு தீர்க்கக் கோடுகள் நேர்கோடுகளாக மையப் பகுதியை நோக்கி செல்லும். அட்சக் கோடுகள் ஒற்றை வட்டமாக தோற்றமளிக்கும்.

• துருவப்பகுதிகளைக் காட்டுவதற்கு உகந்ததாக உள்ளது.

 

உச்சிக் கோட்டுச்சட்டத்தின் அம்சங்கள் (Aspects of Zenithal Projections)

புவியிடைக்கோட்டு உச்சிக்கோட்டுச் சட்டம் (Equatorial Zenithal)

தொடுக்கோட்டின் கோணமானது புவியிடைக் கோட்டின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்தால் அது புவியிடைக்கோட்டு உச்சிக்கோட்டுச் சட்டமாகும்.

சாய்வான உச்சிக்கோட்டுச்சட்டம் (Oblique zenithal Projection)

துருவம் மற்றும் புவியிடைக் கோட்டுப்பகுதிகளுக்கு இடையில் தொடுகோட்டின் கோணம் இருந்தால் அது சாய்வான உச்சிக்கோட்டுச் சட்டமாகும்.

துருவ உச்சிக்கோட்டுச் சட்டம் (Polar Zenithal Projection)

தொடுகோட்டின் கோணமானது ஏதேனும் ஒரு துருவத்தில் இருந்தால் அது துருவ உச்சிகோட்டுச்சட்டமாகும்.

 

3. கோட்டுச்சட்ட பண்புகளின் அடிப்படையில் கோட்டுச் சட்டத்தினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

சமபரப்புக் கோட்டுச் சட்டங்கள் (Equal Area Projection)

சமபரப்புக் கோட்டுச் சட்டத்தினை  ஹோமோலோகிராபிக் (homolographic Projection) கோட்டுச் சட்டம் என்றும் அழைக்கலாம். புவியின் பல்வேறு பகுதிகளை சரியாக காட்டுவதற்கு சமபரப்புக் கோட்டுச் சட்டம் உதவுகிறது.

உண்மை வடிவ கோட்டுச்சட்டங்கள் (True Shape Projection)

உண்மை வடிவ கோட்டுச் சட்டத்தினை உருவ மொத்த கோட்டுச்சட்டம் என்பர். புவியின் பல்வேறு பகுதிகளின் வடிவத்தினை சரியாக காட்ட உதவுகிறது.

உண்மை அளவை அல்லது சமதூர கோட்டுச் சட்டங்கள் (True scale or equidistant projection)

உண்மையான அளவையை கொண்டுள்ள கோட்டுச் சட்டங்களே உண்மை அளவை கோட்டுச் சட்டங்கள் ஆகும். ஆனாலும், எந்த ஒரு கோட்டுச் சட்டமும் உண்மையான அளவையை முழுவதுமாக காட்டுவது இல்லை. உண்மை அளவையை சில அட்ச அல்லது தீர்க்கக் கோட்டில் மட்டும்தான் காட்ட முடியும்.

 

4. ஒளிவரும் இடத்தின் அடிப்படையில் கோட்டுச்சட்டத்தின் வகைகள் (Classification based on Position of light source)

புவியை பல்வேறு அமைவிடங்களில் ஒளியூட்டும் ஒளி ஆதாரங்களைக் கொண்டு பல்வேறு கோட்டுச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை:

1. நோமோனிக் உச்சிக்கோட்டுச் சட்டம் (Gnomonic Projection) கோளத்தின் மையத்திலிருந்து ஒளி வருவது நோமோனிக் கோட்டுச் சட்டம்.

2. உருவ மொத்த உச்சிக்கோட்டுச் சட்டம் (Stereographic Projection) ஒளியின் ஆதாரத்தை புவியின் விளிம்பில் ஒரு புள்ளிக்கு எதிரே முழுவதுமாக வைக்கும் போது அந்த புள்ளியில் விரிவாக்கப்படும் பரப்பானது கோளத்தைத் தொடுகிறது.

3. முறைப்படியான உச்சிக்கோட்டுச் சட்டம் (Orthographic Projection) ஒளிக்கதிர்களை கோளத்தின் முடிவற்ற ஒரு பகுதியிலிருந்து வைத்து ஒரு புள்ளிக்கு எதிரே முழுவதுமாக வைக்கும்போது அந்த புள்ளியில் விரிவாக்கப்படும் பரப்பானது கோளத்தைத் தொடுகிறது.

Tags : Geography புவியியல்.
12th Geography : Chapter 10 : Map Projection : Classification of Map Projections Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள் : கோட்டுச் சட்டங்களின் வகைகள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்